பச்சை உடுத்திய மலைகளின் தேசம்
பாழும் வெள்ளத்தால் போனதே மோசம்
எங்கு பார்க்கினும் சரிவும் பரிவும்
ஏங்கும் மக்களின் அழுகுரல் அலரல்
வீடுகள் நீரில் நகர்ந்து போனதும்
வீதியில் படகுகள் நீந்திப்போனதும்
வரலாற்றில் மறையா மாபெரும் வியப்பு
மலையாள தேசத்தின் மாபெரும் இழப்பு
கனவுகள் அடுக்கி கட்டிய வீடுகள்
கண்முன் கரைந்தே காணாமல் போவதும்
உறவுகள் பிரிவுகைள் அறியா எங்களை
ஊர் பேர் தெரியா நிலையேன ஆக்கிய
காற்றே, மழையே என்ன தான் கோவம்
காலம் மறவாத வரலாற்றுத் தாகம்
கொட்டியே தீர்த்தாயே போதாதென்றா.?
கொள்ளா நீரால் அணைகளை உடைத்தாய் ..!
உயிரேன மதித்த மண்ணைக் கரைத்தாய்
மண்ணோடு மரங்கள் வீடுகள் கரைத்தாய்
உன் எண்ணம் எதுவென அறியா நாங்கள்
உன்னை நம்பியே செயலற்றுக் கிடந்தோம்
கொட்டும் மழையோ குறையவும் இல்லை
கொல்லும் உன் குணம் மாறவும் இல்லை
நம்பிய நாங்கள் நடுத்தெருவில் இன்று
நாடுகள் போடும் பிச்சையைக் கொண்டு
உறவென உதவும் மாநில நிதிகள்
உயிரென மதித்திடு மக்களின் நிதிகள்
உயிர் தனை காத்திட உதவிடும் பாரு
மொத்தமாய் எங்களை அழித்திடும் நோக்கமா
வட நாட்டு நதிகளின் வரம்பில்லா தாக்கமா
தண்ணீர் தானே என்றவர் எல்லாம்
தன்னை மறந்து தலைக்கணம் உடைந்தார்
சுயநலம் இன்றியே போகவும் சொன்னார்
எனதென்று எனதென்று சொன்ன காலம் போய்
எதற்கென்ற நிலையை தந்துவிட்டாயே தாயே. .
காவிரித்தாயே ..
கரைபுரண்டாயே ..
ஓடி ஓடியே கடல் புகவா. .???
கோவம் குறைந்தாயோ
அமைதி கொண்டாயோ
ஆழ் கடல் அதிலே காவிரித் தாயே அமைதி கொண்டாயோ. .
காவிரி காவிரி கடலானால் கடல். .
💐💐💐💐மழலைக்கவி 💐💐💐💐💐💐💐
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக