வியாழன், 20 ஆகஸ்ட், 2020

விதிவழிப்பயணம்

        

விதியின் வழியே பயணம்! 



உயர் அழுத்த மின்சாரம் தாக்கி நிலையிழந்து வீழ்ந்த ஏதோ ஒன்றின்   சத்தம் . சட்டேன திரும்பிப் பார்த்தேன்.  திரும்பிய திசையில் மயான அமைதி வியந்து போய் அமைதியான இடம் நோக்கி அடிவைத்து நடந்தேன்.  


சட்டெனப் பறந்து தன் உயிர்ப்பை மெய்யாக்கிவிட்டு தவழ்ந்து பக்கத்து வரப்பில் அமர்ந்து கொண்டது அந்த வள்ளூரு.

நானும் ஏதோ பூச்சியை விரட்டுகிறது என்று திரும்பிவிட்டேன். சற்று நேரம் இங்கும் அங்கும் தாவி நிலக்கடலை செடிக்குள் புகுந்து 

மிக நீண்ட போராட்டம் மற்றும் தான் கற்ற தந்திரங்களை

எல்லாம் பயன்படுத்தி  எப்படியோ தன் இரையை கவ்விக் கொண்டு வேலியோரப் புதருக்குள் புகுந்தது பறவை.   


அந்த திசையையே உற்று நோக்கிக் கொண்டிருந்த எனக்கு அப்போது தான் பதற்றம் தொற்றிக் கொண்டது.  அந்த பறவை கவ்விச் சென்றது என் நிலக் காவலாளியை. இத்தனை நாளாய் என் நிலத்தில்  விலையும் பயிர்களை தின்றழித்துக் கொண்டிருந்த ஏராளமாக பூச்சிகளை  தன் தனித்திறனால்  தாவித் தாவி ஓடி   நாவலை வீசி உண்டு இரையாக்கி என் நிலம் காத்து பயிர் காத்து வந்த ஓணான் என் கண் முன்னே பலியாவதை எண்ணி மனம் பதைத்து போனேன். அடுத்த நொடி எனக்கு எப்படியாவது அந்த ஒணானை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணம் மேலெழ அருகில் கிடந்த சிறு கல்லை எடுத்து புதர் நோக்கி வீசினேன். உயிரை காத்தாக வேண்டும் என்ற என் நோக்கத்தை சுமந்து சென்று தன் பணியை சரியாகவே செய்தது கல்.  

       புதருக்குள் கல் புகுந்த அடுத்த கனமே  வள்ளூரு சட்டென பறந்து தூரத்து மின்கம்பத்தில் அமர்ந்து கொண்டது.  புதர் மொத்தமும் சிட்டுகளின் கீச்சொலிகள்  இந்த புதருக்குள் இவ்வளவு உயிர்கள் வாழ்கின்றனவா? என்ற சிந்தனை பின்னர் பதிலாய் மாறி  இருக்க தானே வேண்டும். நடுவெயில் நேரம் என்பதால்   காலை முதலே உணவு தேடி அலைந்த கால்கள் ஓய வேண்டாமா? வெப்பம் குறையும் வரை அவைகள் தங்களுக்குள் உரை நிகழ்த்தியவாரே ஓய்வெடுக்கும் சமயம் நான் எரிந்த கல் கூட்டத்தில் குழப்பத்தையும் அசாதாரன நிலையும் உருவாக்கிவிட்டது .   சத்தம் எழுப்பப் பட்டபோதும் சில நிமிடத்தில் நிலமை சீரானது. நான் உற்று பார்த்துக் கொண்டே இருக்கிறேன்.  ஓணான் தன் அசைவால்  உயிர்ப்பை உறுதி செய்த மகிழ்ச்சி குறைவதற்குள் அடுத்த அதிர்ச்சி என்னைத் தொற்றிக் கொண்டது  .


சாய்ந்திருந்த நுனாக்கிளை ஒன்றில் தன் ஒய்யார நடை நடந்து மெல்லக் கிளையின் நுனி வரை வந்து காற்றில் குதித்து தரையிறங்கி  குத்துயிரும் குலையுயிருமாய் கிடந்த ஓணானை  காப்பாற்றுமோ என்ற நிலையில்  சட்டென தன் அளகால் கொத்திதூக்கிக் கொண்டு நடந்தது செம்பொத்து.

 ஓணான் தன் வாலால் அடித்து  தலையை திருப்பியும் கூட. விடுவித்துக் கொள்ள முடியாமல் சோர்ந்தெ போனது.  

     பாவம் வள்ளூரின் நகங்கள் எப்படியும் அதன் உடலை துளைத்தே இருக்கும்.. மேலும் அளகால் கொத்தி இருந்தால் இன்னும் ரனம்தான் . 


என்ன செய்யப் போகிறது என்ற ஆச்சரியம் நீளும் முன்னே தனக்கான இரை வெயில் சுற்றி அலையாமல் நிழலிலேயே கிடைத்துவிட்ட  மகிழ்ச்சியைத் தவிர உயிரிரக்கக் கோட்பாடுகள் எதுவும் நினைவை எட்டாதது போல நடந்து கொண்டது செம்போத்து. 

     கனத்த இதயத்தை தாக்கிய பிரம்மை எனை விட்டு அகலா சோகத்தில் நிமிர்ந்து பார்த்தேன்.  அந்த வள்ளூரு சற்றும் நகராமல் என்னையே கண்கொட்ட பார்த்துக் கொண்டிருந்தது.  அந்த பார்வையின் அர்த்தத்தை எண்ணியபடியே தலை குனிந்து கொண்டேன்.


  தாயிடம் கோபித்துக் கொண்ட பிள்ளை தலை குனிந்தபடியே தாயை மெல்ல மெல்ல பார்த்து குனிந்து கொள்ளும்   நிலை தான் எனக்கும் வள்ளூருக்கும் . உயிரை காத்துக் கொள்ள ஓணான் காட்டிய எதிர்ப்பு சருகின் அமைதியோடே அடங்கிப் போனது. மனம் கலங்கி   மெல்ல நடந்து வந்து அமர்ந்தபடியே அந்த வள்ளூரை நேருக்கு நேர் பார்க்க எத்தனித்தேன்.  நேர்மையில்லா தைரியத்துடனே தான் அந்த நிகழ்வு   நடந்ததுகொண்டிருந்தது சில நிமிடம் வரை.  அந்த சமயம்  தான் வாழ்வின் நிலைபற்றி மனதில் ஒரு சிந்தனை தோன்றியது .  இழப்புகளின் போது தானே கருத்துகள் பிறக்கும் .விதியின் முடிவை யாராலும் நிறுத்தி விட முடியாது தள்ளிப்போடலாம் அதுவும் எவ்வளவு நேரம் தூரம் என்பதெல்லாம் கூட  நம்மிடமில்லை என்பதை உணர்ந்த தருணம் அது.. 


படைத்தலும் காத்தலும் அழித்தலும் அவன் செயலே.  



மழலைக்கவி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...