புதன், 9 பிப்ரவரி, 2022

10 SSLC TAMIL REVISION EXAM ANSWER KEY -2022

 


 SSLC முதல் திருப்புதல் பொதுத்தேர்வு -2022

விடைக்குறிப்பு

                                         MAZHALAIKAVIBLOGSPOT.COM  

1 ஆ-மணிவகை   

2-இ-அன்மொழித்தொகை

3 ஆ-எம்+தமிழ்+நா

4 அ- உம்மைத்தொகை

5 ஈ-தேவநேயப்பாவாணர்

6 ஆ-எட்டு

7 இ-தாவரங்களின் அடிப்பகுதியை குறிப்பதற்கான சொற்கள்

8 ஈ- ச ,ரு

9 அ-காற்று

10 ஆ பாண்டிய மன்னன்

11 ஈ-அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

12  ஆ- மோனைஎதுகை

13 அ- சீராக

14 ஈ அவித்து விடாதே,மடித்து விடாதே

15 இ பாரதியார்

16  உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை எனப்படுகிறது .

17 அ- தேவநேயப்பாவாணர் எந்த கழகத்தை நிறுவித் தலைவராக இருந்தார் ?

  ஆ-பூவின் தோற்றநிலை எது?

18 உலகியல் நூறு ,பாவியக் கொத்து, கனிச்சாறு பள்ளிப்பறவைகள்

 

19 வரகு ,காடைக்கண்ணி, குதிரைவாலி

20 இலை ,தாள் ,தோகை,,ஓலை, சண்டு, சருகு முதலியன தாவரத்தின் இலை வகைகளை குறிக்கும் .

21 எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்

    மெய்ப்பொருள் காண்ப தறிவு

22 சிரித்து சிரித்துப்பேசினார்

23 அ மழை

  ஆ இயற்கை அழகு

24  கு

    குருதி

    வாள்

    க்கா

    தி

    படகு

 திருக்குறள் 

                                                                                        MAZHALAIKAVI BLOGSPOT.COM  

 

25 வேங்கை - மரம், புலி

   வேம் + கை வேகின்ற  கை

   வேங்கை என்னும் சொல் தனிமொழியாய்

   நின்று மரம் எனும் பொருளையும்,

   தொடர்மொழியாய் வேகின்ற கை என வேறு   பொருளையும் தருவதால் பொதுமொழியாகும்

26  தேனில்  ஊறிய   

    தேறும்  காரமதை

    உள்ளளவும்

    யுணர்ந்தின்    புறுவோமே

 

27.கரும்பு தின்றான் -- வேற்றுமைத்தொகை

   வீசு தென்றல்  -- வினைத்தொகை

28 கலந்துரையாடல்

   நவீன இலக்கியம்

29..'புளியங்கன்று ஆழமாக நடப்பட்டுள்ளது'

இதுபோல் இளம்பயிர் வகை ஐந்தின் பெயர்களைத் தொடர்களில் அமைக்க.

1.நாற்று - நெல் நாற்று நட்டேன்.

2.கன்று - வாழைக்கன்று வளமாக இருந்தது.

3.பிள்ளை -தென்னம்பிள்ளையைத் தெற்கில் வைத்தேன்.

4.வடலி -பனை வடலியைப் பாங்காக வளர்த்தேன்.

5.பைங்கூழ் - பைங்கூழ் பசுமையாக இருந்தது.

 

30   நிலம் ---. தரிசு   கரிசல் புறம்போக்கு சுவல் அவல் முரப்பு

     நீர்நிலை --–ஆறு குளம் குட்டை கடல்

31 அ-  மொழியாகும்

   ஆ- நாட்டின் தனிப்பெரும் வளத்தினாலேயே

    இ-மொழி நாகரிகத்தை அளந்தறிவதற்கு சிறந்த வழியாக உள்ளது

 

32  நற்றிணை

     குறுந்தொகை

     ஐங்குறுநூறு

     பதிற்றுப்பத்து

     பரிபாடல்

     கலித்தொகை

      அகநானூறு

      புறநானூறு

33  அ- மனதை மயங்கச்செய்யும்

    ஆ-மகரந்தத், மயலுறுத்து

    இ—காற்றை

34 தென்னன்மகளே திருக்குறளின் மாண்புகழே

இன்றும் பாப்பத்தே எண்தொகையே நற்கணக்கே

மன்னுஞ் சிலம்பே மணிமே கலைவடிவே

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே !

 

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

-    பெருஞ்சித்திரனார்

 

35 அலகிடல் ..

36 அறிதல்  அறியாமை

  புரிதல் புரியாமை

  தெரிதல் தெரியாமை

  பிறத்தல் பிறவாமை

37 இன்னிசை அளபெடை

 செய்யுளில் ஓசை குறையாத இடத்தும்  இனிய ஓசைக்காக குறில் நெடிலாக அளபெடுப்பது  இன்னிசை அளபெடை ஆகும்.

38

·         மகரந்த தூளை சுமந்துகொண்டு வா

·         இனிய வாசனையுடன் வா

·         இல்லைகளின் மீதும் நீரலைகள் மீதும் உராய்ந்து

·         ப்ராண ரசத்தை கொண்டு வா

·         உயிர் நெருப்பை காத்து நன்றாக வீசு   

·         மெதுவாக நல்ல லயத்துடன் நின்று வீசு..

 

39  அனுப்புநர்

                   அ.தமிழழகன்

                  15. வெற்றி நகர்,

                     தஞ்சாவூர்,

 

பெறுநர்

            உணவுப் பாதுகாப்பு ஆணையர்,  

             உணவுப் பாதுகாப்பு ஆணையம்

              சென்னை.

 

மதிப்பிற்குரிய ஐயா,

 

பொருள்: உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் உள்ள உணவு விடுதியின் மீது நடடிவக்கை எடுக்க வேண்டுதல் சார்பு.

          வணக்கம். நான் எனது நண்பனுடன் கடந்த வாரம் தஞ்சாவூர் நூலகத்திற்கு அருகில் உள்ள உணவு விடுதியில் மதிய உணவு உண்டேன். விலை கூடுதலாக இருந்தது. உணவும் சுத்தமாகத் தயாரிக்கப்படவில்லை. விடுதியிலிருந்து வெளியே வருவதற்கு முன்பாகவே என் நண்பனுக்கு மயக்கம் வந்தது. மருத்துவரிடம் என் நண்பனை அழைத்துச் சென்றேன். அவன் உண்ட உணவில் கோளாறு இருந்ததாக மருத்துவர் கூறினார். ஆகவே, அந்த உணவுவிடுதியின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இணைப்பு :- 1) மருத்துவரின் சான்று. 

                            2) விடுதி விலை ரசீது                                  .

 

                                                     இப்படிக்கு, உண்மையுள்ள,

இடம்: தஞ்சாவூர்,                             அ.தமிழழகன்   

 நாள்: 23 .1 2 .2021                                                                              .    

உறைமேல் முகவரி

                            பெறுநர்

                                   உணவுப் பாதுகாப்பு ஆணையர்,

                                   உணவுப் பாதுகாப்பு ஆணையம்

                                                 சென்னை.

 

 

40 கவிதை

41 நூலக உறுப்பினர் படிவம்

42                                                                                        MAZHALAIKAVIBLOGSPOT.COM  

ஆ- மொழிப்பெயர்ப்பு 

பொன்போன்ற சூரியன், அதிகாலையில் தோன்றிப் பிரகாசமான கதிர்களைக் கொண்டு, உலக இருளைப் போக்குகிறது. பால் மேகங்கள் அலையத் தொடங்குகின்றன. வண்ணமயமான பறவைகள், தங்கள் காலை இசையால் மகிழ்ச்சி அடைகின்றன. அழகிய பட்டாம்பூச்சிகள், மலர்களைச் சுற்றி நடனமாடுகின்றன. மலர்களின் வாசனை, தென்றல் காற்றை நிரப்புகின்றது. காற்று, எல்லா இடங்களிலும் வீசி மகிழ்ச்சியூட்டுகிறது.

 

43 தமிழின் சொல்வளம்,

'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தக் குடி" என்பதற்கு ஏற்றவாறு தமிழ்மொழி தோன்றியது என்பது உண்மை. இதை தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.

கால வெள்ளத்தில் கரைந்து போன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ்.

 

தமிழ்ச் சொல்வளம் பல துறைகளிலும் உள்ளது.

அதில் பயிர்வகைச் சொற்கள் மட்டும் சிறப்பாக எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன.

ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொற்கள் :

 தாள், தண்டு, கோல்,தூறு,தட்டு. கழி, கழை, அடி ஆகும்.

 

தாவரங்களின் இலை வகைகள்:

தாள், தோகை, இலை, ஓலை,சண்டு, சருகு.

கொழுந்து வகை: (நுனிப்பகுதி )

துளிர், கொழுந்து, குருத்து, கொழுந்தாடை பிஞ்சு வகை: வடு. பூம்பிஞ்சு, மூசு, கவ்வை. கச்சல் இன்னும் பிற. மேற்கண்ட அனைத்தும் தமிழ் சொல் வளமுடையது என்பதைக் காட்டுகிறது.

 

புதிய சொல்லாக்கத்திற்கான தேவை:

 

புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், கருவிகள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு வேறு மொழி சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்கள் கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில் பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்கள் அமைந்தால் மட்டுமே தமிழ் நிலைத்து நிற்கும். வணிகம். பொருளாதாரம், அரசியல், சமூகம், அரசு சார்ந்த துறைகள் அனைத்திலும் தமிழ் மொழியாக்கம் தகுந்த சொற்களோடு அமைய வேண்டும்.

 

கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு தமிழ்மொழியும் நடைபோடுவது அவசியம். புதிய சொல்லாக்கம் அழிந்து வரும் மொழிகளின் வரிசையில் இல்லாமல் எதிர்கால சந்ததியினருக்கு மொழியை எடுத்துச் செல்ல உதவும் என்பது உறுதி.

                                                MAZHALAIKAVIBLOGSPOT.COM  

 

 

 

44

 

               கோபல்லபுரத்து மக்கள்

முன்னுரை

ü  பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற நேயம் கிராமத்து விருந்தோம்பல்.

ü   கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவர் கி.ராஜநாராயணன்.

ü  கோபல்லபுரத்து அன்னமய்யா விருந்தோம்பலின் சான்று.

தேசாந்திரியின் சோர்வும் தீர்வும்

ü  சுப்பையாவின் புஞ்சையில் அருகு எடுக்கும் வேலை.

ü  அன்னமய்யா கூட்டி வந்த ஆள் சோர்வாக இருந்தான்.

ü   அவன் யார் என சுப்பையா கேட்க வரட்டும் அவன் வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி நாமும் குடிப்போம் என்றான்

ü   கொத்தாளி லாட் சன்னியாசி போல் உடை அணிந்து இருந்தான் அவ்வாலிபன்.

ü   குடிக்கத் தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்சுத்தண்ணி வழங்கப்பட்டது.

ü  வேப்பமர நிழலே சொர்க்கமாக அயர்ந்து விட்டான். அன்னமய்யாவின் கருணை

ü  கள்ளியை ஒழித்தது போல் அருகை ஒழிக்க முடியவில்லையே என கவலைப்பட்டார்கள் சம்சாரிகள்.

ü  விழித்தவன் தன்பெயர் பரமேஸ்வரன் என்றும் தற்போதைய பெயர் மணி என்றும் சொன்னான்.

ü   உருண்டை கம்மஞ்சோற்றை இடது கையில் வைத்துபள்ளம் பறித்து அதில் துவையல் வைத்தார்கள்.

ü   அந்தக் ஒரு கால் கடுமையான பசியிலும் அரை உருண்டைதான் சாப்பிட்டான்.

ü  திரும்பவும் படுத்து அமைதியாகக் கண்மூடிக் கிடந்தார்.

முடிவுரை

ü  அதிகாலை வேளையில் களைத்து வந்தவருக்குக் கரிசல் இதயங்கள் காட்டிய அன்பு கண்முன் படமாகிறது.

ü  கருணையுடன் மணி பார்த்த பார்வையில் நன்றி தெரிகிறது.

ü  கஞ்சிக்கலயம்சோற்றின் மகுளி துவையல்கம்மஞ்சோறு இவற்றில் கரிசல்மண் மணக்கிறது

 

 

 

 

 

45. சான்றோர் வளர்த்த தமிழ்

 

முன்னுரை

            முதல் மாந்தன் பேசிய மொழியான தமிழின் தொன்மை ஆய்வுக்குட்பட்டது. உலகின் பல மொழிகளுக்குத் தாய்மொழியாக இருப்பதும் தமிழே. அத்தமிழை வளர்க்க முயன்ற சான்றோர்கள் பலரை வளர்த்தது தமிழ் தமிழால் சான்றோரும் சான்றோரால் தமிழும் வளர்ந்ததை இலக்கிய  உலகு நன்கு அறியும்.  

வள்ளுவரும் ஒளவையும்

       உலகப்பொதுமறை தந்த வள்ளுவர் தமிழை உலகறியச் செய்தார். மூன்றடியில் உலகளந்த இறைவன் போல் ஈரடியில் உலகளந்த புலவன் வள்ளுவரே. பல மொழிகளில் பெயர்க்கப்பட்ட குறள் தமிழின் புகழைப் பறைசாற்றும், ஓரடியில் ஆத்திசூடி தந்த ஒளவையும் தமிழின் சிறப்பை வரிசைப்படுத்தினார். தமிழ் வளர்க்க ஒளவை வேண்டி நெல்லிக்கனி தந்த அதியமானும் தமிழ் வளர்த்தவரே.

 

 இலக்கியத்தில் தமிழ்

          ஐம்பெருங்காப்பியங்களும் ஐஞ்சிறு காப்பியங்களும் இதிகாசங்களும் கண்டவர்கள் தமிழின் இலக்கிய வாழ்வை மேம்படுத்தினர், கம்பன் தந்த உவமையும் சொல்லாடலும் தமிழின் பெருமைக்குச் சான்றுகள். அறநூல்களை அள்ளித்தந்த சான்றோர் அகமும் புறமும் படைத்து தமிழின் தமிழரின் தமிழ்நாட்டின் உயர்வை உலகிற்கு உணர்த்தினர்.

சிற்றிலக்கியத்தில் தமிழ்

 

       பரணி பாடிய செயங்கொண்டார் போன்றோரும், உலா பாடிய ஒட்டக்கூத்தர் போன்றோரும். குறவஞ்சி பாடிய திரிகூடராசப்பர் போன்றோரும், தூது தந்த புலவர்களும், கலம்பகம் தந்த புலவர்களும், பிள்ளைத்தமிழ் தந்த புலவர்களும், பள்ளு பாடிய புலவர்களும் 96 வகைச் சிற்றிலக்கியங்களை வழங்கிய பலரும் தமிழை வளர்த்தனர்.

பிறநாட்டார்

     வீரமாமுனிவர் சதுரகராதி தந்து தமிழால் பெருமை பெற்றார். போப் தமிழின் சிறப்புகளை மொழிபெயர்ப்பின் மூலம் உலகறியச் செய்தார். பிறநாட்டார் பலர் தமிழைப் போற்றி தமிழால் அறியப்பெற்றனர். பிற மொழி பேசுபவர்களும் தமிழை அறிய ஆர்வம் கொண்டனர்.

மொழிப்பற்றாளர்

      அகரமுதலி வெளியிட்ட தேவநேயப் பாவாணரும், பல நூல்களைப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதரும், மொழித்தியாகிகளும், பாரதியார், பாரதிதாசன், சுரதா வழிவந்த பரம்பரைக் கவிஞர்களும் மொழிப்பற்றோடு தமிழை வளர்த்து அழியாப் புகழ் அடைந்தனர்.

 

முடிவுரை

 

              அன்று முதல் இன்று வரை தமிழை வளர்க்கச் சான்றோர் பலர் தோன்றியுள்ளனர். தமிழை வளர்க்க எண்ணிய அனைத்துச் சான்றோர்களையும் தமிழ் வளர்த்தது என்பதே மறுக்க இயலா உண்மையாகும். தமிழ் வளர்ப்போம், புகழ் பெறுவோம்.

  MAZHALAIKAVIBLOGSPOT.COM   MAZHALAIKAVIBLOGSPOT.COM   MAZHALAIKAVIBLOGSPOT.COM   MAZHALAIKAVIBLOGSPOT.COM   MAZHALAIKAVIBLOGSPOT.COM   MAZHALAIKAVIBLOGSPOT.COM   MAZHALAIKAVIBLOGSPOT.COM   MAZHALAIKAVIBLOGSPOT.COM  

 

3 கருத்துகள்:

சிறார்திரைப்படம்

 Download  Click here