அழகே என்னை ஏற்பாயா. .!
உன் கூந்தல் வாசம்
காற்றில் கலந்தால்
வண்டுகள் எல்லாம்
மயங்கி விழும்
வண்டுகள் இல்லாப்
பூக்கள் எல்லாம்
பூக்க மறந்து
மொட்டாய் உறங்கும்
மொட்டுகள் அவிழா
பூக்களினாலே
தேன்குடம் எல்லாம்
நிறையாதிருக்கும்
தேன்குடம் நிறையா
வெறுமையினாலே
சுவையை மறந்து
தேனீக்கள் தவிக்கும்
சுவையை மறந்த
தேனீக்கள் தவிக்க
தேனை விரும்பும்
குழந்தையும் அழுமே
தேனை விரும்பும்
குழந்தையின் பசியை
தாய்ப்பால் அன்றோ
தீர்க்க முடியும்
தாய்ப்பால் சுறந்து
குழந்தை நிறைய
தாய்மை அன்றோ
அவசியம் அவசியம்
தாய்மை கொள்ளுதல்
அவசியம் என்றால்
திருமணம் அன்றோ
முதலில் நன்றாம்
திருமணம் என்றால்
விருப்பம் தானே
விரும்பிய கணவன்
அமைதல் நலமே
விரும்பிய விதமே
துணைவன் அமைதல்
இறைவன் நிகழ்த்தும்
அதிசயம் ஆமே. .
அதிசயம் நிகழ்த்தி
உன்னை மணக்க
ஆவல் கொண்ட
காவலன் நானே . .
ஆவல் மிகுந்த
காவலன் என்னை
அழகே நீயும்
ஏற்பாயா?
---மழலைக்கவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக