வியாழன், 8 செப்டம்பர், 2022

ONAM KAVITHAI WISHES

 ஓணம் (அறுவடைத்திருவிழா)

           ஓணா சம்சைகள்


கேரள தேசம் பசுமையின் தேசம்

பசுமையின் போர்வை விலகாத மாநிலம் 

பூலோகத்தின் சொர்க்கவாசல் 

 

கேரள ஓணம் கேட்கவா வேண்டும்

உலகமே வியந்து பார்க்கும் 

பத்து நாள் திருவிழா

அறுவடைத்திருவிழா..


கேரள கர்ணன் 

கொடைவள்ளல் மாபலி 

கொடுக்கும் கர்வத்தால் 

மூன்றடி வழங்க 

உலகுயர் வாமனன்

இரண்டடி அளந்தவராய்

மூன்றாம் அடி வேண்ட

தன் தலையையே கொடுத்த தலைவன் 

மாபலி மன்னன்...


மறவாமல் ஆண்டுதோறும் 

மக்களை சந்திக்க வந்திடும் நிகழ்வை

மாபெரும் விழாவாய்

மாபலி மன்னன் மகிழும் வகையில்

பத்துநாள் கொண்டாடும் 

மகிழ்வான விழா 

மலையாளிகளின் விழா ஓணம்..


மஞ்சள் பூக்கொண்டு

வட்டப் பூக்கோலமிட்டு

கொண்டாடும் "அத்தம்"

முதல்நாள் விழாவாகும்..


வீட்டை தூய்மையாக்கி

புதுமையினால் அழகு கூட்டி

பல வண்ணப் பூக்கூட்டி

கோலமிட்டு கொண்டாடும்

"சித்திரை" இரண்டாம் நாள் ..


இல்லத்தில் ஒளி பரவும் 

"ஜோதி" என்ற மூன்றாம் நாள் 

புதுப்பொருட்கள் பல வாங்கி

பொங்கிடும் மகிழ்வுடனே..

பெண் புடைவை 

முண்டும், செட்டு முண்டும்

ஆண் உடையோ 

முண்டும் ,ஜிப்பாவும் -என

அழகழகாய் பார்த்து வாங்கி

உடுத்தியும் உறவுகளுக்கு பரிசளித்தும்

கொண்டாடும் திருநாளாம் ஜோதி..


பாம்பு வடிவ படகு போட்டியும்

பட்டு உடுத்தி கோலமிட்டும்

ஓணசந்தா விழாக்களுமாய்

நான்காம் நாள் "விசாகம்"..


புலிகளுக்கே புலிவேடம் 

ஆண்களெல்லாம் ஆட்டமாடி

புலியாட்டக் கொண்டாட்டமும்


முண்டுப் புடவையோடு 

முழுநிலவுப் பெண்கள் எல்லாம் 

வட்டமாய் கோலமிட்டு 

நின்றாடி நெலிந்தாடி

வட்ட வட்ட ஆட்டமாடி கொண்டாடும்

திருவாதிரிக்களியாட்டம்

கைகொட்டும் களியாட்டம் 

பாம்புப் படகுகளை எல்லாம்

கண்டு மகிழும் ஐந்தாம் நாள் "அனிலம்"


உறவுகளைக் கொண்டாடி 

உறவுகளோடு கொண்டாடி

திருவிழாக் கொண்டாட்டம்

"திருகேட்டை" ஆறாம் நாள் ..


கோவில் கொண்டாட்டம்

ஏழாம் நாள் 

ஓண சத்யா நிகழ்வோடு

"மூலம் "நாள் விழா கொண்டாட்டம்


எட்டாம் நாள் "பூராடம்"

மாபலியும் வாமனனும்

மன்னனும் கடவுளும் 

உயிர்கொண்ட உருவமாய்

அலங்காரச் சிறப்புடனே

பூஜை அறை கோயில் கொல்லும்

புனிதமான பூராடம் எட்டாம் நாள்..


ஒன்பதாம் நாள் சிறு ஓணம் 

உறவெல்லாம் ஊர் கூடி

உத்திராடக் கொண்டாட்டம்

உச்சம் தொடும் நாள் தானே 

பத்தாம் நாள் திருவோணம்..


கும்மியடித்துக் கொண்டாடி

வட்டம்சுற்றி களியாடி

கைகொட்டிக் களியாடி

திருவாதிரக்களியாட்டம்

பெண்கள் எல்லாம் சுற்றியாடி

மகிழ்வதோடு நில்லாமல்

இறைவனுக்கு படையல் போட 

தலைவாழை இலைபோட்டு

சக்ரஉபேதி..காலன் ..ஓலன்..

கடலப்பிரதமன்- என (24 வகை உணவுப்படையல்)

இலைமுழுதும் உணவால் நிரம்ப

பார்க்கையிலே மனம் நிரம்ப 

மண்ணுலகம் வந்த 

வாமனக் கடவுளும்,

மாபலி மன்னனும் 

அறுவடைப்படையல்

விருந்தில் மகிழ்ந்திருக்க

பெண்கள் எல்லாம் நடனம் ஆடி

 கைகொட்டி வட்டமாய் ஆட்டமாடி

கொண்டாடும் திருநாள் அறுவடைப்பெருநாள்..


பாரம்பரிய நடனமும் ,

பாசம்மிகு உறவுகளும்-என

சொர்க்கத்தின் நிகழ்ச்சியை

சொல்லிமாலாத மகிழ்ச்சியை

சொல்லியே மாலாது..


பூலோக சொர்க்கவாசல்

கேரளாவில் தொடங்குகிறது போலும்

கொண்டாடி மகிழ்வோம் 

திருவோணத்திருவிழாவை..

அறுவடைப்பெருவிழாவை..


             அணைவருக்கும்

        இனிய 

             ஓணம்திருநாள் 

       வாழ்த்துகள்


வாழ்த்துகளுடன் மழலைக்கவி 

மழலைக்கவி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here