வெள்ளி, 23 டிசம்பர், 2022

10TH TAMIL ASSIGNMENT AFTER HALFYEARLY EXAM . தமிழ் ஒப்படைப்பு





 

தமிழ் ஒப்படைப்பு

பத்தாம் வகுப்பு

பகுதி -1

அ. நாட்டுப்புற மக்களால் நிகழ்த்தபட்டு வரும் கலை எது

ஆ. பிள்ளை. தமிழ் எத்தனை வகைப் படும்?

இ. எந்தப் பாடல்கள் சந்தநயம் மிக்கவை?

ஈ.எந்த ஆண்டில் இந்திய வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கத்தக்க புனித நாளாகும் ?

உ.உழுவோர் உலகத்தார்க்கு என்னவாகப் போற்றபட்டனர்?

2

அ.உப்பில்லாப் பண்டம் குப்பையிலே

ஆ.ஒரு பானை சோற்றுக்கு ஒருசோறு பதம்

இ.உப்பிட்டவரை உள்ளளவும் நினை

ஈ.விருந்தும் மருந்தும் மூன்று நாள்

உ.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

3-

அ.சிலை-சீலை சிலையைத் திரைச்சீலையால் மறைத்தனர்

ஆ. தொடு தோடு: தொடுவுணர்வினால் தோடு திருடுபோவதை உணர்ந்தான் .

இ. மடு-மாடு :மடுவில் மாடு நீர் பருகியது

ஈ .மலை-மாலை மலையில் மாலை வேலை சுகம்

உ.வளி-வாளி- வளி மிகுந்தால் வாளி உருண்டது.

ஊ.விடு வீடு - உலகப்பற்றுகளை விடு; வீடுபேறு  அடையலாம்

4

அ. கொடுகோடு என் நண்பன் பொருள் கொடுத்ததால்,  என் வறுமைக்கோடு

ஆ.கொள் கோள் வாழ்வில் நம்பிக்கை கொள்வதால் குறிக்கோளை அடையலாம்.

இ.சிறு - சீறு சிறு தவறுகளைக் கண்டாலும் சீறு

ஈ.தான் தாம்- தான் வாழ வேண்டும் என்று நினைக்காமல் தாம் வாடி வேண்டும் என்று நினை

உ. விதி - வீதி சாலை வதிகளை மீறி வீதியில் கிடக்காதே!

5

உவமையைப் பயன்படுத்திச் சொற்றொடர் அமைத்தல்

அ.தாமரை இலை நீர்போல - என் தங்கை தாமரை இலை நீர் போல யாருடனும் ஒட்டாமல் இருப்பாள்



ஆ.மழைமுகம் காணாப் பயிர் போல என் தந்தை வராததால் மழை முகம் காணாப் பயிர்போல வாடினேன்

இ.கண்ணினைக் காக்கும் இமைப்போல, என் தாய் என்னை கண்ணினைக் காக்கும் இமை போலப் பாதுகாக்கிறார்.

ஈ.சிலைமேல் எழுத்து போல . அப்துல்கலாமின் உரை சிலைமேல் எழுத்து போல என் மனதில் என்றும் நிலைத்திருக்கும்.

6. மரபுத்தொடருக்கான பொருளறிந்து தொடரில் அமைத்து எழுதுதல்

அ. மனக்கோட்டை- உழைக்காமல் உயராமல் என்று சிலர் மனக்கோட்டை கட்டுகின்றனர்

ஆ. கண்ணும் கருத்தும் மாணவர்கள் கண்ணும் கருத்துமாக தேர்விற்குப் படித்தனர்.

பகுதி -2

திருக்குறள் எழுதுதல்

அ. எப்பொருள் எனத் தொடங்கும் குறள்

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் மெய்பொருள் காண்ப தறிவு

ஆ. 'பல்லார்' எனத் தொடங்கும் குறள்

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
நல்லார் தொடர்கை விடல்

இ.பண்என்னாம் எனத் தொடங்கும் குறள்

பண்என்னாம் பாடற் கியை பின்றேல்: கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண்

ஈ.அருமை எனத் தொடங்கும் குறள்

அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் பெருமை முயற்சி தரும்

உ. 'முயற்சி' எனத் தொடங்கும் குறள்

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை இன்மை புகுத்தி விடும்

ஊ.பொருள் எனத் முடியும் குறள்

பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்ல தில்லை பொருள்

எ.வினை என முடியும் குறள்

குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்னைத்தென்
றுண்டாக செய்வான் வினை

ஏ.உலகு என முடியும் குறள்

குற்றம் இலனாய்க் குடி செய்து வாழ்வானைச் சுற்றமாச் சுற்றும் உலகு




8 அ.பகுபத உறுப்பிலக்கணம் எழுதுதல்

பொறித்த

பொறித்த - பொறி +த்+த் + அ

பொறி - பகுதி

த்-சந்தி

த்- இறந்தகால இடைநிலை

அ-பெயரெச்ச விகுதி


ஆ.

உரைத்த

உரைத்த - உரை+த்+த்+அ

உரை-பகுதி

த்-சந்தி

த்-இறந்தகால இடைநிலை
 
அ-பெயரெச்ச விகுதி


9. பொருத்தமான நிறுத்தற் குறியீகளை இட்டுஎழுதுதல்.

சேரர்களின் பட்டப் பெயர்களில் "கொல்லி வெற்பன், மலையமான்" போன்றவை குறிப்பி டத்தக்கவை: கொல்லிமலையை வென்றவன் கொல்லி வெற்பன் எனவும் பிறமலைப் பகுதிகளை வென்றவர்கள் மலையமான் எனவும் பெயர் சூட்டிக்கொண்டனர். இதற்கு 'சங்க இலக்கியத்தில் சான்றுகள் உள்ளன.

10.



11.

அ) முன்பின் அறியாத புதியவர்களுக்கே விருந்தினர் என்று பெயர் 

ஆ) 'விருந்தே புதுமை' என்று தொல்காப்பியர் கூறியுள்ளார்.

இ) விருந்தோம்பல்

12.


வைகறைக் காட்சிகள்

பொன்னிறக் கதிரவன் வைகறைப் பொழுதில் தனது ஒளிமிகுந்த கதிர்களால் இருளை விரட்டுகிறான். வெண்மேகங்கள் தனது பயணத்தைத் தொடங்குகின்றன. பலவண்ணப் பறவைகள் தனது சிறகை அசைத்து இதமான சூழ்நிலையை உருவாக்குகின்றன. அழகிய பட்டாம்பூச்சிகள் பூக்களைச் சுற்றி நடனமாடுகின்றன. மலர்கள் தென்றலில் தன்மணத்தை நிரப்புகின்றன. அத்தென்றலானது எல்லா இடங்களிலும் பரவி புத்துணர்வைப் பரப்புகிறது.

13.

நான் கலப்பை சுமந்தவிவசாயி கவலை சுமந்த தொழிலாள் 
என் கடன்கள் என்று தீர்ந்திருகமார் அன்றே வாழ்வின் புது விடியல்.

16.......



மாணவர்களின் எண்ணத்தில் எழும் கருத்துகள்.  















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here