பாரதியார் வாழ்க்கை
பதினேட்டாம் நூற்றாண்டி பின் அந்திமக்காலம்
பைந்தமிழ் தேர்ப்பாகன் பாரதி பிறந்தான்
இளமைக் காலக் காதல் கொண்டு
இனிதாய்க் கழிந்த நாட்களும் உண்டு
சான்றோர் அவையில் தம்புலமை காட்டி
தமிழ்ச்சாரதி பாரதி பட்டமும் சூடினான்
இழப்புகள் இளமை வாழ்வை குலைக்க
காசியில் கடந்தன காலங்கள் சிலவே -அவன்
நாசியில் கலந்தன பற்பல மொழியே
மீசையும் வளர்ந்தன வீரமும் மிகவே
பன்மொழி அறிவுடன் சொந்தர்ஊர் புகுந்து
அரண்மனை புலவராய் தமிழை விளக்கினான்
அடிமைப்பணியேன அதனை உணர்ந்திட
விடுதலை கொண்டு பறக்கவே துணிந்தான்
மதுரையில் சிலநாள் பள்ளி ஆசிரியன்
ஐயரின் உறவால் சுதேசமித்திரன் இதழாசிரியன்
ஆங்கிலச் செய்தியை தமிழில் மாற்றிடும்
அற்புத பணியுடன் விடுதலை தாகம்
இதழோ மறுக்க புது இந்தியா பிறக்க
வெள்ளையன் நடுங்கியே விலங்குடன் நெருங்க
சைதையில் ரயில்ஏறி
புதுவைக்குள் புகுந்தான்
விடுதலை எண்ணம் விலகாத போதும்
விதிவசம் போன படகினைப்போலே
கடற்கரை வாசம் தாசனின் நேசம்
குவலைக்கண்ணனும் குள்ளச்சாமியும்
பாரதி மறவா புதுவை உறவுகளே
அரவிந்தர் சந்திப்பும் அளவில்லா பெருமகிழ்வே
தமிழ்பாடும் சோலை குயில்தோப்பு தானே
சபதமும் பாட்டும் பிறந்தது தானே
புதுவையில் வீசிய விடுதலைக் காற்று
கடலூரில் சிறைப்படும் விடைபெற்று போச்சே
சொந்த ஊர் இருந்தபடி சில காலம் போக
சுதேசமித்திரனில் மீண்டும் இதழ்ப் பணியே
அல்லிக்கேணியின் பார்த்தசாரதி அருள்பெற
கோயில் யானை அது பாரதியை தள்ள
குவலைக்கண்ணன் வந்து ஐயரை அள்ள
காயங்கள் ஆரியே காலங்கள் போச்சு
காய்ச்சலும் பேதியும் நோயாகிப் போச்சு
மருந்துண்ண விரும்பாத பாரதியின் நோயும்
நள்ளிரவு நேரத்தில் திடுடியது உயிரை
விடுதலைக்கவியின் விடைபெறு விழாவில்
இரேழி பேர் முன்னே தீ தின்று போனது கவிஞனை.
இன்றும் என்றும் இறவா புகழுடன் தமிழாய் பாரதி நம்முடனே. .
மழலைக்கவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக