வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

CEO INSTRUCTIONS FOR ALL HM's&TEACHERS

 *24.02.2022 அன்றைய முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் கூட்டம் சார்ந்த அறிவுரைகள்  தக்க தொடர் நடவடிக்கைகளுக்காக    அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் பகிரப்படுகிறது*


*தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கவனத்திற்கு:*


1) தமிழ் , ஆங்கில பாடங்களில் தினமும் ஒரு பக்கம் கையெழுத்து பயிற்சி அளித்து தேதியுடன் திருத்தப்பட வேண்டும் .


2)ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை தமிழ் ,ஆங்கில பாடங்களில் மாதம்தோறும் இரண்டு கட்டுரைகள்    சொந்தமாக  எழுதும் பயிற்சி அளித்து திருத்தப்பட வேண்டும்.


3)அனைத்து வகுப்புகளுக்கும் 1 முதல் 16 வரை (16×16) வரை வாய்ப்பாடு பயிற்சி அளிக்கப்பட வேண்டும் .


4)1,2,3 வகுப்புகளுக்கு தமிழ் அபிநயப்பாடல் மற்றும் ஆங்கிலம் action song 10 வீதம் பயிற்சியளித்திருக்கவேண்டும்.


5)ஒவ்வொரு நாளும் அனைத்து பாடங்களுக்கும் குறிப்பேடுகளில் மாணவர்கள் எழுதச் செய்து தேதி உடன் திருத்தம் செய்ய பட்டிருக்க வேண்டும்.


6) அனைத்து பாடப் புத்தகங்களிலும் பாடம் நடத்தி முடிக்கப்பட்ட உடன் பின்பகுதியில் உள்ள பயிற்சிகளை பாடப்புத்தகத்தில் மாணவர்கள் எழுதச் செய்து திருத்தம் செய்து தேதியுடன் சம்பந்தப்பட்ட பாட ஆசிரியரின் கையொப்பம் இருக்க வேண்டும்.


7) தினமும் 10 தமிழ் வார்த்தைகள் 10 ஆங்கில வார்த்தைகள் டிக்டேஷன் கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.


8)தினமும் கூட்டல், கழித்தல் ,பெருக்கல், வகுத்தல் ஒவ்வொன்றிலும் ஐந்து கணக்குகள் பயிற்சி அளிக்கப்பட வேண்டும்.


 9)கரும்பலகைகள் முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும்.


10)தாழ்நிலைக் கரும்பலகைகள் மாணவர்களால் முழுமையாக எழுதி நிரப்பப்பட்டு இருக்க வேண்டும்.


11. மேற்கண்ட வகுப்புவாரியான செயல்பாடுகள் மற்றும் பாடக்குறிப்புகள் முறையாக தலைமையாசிரியர் ஒப்பத்துடன் பராமரிக்கப்பட்டு வருவதை தலைமையாசிரியர்கள் உறுதி செய்து செயல்பட வேண்டும்.


12. முன்னறித் தேர்வில் D Grade-ல் உள்ள மாணவர்களுக்கு, சிறப்புக் கவனம் எடுத்து, தமிழ்/ஆங்கிலம் / கணிதம் அடிப்படை செயல்களில் கூடுதல் பயிற்சிகள் வழங்கிடவும்,  முன்னேற்றத்தை முறையாக பதிவு செய்து வரவும் வேண்டும்..(கொடுக்கப்பட்ட பயிற்சிகள், சிறு தேர்வுகள் உள்ளிட்டவை)


13. எதிர்வரும் மார்ச் 10.11.12 தேதிகளில் மீண்டும் முன்னறித் தேர்வு நடத்தப்பட வாய்ப்புள்ளதால், கூடுதல் கவனம் தேவை..


14. இடிக்கப்பட வேண்டிய கட்டுமானங்கள் பணி தொடங்கப் படாமலோ,  பாதியில் நிற்பதாக வோ இருந்தால், அவற்றை விரைவுபடுத்தும் வகையில், SMC தீர்மானம் மூலம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு முறைப்படி விண்ணப்பிக்க வேண்டும்.


15. பள்ளி வளாகத் தூய்மை, கழிப்பறை தூய்மை உள்ளிட்டவை முறையாக தினமும் கண்காணிக்கப்பட வேண்டும்.


16. 1098 குழந்தைகள் உதவி மைய எண் பெரிய எழுத்துக்களில் ஒட்டப்பட்டிருக்க வேண்டும்.


17. Emis பள்ளி சார்ந்த விபரங்களில் அனைத்து விபரங்களும் முழுமையாக update செய்யப்பட்டிருப்பதை உறுதி செய்திட வேண்டும்.



குறிப்பு:


 *மேற்கண்ட விபரங்களை சுற்றறிக்கை மூலம் அனைத்து நிலை ஆசிரியர்களுக்கும் தெரிவித்து, கையொப்பம் பெற்று பராமரிக்க வேண்டும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here