பத்தாம் வகுப்பு
தமிழ் திருப்புதல் -1
செங்கல்பட்டு மாவட்டம்
விடைக்குறிப்பு
1.சருகும் சண்டும்
2 எம்+தமிழ்+நா.
3.பாடல் கேட்டவர்
௪.மணி வகை
5.மோனை எதுகை
6 அன்மொழிக்தொகை
7 விளித்தொடர்
8 வாழைப்பிஞ்சி
9 தொடர்மொழி
10
11 உயிர் வளி
12 வண்டு
13 மோனை
14 செந்தாமரை
15 தானித்தமிழ் முழங்க
16 மொழி ஞாயிறு என்று அழைக்கப்படுபவர் யார் ?
பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர் யாது ?
17 ஒரு சீப்பில் பல வாழைப்பழங்கள் உள்ளன.
18 வளையாபதி குண்டலகேசி சீவகசிந்தாமணி
19 உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை எனப்படுகிறது .
20
21 முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி விடும்
22பெருங்காற்று கலந்துரையாடல்
23 ஐந்து -௫
ஆயிரம் -௧௦௦௦
24 சிரித்து சிரித்துப் பேசினார்
25
26
27
28 வேங்கை - மரம், புலி
வேம் + கை வேகின்ற கை
வேங்கை என்னும் சொல் தனிமொழியாய்
நின்று மரம் எனும் பொருளையும்,
தொடர்மொழியாய் வேகின்ற கை என
வேறு பொருளையும் தருவதால்
பொதுமொழியாகும்.
29
30
31 1.நாற்று - நெல் நாற்று நட்டேன்.
2.கன்று - வாழைக்கன்று வளமாக இருந்தது.
3.பிள்ளை -தென்னம்பிள்ளையைத் தெற்கில் வைத்தேன்.
4 .வடலி -பனை வடலியைப் பாங்காக வளர்த்தேன்.
5.பைங்கூழ் - பைங்கூழ் பசுமையாக இருந்தது.
32 மொழிச்சிறப்பு:
செம்மை பெற்ற தமிழ்மொழி, அன்னை மொழியாகவும், பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியாகவும்,
குமரிக்கண்டத்தில் நிலைத்து ஆட்சிசெய்த மண்ணுலகப் பேரரசாகவும் விளங்குகிறது.
இலக்கியச் சிறப்பு:
பாண்டிய மன்னனின் மகளாகவும்,திருக்குறளின் பெருமைக்குரியவளாகவும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இலக்கியச் சிறப்புக்கு உரியவளாகவும் திகழ்கிறாள். ஆகவே, தமிழன்னையைப் பாவலரே வாழ்த்துகிறார்.
33
34 அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!
கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்
மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!
தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!
இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!
மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!
35 இக்குறளில் பயின்று வரும் அணி உவமையணி ஆகும்.
அணி விளக்கம் : உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் ஒரு வாக்கியமாகவும் அமைந்து இடையில் போல, போன்ற என்னும்
உவம உருபுகள் பயின்று வருவது உவமையணி ஆகும்.
அணி பொருத்தம் : உவமை : வேலொடு நின்றான் இரு என்றது
உவமேயம் : கோலொடு நின்றான் இரவு.
உவம உருபு: போலும்.
36
37
38 என்னைத் தாலாட்டிய மொழி!
எனதருமைத் தாய்மொழி!
என் இனிய தமிழ்மொழி!
எண்ணமெல்லாம் நிறைந்த மொழி!
என் தாய்மொழிக்குத் தலை வணங்குகிறேன்.
அனைவருக்கும் வணக்கம்!
மனோன்மணீயம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல் விளக்கம்:
பூமி என்ற பெண்ணின் ஆடை நீராலான கடல், முகம் பாரத கண்டம் ஆகும். நெற்றியாகத் தக்காணம் திகழ்கிறது. நெற்றியில் பொட்டு வைத்தது போல் தமிழகம் திகழ்கிறது. எல்லாத் திசைகளிலும்
தமிழ்த்தாய் புகழ் பெற்று விளங்குகிறாள் எனச் சிறப்பிக்கிறார். உலகின் மூத்த மொழி, இளமையான மொழி, வளமான மொழி, பெண்ணே, தாயே உன்னை வாழ்த்துகிறேன் என்று பலவாறு வாழ்த்துகிறார்.
பெருஞ்சித்திரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின் பொருள்:
அன்னை மொழியாக அழகாய் அமைந்து பழமைக்குப் பழமையாய்த் திகழும் மொழி. குமரிக்கண்டத்தில் நிலைத்து நிற்கும் வகையில் பாண்டிய மன்னனின் மகளாகத் திகழும் மொழி.
தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் தலையணிந்து விளங்கும் தமிழை வாழ்த்துகின்றேன்.
ஒப்புமை:
இரு பாடல்களிலும் தமிழ் தாயாகவும், பழமையான மொழியாகவும் சிறப்பிக்கப்படுகிறது. எல்லாத்திசைகளிலும் புகழ் பெற்று நிலைத்து நிற்பது என்றும் இளமையானது என்று பொருள்பட அமைந்துள்ளது. பெண், தாய், மகள் என வெவ்வேறு வகையில் அழைத்தாலும் தமிழைத் தாயாக சிறப்பிக்கின்றனர். நறுமணமிக்க மொழி என்ற பொருளில் இருபாடல்களும் அமைந்துள்ளன.
39
வாழ்த்து மடல்
15,வெற்றிநகர்,
தஞ்சாவூர்,
23.12.2021.
அன்புள்ள தோழனுக்கு,
நலம், நலமறிய ஆவல். 'விளையும் பயிர் முளையிலேயே தெரியும்' என்பார்கள். நீயும் சிறுவயதிலிருந்தே கவிதை, கட்டுரை என ஆர்வம் செலுத்தி வந்தாய். அதன் பலனாக மாநில அளவில் நடைபெற்ற "மரம் இயற்கையின் வரம்" என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றுள்ளாய். என் மனமார்ந்த வாழ்த்துகள். முயற்சி திருவினையாக்கும். உன் முயற்சிகளும் உன்னை வெற்றியடைய செய்துவிட்டன. இதைப்போல இன்னும் பல வெற்றிகள் பெற வேண்டும். தொடர்ந்து முயற்சி செய்; பயிற்சி செய்.
இப்படிக்கு, உன் அன்பு தோழன்,
அ.தமிழழகன்.
உறைமேல் முகவரி:
பெறுநர்
த.அமுதன்,
24, காந்தி தெரு,
சேப்பாக்கம்,
சென்னை.
40
41
42
43தமிழ்ச் சொல்வளம்,
'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தக் குடி" என்பதற்கு ஏற்றவாறு தமிழ்மொழி தோன்றியது என்பது உண்மை. இதை தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.
கால வெள்ளத்தில் கரைந்து போன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ்.
தமிழ்ச் சொல்வளம் பல துறைகளிலும் உள்ளது.
அதில் பயிர்வகைச் சொற்கள் மட்டும் சிறப்பாக எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன.
ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொற்கள் :
தாள், தண்டு, கோல்,தூறு,தட்டு. கழி, கழை, அடி ஆகும்.
தாவரங்களின் இலை வகைகள்:
தாள், தோகை, இலை, ஓலை,சண்டு, சருகு.
கொழுந்து வகை: (நுனிப்பகுதி )
துளிர், கொழுந்து, குருத்து, கொழுந்தாடை பிஞ்சு வகை: வடு. பூம்பிஞ்சு, மூசு, கவ்வை. கச்சல் இன்னும் பிற. மேற்கண்ட அனைத்தும் தமிழ் சொல் வளமுடையது என்பதைக் காட்டுகிறது.
புதிய சொல்லாக்கத்திற்கான தேவை:
புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், கருவிகள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு வேறு மொழி சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்கள் கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில் பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்கள் அமைந்தால் மட்டுமே தமிழ் நிலைத்து நிற்கும். வணிகம். பொருளாதாரம், அரசியல், சமூகம், அரசு சார்ந்த துறைகள் அனைத்திலும் தமிழ் மொழியாக்கம் தகுந்த சொற்களோடு அமைய வேண்டும்.
கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு தமிழ்மொழியும் நடைபோடுவது அவசியம். புதிய சொல்லாக்கம் அழிந்து வரும் மொழிகளின் வரிசையில் இல்லாமல் எதிர்கால சந்ததியினருக்கு மொழியை எடுத்துச் செல்ல உதவும் என்பது உறுதி.
44 கோபல்லபுரத்து மக்கள்
முன்னுரை
* பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற நேயம் கிராமத்து விருந்தோம்பல்.
* கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவர் கி.ராஜநாராயணன்.
* கோபல்லபுரத்து அன்னமய்யா விருந்தோம்பலின் சான்று.
தேசாந்திரியின் சோர்வும் தீர்வும்
* சுப்பையாவின் புஞ்சையில் அருகு எடுக்கும் வேலை.
* அன்னமய்யா கூட்டி வந்த ஆள் சோர்வாக இருந்தான்.
* அவன் யார் என சுப்பையா கேட்க வரட்டும் அவன் வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி நாமும் குடிப்போம் என்றான்
* கொத்தாளி லாட் சன்னியாசி போல் உடை அணிந்து இருந்தான் அவ்வாலிபன்.
* குடிக்கத் தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்சுத்தண்ணி வழங்கப்பட்டது.
* வேப்பமர நிழலே சொர்க்கமாக அயர்ந்து விட்டான். அன்னமய்யாவின் கருணை
* கள்ளியை ஒழித்தது போல் அருகை ஒழிக்க முடியவில்லையே என கவலைப்பட்டார்கள் சம்சாரிகள்.
* விழித்தவன் தன்பெயர் பரமேஸ்வரன் என்றும் தற்போதைய பெயர் மணி என்றும் சொன்னான்.
* உருண்டை கம்மஞ்சோற்றை இடது கையில் வைத்து, பள்ளம் பறித்து அதில் துவையல் வைத்தார்கள்.
* அந்தக் ஒரு கால் கடுமையான பசியிலும் அரை உருண்டைதான் சாப்பிட்டான்.
* திரும்பவும் படுத்து அமைதியாகக் கண்மூடிக் கிடந்தார்.
முடிவுரை
* அதிகாலை வேளையில் களைத்து வந்தவருக்குக் கரிசல் இதயங்கள் காட்டிய அன்பு கண்முன் படமாகிறது.
* கருணையுடன் மணி பார்த்த பார்வையில் நன்றி தெரிகிறது.
* கஞ்சிக்கலயம், சோற்றின் மகுளி துவையல், கம்மஞ்சோறு இவற்றில் கரிசல்மண் மணக்கிறது
45
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக