வியாழன், 10 செப்டம்பர், 2020

Bt தமிழ் பணிவரன்முறை

 💥💥💥💥💥💥💥💥💥💥 *பள்ளிக் கல்வி - 2015-16ம் கல்வி ஆண்டு - 28.11.2017 அன்று பணி நியமனம் பெற்ற 79 தமிழ் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பொதுவான பணிவரன்முறை செய்து பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!* 

☝️



வெள்ளி, 4 செப்டம்பர், 2020

ஆசிரியர் தின வாழ்த்து மடல்

 



ஆசிரியர்தின வாழ்த்துமடல்


கற்பித்தல் பணியில் 

அயராது உழைத்து

சேவை குணத்தால் 

வரலாறு படைத்திடும்

அறிவில் சிறந்த 

ஆசிரியச்சான்றோரே !!

உங்கள் சேவை 

தேவை! தேவை !

உழைக்கும்  மக்களின் 

தலைமுறை மாற்றம் 

நேர்வழி உயர 

கல்வியே  ஆயுதம்

பண்பில் சிறந்து 

அறிவால் உயர்ந்து 

வெற்றிகள் குவித்து   

வரலாறு படைத்திடும் 

 இக்கனவுகள் பலித்திடும்

உம் துணையுடனே !

வெற்றியின் படிகளை 

விரும்பியே சுமந்து 

மாணவர் சமுதாயம்  

மாற்றம்  காணவும் 

புது ஏற்றம்  காணவும் 

அயராது உழைத்திடும் 

அறிவில் சான்றோரே! 

உங்கள் உழைப்புக்கும் 

உதவும் பண்புக்கும்

பொறுமை குணத்துக்கும்

இன்னும் பிறவும் 

ஈடு சொல்ல ஏதுமில்லை 

நன்றி சொல்ல  வார்த்தையில்லை  

தொடரட்டும் உம் பணி 

மலரட்டும் புது மாற்றம் இனி 

கல்வியில்  சிறந்து

 உயர்வுகள் காண

ஓயாது உழைத்திடும் 

ஆசிரிய சமுதாயத்திற்கு

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் .

 


இனிய ஆசிரியர்தின நல்வாழ்த்துகள்


        மழலைக்கவி


10-ஆம் வகுப்பு (இயல் -1)மாதிரி தேர்வு -1 (One mark)

 

10-ஆம் வகுப்பு தமிழ்

 (இயல் -1)

மாதிரி தேர்வு -1

 (ஒருமதிப்பெண்)


 தேர்வு விளையாட்டில் 

கலந்துகொள்ள 


இணைப்பை தொடவும்.   https://quizizz.com/join/quiz/5f524dee47460b001db4a8bd/start?studentShare=true

வியாழன், 3 செப்டம்பர், 2020

பத்தாம் வகுப்பு இயல் -3

 பத்தாம் வகுப்பு இயல்-3

 பத்தாம் வகுப்பு இயல் -3

ஒருமதிப்பெண் 

quiz game பத்தாம் வகுப்பு தமிழ் . நூலும் ஆசிரியரும்


பத்தாம் வகுப்பு 
 தமிழ் 

கவிதைப்பேழை

(மனப்பாடப்பகுதி)


 *நூலும் -ஆசிரியரும்*


 என்ற தலைப்பில் மாணவர்களுக்கு பயன்படும் வகையில் விளையாட்டு முறை தேர்வு ஒன்றை தயார் செய்துள்ளேன்.

இணைப்பை தொடுங்கள் விளையாடுங்கள்

கிளிக் செய்யவும்

https://quizizz.com/join/quiz/5f4ff4fd2f5e55001c1e6eaa/start?studentShare=true

புதன், 2 செப்டம்பர், 2020

வந்து போன மழை தந்து போனவை

 

வந்து போன மழை. .   

தான். . ! 

வந்து போன அடையாளமாய் 

தந்து போனவை . .!   

தவளைகள் இசைத்து மகிழ  

வயல்வெளிகள் நிறைய நீரை. .! 

நண்டுகள் வளையிட 

நனைந்த மண்குழைவை. .! 

கொக்குகள் தவமியற்ற 

ஏரியில்  நீரை. .! 

வாத்துகள் நீந்தி மகிழை 

குளங்களில் தண்ணீரை.  .!

மரங்கள் துளிர்த்திட 

உயிர்த்துளியை.  .!

மாடுகள் மேய்ந்திட 

புல்வெளியை.  .!

பயிர்கள் செழித்திட 

பசுந்தேனை.  .!

மனிதர்கள் உயிர்வாழ  

உயிர்நீரை. .!



மழலைக்கவி 

2-09-2020

சிறார்திரைப்படம்

 Download  Click here