வியாழன், 12 ஆகஸ்ட், 2021

பத்தாம் வகுப்பு தமிழ் (இயல் -1)பாடல் வரிகள் கொண்டு வினாவுக்கு விடை.

 இயல் -1 (1) அன்னை மொழியே


1. "அன்னை மொழியே அழகார்ந்த செந்தமிழே! முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே! கன்னிக்குமரிக் கடல் கொண்ட நாட்டிடையில் மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!''


1.இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

அ) கனிச்சாறு 

ஆ)கொய்யாகனி

 இ) சிலப்பதிகாரம்

ஈ)கம்பல்ராமாயணம்


2. இப்பாடல் ஆசிரியரின் பெயர்

அ) திருமூலர்

ஆ) பாரதியார்

இ)கம்பர்

ஈ)பெருஞ்சித்திரனார்


3. செந்தமிழ் - இலக்கணக்குறிப்பு தருக.

அ) வினைத்தொகை 

ஆ) எண்ணும்மை

இ) பண்புத்தொகை

ஈ) உம்மைத்தொகை


4. முன்னைக்கும் முன்னை பொருள் தருக.

அ) கடமைக்கும் 

கடமை 

ஆ)உண்மைக்கு உண்மை

இ) புதுமைக்கும் புதுமை

ஈ) பழமைக்கும் பழமை


2."தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே! மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!


முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!''


1. இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?

அ) சிலப்பதிகாரம் 

ஆ)திருக்குறள்

இ)கனிச்சாறு

ஈ)குண்டலகேசி


2.இப்பாடலின் ஆசிரியர் யார்?

அ) கம்பர்

ஆ) பாரதியார்

இ) திரு.வி.க.

ஈ) துரை.மாணிக்கம்


3. பாடலில் இடம் பெற்றுள்ள பெருங்காப்பியங்கள் யாவை?

அ) சிலப்பதிகாரம், குண்டலகேசி 

ஆ) சிலப்பதிகாரம் மணிமேகலை

இ) குண்டலகேசி, 

மணிமேகலை

 ஈ) சீவகசிந்தாமணி

குண்டலகேசி 

4.எண் தொகையே - பிரித்து எழுதுக.


அ) எண்+ தொகையே 

ஆ) என்+தொகை

இ) எள்+தொகையே

ஈ) எட்டு +தொகை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...