1. தென்மொழி ,தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை ஊட்டியவர் யார் ?
அ)பாவலரேறு பெருஞ்சித்திரனார்
2.வேர்க்கடலை ,மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றை குறிக்கும் பயிர் வகை.
ஆ) மணி வகை
3."கேட்டவர் மகிழ பாடிய பாடல் இது" இத்தொடர் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே
ஈ) பாடல்; கேட்டவர்
4.'விருந்தினரை பேணுவதற்கு பொருள் தேவைப்பட்டதால் தன் கருங்கோட்டு சீறியாழைப் பணயம் வைத்து விருந்தளித்தான்' என்கிறது புறநானூறு இச்செய்தி உணர்த்தும் விருந்து போற்றிய நிலை
ஆ)இன்மையிலும் விருந்து
5.பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடும் மென்பொருள் எது
இ) இலா
6.மாபாரதம் தமிழ்ப் படுத்தும் மதுராபுரிச் சங்கம் வைத்தும் என்னும் சின்னமனூர்ச் செப்பேட்டுக் குறிப்பு உணர்த்தும் செய்தி
அ) சங்க காலத்தில் மொழிபெயர்ப்பு இருந்தது
7.இடைக்காடனாரின் பாடலை இகழ்ந்தவர் யார்? இடைக்காடனாரிடம் அன்பு வைத்தவர் யார்?
ஈ) மன்னன் இறைவன்
8."இங்கு நகரப் பேருந்து நிற்குமா?" என்று வழிப்போக்கர் கேட்பது எவ்வகை வினா ? "அதோ அங்கே நிற்கும்" என்று மற்றொருவர் கூறுவது எவ்வகை விடை
இ) அறியா வினா, சுட்டு விடை
9.மலர்கள் தரையில் நழுவும் எப்போது?
ஆ) தளரப் பிணைத்தால்
10).கோசல நாட்டின் கொடை இல்லாத காரணம் என்ன?
ஈ) அங்கு வறுமை இல்லாததால்
11.'பெரிய மீசை சிரித்தார்' வண்ணச் சொல்லிற்கான தொகையின் வகை
ஆ) அன்மொழித்தொகை
பாடலைப் படித்து பின்வரும் வினாக்களுக்கு விடையளிக்க
செம்பொ னடிச்சிறு கிங் கிணியோடு சிலம்பு கலந்தாடத்
திருவரை யரைஞா ணரைமணி யொடு மொழி திகழரை வடமாடப்
12.இப்பாடல் இடம் பெற்றுள்ள நூல்
ஈ) முத்துக்குமாரசாமி பிள்ளைத்தமிழ்
13. குண்டலமும் குழைக்காதும் இலக்கண குறிப்பு தருக
அ) எண்ணும்மை
14.செங்கீரை பிரித்து எழுதுக ?
இ))செம்மை + கீரை
15.'பண்டி' பொருள் தருக
இ) வயிறு
16.தற்கால உடைநடையில் சிலேடை அமையும் நயத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு தருக.
காலை நேரம் ஒரு நிகழ்ச்சிக்காகத் தொடர்வண்டியில் வந்து இறங்கினார் தமிழறிஞர் கி.வா. ஜகந்நாதன். அவரை மாலையிட்டு வரவேற்றனர். அப்போது கி. வா .ஜகந்நாதன் "அடடே !காலையிலேயே மாலையும் வந்துவிட்டது" என்றார். எல்லோரும் அந்தச் சொல்லின் சிலேடைச் சிறப்பை மிகவும் சுவைத்தனர்.
17. விடைக்கேற்ற வினா அமைக்க
அ) சிந்துக்குத் தந்தை என போற்றப்படுபவர் யார்?
ஆ) இலக்கிய திறனாய்வு கொள்கையினை நாம் எவற்றின் மூலம் பெற்றிருக்கிறோம்?
18. விருந்தினரை மகிழ்வித்துக் கூறும் முகமும் சொற்களை எழுதுக
முகமன் சொற்கள்
- வாருங்கள்
- அமருங்கள்
- நலமாக இருக்கிறீர்களா
- உணவு உண்ணுங்கள்
- வீட்டில் அனைவரும் நலமா?
19. உலக காற்று நாள் விழிப்புணர்வுக்கான இரண்டு முழக்கத் தொடர்களை எழுதுக
- காற்று நமக்கு உயிர்.
- நல்ல காற்றை சுவாசித்து நீண்ட வாழ்நாள் பெருவோம்.
- சுற்றுச்சூழலை மாசு படுத்தாமல் இருப்போம்.
20. செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன?
செயற்கை நுண்ணறிவு என்பது ஒரு மென்பொருள் அல்லது கணினிச் செயல்திட்ட வரைவு எனலாம்.
21. 'முயற்சி' எனத் தொடங்கும் திருக்குறளை பிழையின்றி எழுதுக.
முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
22.உடுப்பதூஉம் உண்பதூஉம் காணின் பிறர் மேல்
மடுக்காண் வற்றாகும்---- கீழ் இக்குறளில் அமைந்துள்ள அளபெடையின் வகையை சுட்டி அதன் இலக்கணம் தருக?
உடுப்பதூஉம் உண்பதூஉம் என்ற சொல்லில் வந்துள்ள அளபெடை இன்னிசை அளபெடை
இன்னிசை அளபெடையின் இலக்கணம்
செய்யுளில் ஓசை குறையாத போதும் இனிய ஓசைக்காக குறில் நெடில் ஆகி அளபெடுப்பது இன்னிசை அளபெடை ஆகும்.
23. கீழ்காணும் சொற்களின் கூட்டப் பெயர்களை கண்டுபிடித்து எழுதுக?
அ) புற்கட்டு
ஆ)ஆட்டு மந்தை
24.கிளர்ந்த
கிளர் -பகுதி
த்-சந்தி --த் -ந் ஆனது விகாரம்
த்-இறந்தகால இடைநிலை
அ-பெயரெச்ச விகுதி
25. பழமொழிகளை நிறைவு செய்க
அ) உப்பிட்டவரை உள்ளவரை நினை
ஆ) விருந்தும் மருந்தும் மூன்று நாள்
26.26. கொடுக்கப்பட்டுள்ள இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைக்க.
அ) கொடு -கோடு
உன் அளவுகோளைக் கொடுத்தால் கோடு போட்டுவிட்டு தந்து விடுவேன்.
ஆ) விதி- வீதி
மதுரை வீதியில் கோவலன் பிடிபட வேண்டும் என்பது அவனது விதி
27. வல்லின ஒற்றை இட்டும் நீக்கியும் எழுதுக
காகத்திற்குக் காது உண்டா? அதற்குக் காது கேட்குமா
28. அகராதியை காண்க
அ) மன்றல்-திருமணம்
ஆ) மருள்-மயக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக