ஞாயிறு, 31 அக்டோபர், 2021
#இளம்வயது#மாரடைப்பு#தடுப்பது#எப்படி#எதையும்#எளிதாய்#கடந்துபோக#கற்போம் #உடல்ஆரோக்கியம்#முக்கியம்# #punith #heartattack#karnataka
#punith #heartattack#karnataka
முதுகுக்குப் பின்னால் மரணத்தை வைத்துக்கொண்டு*
புனித் ராஜ்குமாரை 'கன்னடத்தின் விஜய் ' எனலாம்.
கிட்டத்தட்ட இருவருக்கும் ஒரே வயது. 'பவர் ஸ்டார்' என்பது தமிழ்நாட்டில் கொஞ்சம் காமெடியான பட்டம். அங்கே கர்நாடகாவில் பவர் ஃபுல்லான பட்டம்.
ஒட்டுமொத்த மாநிலமே 'அப்பு' என்று செல்லமாக அழைக்கும் பாசக் குழந்தை அவர்.
46 வயதில் அவரது மரணம் பல்வேறு விஷயங்களை நம்மை யோசிக்க வைத்து இருக்கிறது.
எந்த நேரத்திலும் மரணம் வந்து 'நலமா, என் பழைய நண்பனே!' என்று நம் கதவைத் தட்டக் கூடும் என்பதை இந்த மரணம் மீண்டும் நிரூபித்து இருக்கிறது.
'நேற்று இருந்தவன் இன்று இல்லை என்னும் பெருமையை இந்த உலகம் தன்வசம் வைத்துள்ளது' என்னும் வள்ளுவப் பாட்டனின் வாய்மொழியும் நிரூபணம் ஆகி இருக்கிறது.
நேற்று இரவு 12 மணி வரையிலும் பர்த்-டே பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்டு ஜாலியாக, உற்சாகமாக சிரித்துக்கொண்டே நடனமாடிக் கொண்டு இருந்திருக்கிறார் புனித்.
இன்று காலை எழுந்து வழக்கம் போல ஜிம்மில் உடற்பயிற்சிகள் செய்திருக்கிறார். உடனடி Cardiac arrest ஏற்பட்டு சில நிமிடங்களில் மரணம். பிரிந்து பல காத தூரம் கடந்து சென்று விட்ட உயிரை மீண்டும் உடலில் ஒட்ட வைக்க முடியாதா என்று போராடி இருக்கிறது மருத்துவமனை.
நண்பகல் 12 மணியளவில் கை விரித்து மரண அறிவிப்புச் செய்து இருக்கிறார்கள்.
எந்த வித முன்னறிவிப்பும் தராமல் 'இனிமேல் துடிக்க மாட்டேன்' என்று இதயம் திடீரென ஸ்ட்ரைக் செய்து ஏனோ நின்று போய் விடுகிறது.
Massive cardiac attack. இதற்கான சரியான காரணங்கள் இன்னும் வரையறுக்கப் படவில்லை என்றே தெரிகிறது.
சும்மா நம் ஆறுதலுக்காக 'unhealthy lifestyle' என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறோம்.
ஆனால் இறுதி நிமிடம் வரை புனித் 'fit as fiddle' ஆகத் தான் இருந்திருக்கிறார்.
வாடகை வீட்டில் இருப்பவர் குறைந்தது ஒரு மாதம் முன்பாக 'நான் காலி செய்யப் போகிறேன்' என்று ஓனருக்கு நோட்டிஸ் தரவேண்டும் என்பார்கள்.
உடம்பென்னும் வாடகை வீட்டில் தங்கி இருக்கும் உயிர் அப்படி எந்த நோட்டிசும் தருவதில்லை.
'Interval' கார்டை எதிர்பார்த்துக் கொண்டு இருக்கையில் 'The End' கார்டு காட்டிப் பாதியில் அபத்தமாக நின்றுவிடும் ஒரு சுவாரஸ்யத் திரைப்படம் போல திடீரென்று விலகி விடுகிறது உயிர்!
இது தத்துவமோ வேதாந்தமோ, எதிர்மறை உணர்ச்சிப் பிரச்சாரமோ அல்ல. இதில் positive ஆகச் சிந்திக்கவும் சில விஷயங்கள் உள்ளன.
ஆயிரம் வருடங்கள் இங்கே இருப்பது போல வாழ்ந்து கொண்டிருக்கிறோம், அத்தனை சுயநலத்தோடு, அத்தனை பகைமையோடு, அத்தனை காழ்ப்புணர்ச்சிகளோடு!
முதுகுக்குப் பின்னால் மரணத்தை வைத்துக்கொண்டு முப்பது ஆண்டுகளுக்குத் தேவையான திட்டங்களைப் போட்டுக் கொண்டு இருக்கிறோம்.
இந்த விஷயங்களைக் கொஞ்சம் யோசிப்போம்.
*பகை, போட்டி, பொறாமை, பேராசை, ஈகோ இவை எல்லாம் தேவை இல்லாத baggage கள்*. எப்போது யார் போய்ச் சேருவார்கள் என்று தெரியாது. அப்புறம் 'ச்சே, நேத்து கூடப் பார்த்தேனே, பழசை எல்லாம் மறந்துட்டு கொஞ்சம் சிரிச்சுப் பேசி இருக்கலாமே' என்று அங்கலாய்ப்பதில் பொருள் இல்லை.
*நிகழ்காலத்தில் வாழ்வது*. மேலே சொன்னது போல நாம் போடும் 'முப்பது வருடத் திட்டத்தைப்' பார்த்து மெல்லப் புன்னகைக்கிறது முதுகின் பின் ஒளிந்து கொண்டிருக்கும் நம் மரணம்.
*தொலையாத கவலைகள்*. உலகின் பாரத்தை எல்லாம் நம் தோள் மீதி ஏற்றியது போலத் தூக்கிச் சுமக்கும் கவலைகள். 'செத்ததற்கு அப்புறம் என் குடும்பம் என்ன செய்யும்?' என்பது போன்ற கவலைகள். reality என்ன வென்றால் 'they will be just fine!'. நம்மால் தான் எல்லாம் நடக்கிறது என்ற நினைப்பைத் தூரப் போடுவோம்.
*'அழவா இங்கே வந்தோம்? ஆடு பாடு ஆனந்தமா!'*
*பற்றின்மை:* பொருட்களை நாம் உபயோகிக்கலாம். பொருட்கள் நம்மை உபயோகிக்கத் துவங்கும் புள்ளியை அறிந்து கொண்டு ஒரு கும்பிடு போட்டு விலகி நின்று விட வேண்டும். இந்த நிமிடம் மரணம் வந்து அழைக்கும் போது 'சரி, வா, போகலாம்' என்று உதறி விட்டுச் செல்லும் பக்குவம் வேண்டும்.
*நன்றி உணர்ச்சி:* நிலையற்ற வாழ்வில் நமக்குக் கிடைக்கும் ஒவ்வொரு நாளும் ஒரு மகத்தான பரிசு தான் என்று தோன்றுகிறது. 'இன்று நான் படுக்கையில் இருந்து எழுந்து விட்டேன், வரவிருக்கும் இந்த நாளுக்கு நன்றி' என்று எழுந்திருக்கும் போதும், 'இன்று ஒரு நாளை நான் கடத்தி விட்டேன், இன்றைய நாளுக்கு நன்றி' என்று இறைவனுக்கோ, பிரபஞ்சத்துக்கோ நன்றி சொல்லத் தெரிந்திருத்தல். ஒவ்வொரு தினத்தையும் வாழ்வின் கடைசித் தினம் போல வாழப் பழகிக் கொள்ளுதல்.
*பகிர்ந்து கொள்ளுதல்*, உதவி செய்தல், தேவைப் படுபவர்களுக்குக் கரம் நீட்டுதல், உயிர்களிடத்தில் அன்பு.
*கடவுள் நம்பிக்கை.* இது ஒருவிதத்தில் ஆத்திகர்களின் advantage. 'காலா, உன்னைக் காலால் எட்டி உதைப்பேன்' என்னும் தைரியத்தைத் தரும் நம்பிக்கை. 'அவன் பார்த்துக் கொள்வான், இம்மையிலும், மறுமையிலும் என்னைச் சரியான இடத்துக்கு அவன் கூட்டிச் செல்வான்' என்ற திட நம்பிக்கை. மரணமும் இவர்களுக்கு 'This is but a scratch'!!!
*மரணத்தின் போது ஒரு நிமிடத்தில் நம் வாழ்க்கை முழுவதும் நம் கண் முன்பு ஒரு திரைப்படம் போல பிளாஷ் ஆகுமாம்.*
*அப்போது அந்தத் திரைப்படம் பார்ப்பதற்குச் சிறந்த ஒரு 'feel-good movie' யாக இருக்க வேண்டாமா?*
யோசிப்போம்!
#punith
சனி, 30 அக்டோபர், 2021
இளம் பகவத் I.A.S.இல்லம் தேடிக்கல்வி சிறப்புப் பணி அலுவலர்.*
வெற்றி பெறத் துடிக்கும் மாணவர்களின் தன்னம்பிக்கை சான்று. .
மாணவர்களிடம் கொண்டு சேர்ப்போம் அவசியம்
இல்லம் தேடிக்கல்வி சிறப்புப் பணி அலுவலர்.*
*- இளம் பகவத் I.A.S.*
இளம்பகவத்தின் சொந்த கிராமம், சோழன்குடிகாடு. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகில் இருக்கும் சிறிய கிராமம். படித்தது எல்லாம் அரசுப் பள்ளி, தமிழ்வழிக் கல்வி. சென்ற வாரம் வெளியான சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகளில் இளம்பகவத்தின் அகில இந்திய ரேங்க் 117. `இதில் என்ன விசேஷம் இருக்கிறது?' எனத் தோன்றலாம். இளம்பகவத் ஏன் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதினார் என்ற காரணம்தான் இதற்கான விடை.
இளம்பகவத் ஒரு சாதாரண விவசாயக் குடும்பப் பிள்ளை. இவருடைய அப்பா கந்தசாமி, சோழன்குடிகாடு கிராமத்தின் முதல் பட்டதாரி. பல்வேறு சமூக இயக்கங்களில் தீவிர ஈடுபாடுகொண்டவர். வருவாய்த் துறையில் கிராம நிர்வாக அலுவலராகப் பணியாற்றியவர். நேர்மையாகவும் உண்மையாகவும் பணிபுரிந்த ஓர் அரசு ஊழியர். இளம்பகவத்தின் தாயாரும் ஒரு பொதுவுடமைப் போராளி. உழைக்கும் பெண்களின் நலனுக்காக, தொடர்ச்சியாகப் பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தும் பங்கெடுத்தவர். இப்படி ஒரு நல்ல சூழலில் வளர்ந்தவர் இளம்பகவத்.
ப்ளஸ் டூ நேரத்தில் இளம்பகவத்தின் அப்பா உடல்நலம் இன்றி இறந்துபோனார். ஒற்றை நபர் வருமானத்தில் இயங்கிய குடும்பம் தடுமாறி நின்றது. ப்ளஸ் டூ-வுடன் தன் படிப்பை நிறுத்திக்கொள்ளவேண்டிய கட்டாயம் இளம்பகவத்துக்கு.
அரசுப் பணியில் இருப்பவர் இறந்துபோனால் அவரது வாரிசு ஒருவருக்கு, கருணை அடிப்படையில் கொடுக்கப்படும் அரசுப் பணியை தனக்கு வழங்கிடக்கோரி, தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்தார் இளம்பகவத். இது நடந்தது 1998-ம் ஆண்டு. ஓர் ஆண்டு காலம் கடந்தும் எதுவும் நடக்கவில்லை. சான்றிதழ்கள் அரசாங்க அலுவலக பீரோக்களில் முடங்கியதால் கல்லூரியிலும் சேர முடியவில்லை. திடீரென அழைப்பு வரும். குறிப்பிட்ட ஒரு சான்றிதழைப் பெற்றுத்தரச் சொல்வார்கள். அவசர, அவசரமாக அதைத் தயார்செய்துகொண்டு ஓடுவார். மீண்டும் காத்திருக்கச் சொல்வார்கள். அரசு அலுவலகங்களில் காத்திருப்பது இளம்பகவத்துக்கு தினசரி வேலையானது. வேலை மட்டும் கிடைக்கவே இல்லை.
தன் தந்தை கற்றுக்கொடுத்த நேர்மை இவரை மாற்றுவழிகளுக்கு இட்டுச்செல்லவில்லை. சில ஆயிரங்கள் கொடுத்திருந்தால், இவருக்கு வேலை கிடைத்திருக்கும். ஆனால், அதற்கு இவர் தயாராக இல்லை. தனக்கான உரிமைக்காக ஒவ்வொரு நாளும் போராடினார். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் நீண்ட வராண்டா இவருடைய வசிப்பிடமாக மாறியது. அடுத்த ஏழு ஆண்டுகளுக்கு இந்தப் போராட்டம் தொடர்ந்தது.
‘`வாரிசு அடிப்படையிலான கருணைப் பணிக்கு, எனக்கு முன்னும் பின்னும் 18 பேர் காத்திருந்தனர். சிலர், இடையில் புகுந்து குறுக்கு வழியில் வேலை வாங்கிச்சென்றனர். எங்களுக்குப் பிறகு வந்த அவர்களுக்கு எப்படி வேலை கிடைத்தது என்ற கேள்விக்கு, யாரிடமும் பதில் இல்லை. வேலை கிடைக்காமல் காத்திருந்த நாங்கள் எல்லோரும் ஒன்றுசேர்ந்து ஆலோசனை நடத்தினோம். அப்போதுதான் நாங்கள் ஏமாற்றப்படுவதை உணர்ந்தோம்’’ என்று அந்தக் கொடும் தினங்களை நினைவுகூர்கிறார் இளம்பகவத்.
ஒருகட்டத்தில் சலித்துப்போனவர், மாவட்ட ஆட்சியர் தொடங்கி உயர் அதிகாரிகள் வரை சகலரையும் பார்த்து புகார் மனு கொடுக்க ஆரம்பித்தார்.
‘`நாம் யாரைப் பற்றி புகார் கூறுகிறோமோ, அவரிடமே அந்தப் புகார் மனு போய்ச்சேரும். ஒரு மாதம் கழித்து மட்டித்தாளில் ஒரு பதில் வரும். `உங்கள் கோரிக்கை பரிசீலனையில் இருக்கிறது'. மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முதல் தலைமைச் செயலகம் வரை இதே அனுபவம்தான். ஒருசில விதிவிலக்குகள் இருக்கலாம். ஆனால் எனக்குக் கிடைத்த அனுபவங்கள் எல்லாமே மிக மோசமானவை’’ என்கிறார் இளம்பகவத்.
அப்பாவின் நிலத்தில் விவசாயம் பார்த்து அதில் கிடைத்த வருமானத்திலும், அப்பாவின் சிறிய பென்ஷனிலும்தான் குடும்பம் நகர்ந்துகொண்டிருந்தது. இந்தக் காலகட்டத்தில் குடும்பம் வறுமையின் பிடியில் சிக்கித்தவித்தது. இரண்டு சகோதரிகளுக்கும் திருமண வயது வந்துவிட, அவர்களுக்கு திருமணம் செய்துவைக்கவேண்டிய நிலை. இதற்கு நடுவில் 2001-ம் ஆண்டு சென்னைப் பல்கலைக்கழகத் தொலைதூரக் கல்வி நிறுவனத்தில் அஞ்சல் வழியில் பி.ஏ (வரலாறு) படித்து பட்டம் பெற்றார் இளம்பகவத்.
2005-ம் ஆண்டு வாக்கில் இந்தப் போராட்டம் இளம்பகவத்துக்கு சலிப்பை உண்டாக்கத் தொடங்கியது. இனி எதுவுமே நடக்காது; வேலை கிடைக்காது என்ற முடிவுக்கு வந்தார். `இந்த வேலை வேண்டாம், இந்த முயற்சிகள் போதும்' என நினைத்தார்.
`இனி இந்த அலுவலகத்துக்குத் திரும்பி வந்தால், இவர்களிடம் வேலை கேட்டு வரக் கூடாது. வேலை வாங்குகிறவனாகத்தான் வரவேண்டும்’ எனத் தீர்மானித்தார். அப்போது இளம்பகவத்தின் மனதுக்குள் விழுந்ததுதான் ஐ.ஏ.எஸ் கனவு. ஆனால், அதுவும் அத்தனை சுலமாக நிறைவேறிவிடவில்லை.
‘`என் லட்சியத்தை நிறைவேற்றிக்கொள்ளும் பயணம் நீண்டது என்பதை நான் அறிந்திருந்தேன். அதற்காக என் குடும்பத்தை பத்து ஆண்டுகளுக்கு வறுமையில் வைத்திருக்க எனக்கு விருப்பம் இல்லை. அதனால் ஏதாவது ஓர் அரசு வேலையில் சேர்ந்துவிட்டு அங்கிருந்து ஐ.ஏ.எஸ் ஆவது என முடிவு எடுத்தேன்’’ என்கிறார் இளம்பகவத்.
2007-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-4 தேர்வு எழுதினார். அதில் வெற்றிபெற்று காவல் துறை அமைச்சுப் பணியில் இளநிலை உதவியாளர் பதவி ஏற்றார். அடுத்த ஆறு மாதங்களில் குரூப்-2 தேர்வு எழுதி, சென்னை தலைமைச் செயலகத்தில் உதவியாளர் ஆனார். அங்கு இருந்து உள்ளாட்சி நிதி உதவி தணிக்கை ஆய்வாளராகப் பணியில் சேர்ந்தார். இதற்கு நடுவில் 2010-ம் ஆண்டில்
குரூப்-2 தேர்வில் வெற்றிபெற்று, இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் பணியில் சேர்ந்தார். 2011-ம் ஆண்டில் டி.என்.பி.எஸ்.சி குரூப்-1 தேர்வில் தேர்ச்சி பெற்று, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர் ஆனார். 2014-ம் ஆண்டு சிவில் சர்வீஸஸ் தேர்வில் வெற்றிபெற்றபோது ஐ.ஆர்.எஸ் (இந்திய வருவாய் பணி) பணி கிடைத்தது. இதற்கு இடையே, மீண்டும் டி.என்.பி.எஸ்.சி குரூப் -1 தேர்வில் வெற்றிபெற்று போலீஸ் டி.எஸ்.பி பணி கிடைத்தது. அடுத்த ஆறு மாதங்கள் டி.எஸ்.பி பயிற்சியில் இருந்த இவர், அதன் பிறகு ஹரியானா மாநிலத்தில் உள்ள நேஷனல் அகாடமி ஆஃப் கஸ்டம்ஸ் அண்ட் எக்சைஸ், நார்காட்டிக்ஸ் மையத்தில் பயிற்சியில் சேர்ந்தார். இப்படி 2007-ம் ஆண்டு தொடங்கி 2016-ம் ஆண்டு வரை ஏழு அரசு அலுவலகங்களில் பணியாற்றினார் இளம்பகவத். ஒரே ஓர் அரசுப் பணிக்காக ஆண்டுக்கணக்கில் காத்திருந்த இவரை நோக்கி விதவிதமான அரசுப் பணிகள் தேடிவந்தன. ஆனால், அவரது லட்சியம் அது அல்ல... ஐ.ஏ.எஸ்!
2005-ம் ஆண்டு தொடங்கி கடந்த ஆண்டு வரை ஒவ்வோர் ஆண்டும் சிவில் சர்வீஸஸ் தேர்வை அவர் எழுதிக்கொண்டே இருந்தார். இதுவரை மொத்தம் ஐந்து முறை நேர்முகத் தேர்வு வரை சென்று வந்துள்ளார். ஆனால், ஒருமுறைகூடத் தகுதி பெறவில்லை. இருந்தும் மனம் தளரவில்லை. ஒருவழியாக இந்த ஆண்டு தன் கனவை எட்டிவிட்டார். அகில இந்திய அளவில் 117-வது ரேங்க் பெற்றிருக்கும் இளம்பகவத், சிவில் சர்வீஸஸ் தேர்வை, தமிழில் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘`நான் ஆண்டுக்கணக்கில் கிடையாய்க் கிடந்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்றிருந்தேன். இப்போது அந்த இடம் அருங்காட்சியகமாக மாறிவிட்டது. அதன் நீண்ட வராண்டாவில் அமர்ந்திருந்தேன். எத்தனையோ நாட்கள், வாரங்கள், ஆண்டுகள் அங்கே அமர்ந்திருக்கிறேன். காத்திருந்து காத்திருந்து சலித்திருக்கிறேன். ஆனால், இப்போது நான் ஒரு நல்ல இடத்தில் இருக்கிறேன். அதற்குக் காரணம் இந்த இடம்தான். ஒருவேளை அன்று எனக்கு என் அப்பாவின் வேலையைக் கொடுத்திருந்தால், நான் இன்று இந்த நிலைக்கு வந்திருக்க முடியுமா எனத் தெரியவில்லை. அன்று நான் சந்தித்த அவமானங்களும் வலிகளும்தான் என்னை இங்கு கொண்டுவந்திருக்கின்றன’’ எனப் புன்னகைக்கிறார் இளம்பகவத்.
இளம்பகவத், தன் திறமையை தனக்கு மட்டுமே பயன்படுத்திக்கொள்பவர் அல்ல; ஊருக்காக உழைக்கும் பொதுவுடைமை வாழ்க்கைமுறையைக் கொண்ட குடும்பத்தில் இருந்து வந்தவர், மற்றவர்களுக்காகவும் சிந்திப்பவர்.
தன் கிராமத்தில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்து பல ஆண்டுகளாக வைத்திருக்கிறார். தானும் தன் நண்பர்களும் படிப்பதற்காக வாங்கிய அத்தனை நூல்களையும் இந்த அறையில் வைத்திருக்கிறார். இவற்றை போட்டித் தேர்வுகளுக்கு முயற்சிசெய்யும் எவர் வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
‘`அந்த அறைக்கு எத்தனை சாவிகள் இருக்கின்றன என்றுகூட எனக்குத் தெரியாது. வாடகை மட்டும் கொடுத்து விடுவோம். கூடவே வேண்டிய நூல்களையும், படிப்பதற்கான உதவிகளையும் செய்வோம்’’ என்கிறார் இளம்பகவத். இன்று 30-க்கும் அதிகமான இளைஞர்கள் இவருடைய படிப்பகத்தின் மூலம் படித்து அரசுப் பணிகளில் இருக்கிறார்கள்.
‘`நாம் கற்கும் கல்வி, பகிர்தலைத்தான் நமக்குக் கற்றுத்தருகிறது. நாம் செய்ய வேண்டியதும் அதைத்தான்'’ எனப் புன்னகைக்கிறார்
*இளம் ஐ.ஏ.எஸ்* *இளம்பகவத்!*
ஆசிரியர்கள், அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டிய சொத்து , கடன் விவரம் & படிவம் - FORM- PDF
இதை படித்தால் போதும் சந்தேகமேஇல்லாமல் படிவம் நிரப்ப. .
ஆசிரியர்கள், அலுவலர்கள் சமர்ப்பிக்க வேண்டிய சொத்து , கடன் விவரம் & படிவம் - FORM- PDF
இல்லம் தேடி கல்வி மாவட்ட வாரியான தன்னார்வலர்கள் பட்டியல்
இல்லம் தேடி கல்வி மாவட்ட வாரியான தன்னார்வலர்கள் பட்டியல்
முதலிடத்தில் எந்த மாவட்டம்??
முதுகலை பட்டதாரிகள் கூட. .
இல்லம் தேடி கல்வி மாவட்ட வாரியான தன்னார்வலர்கள் பட்டியல் click here
ஜாக்டோ -ஜீயோ போராட்ட கால நிலுவைத்தொகையை கணக்கிடும் எளியமுறை
போராட்ட கால
நிலுவைத்தொகையை
கணக்கிடும் முறை
நண்பர்களே கீழே உள்ள 3 file யும் model ஆக பயன்படுத்திக் கொள்ளவும்.
XL sheet இல் நாட்கள் எனுமிடத்தில் வருகை புரிந்த நாட்களை பதிவிடவும்.
Increment column நேராக மட்டும் எவ்வளவு நாட்கள் இன்கிரிமெண்ட் தள்ளிப்போனது அந்த நாளை பதிவிடவும்.
ஒவ்வொருவருக்கும் increment month மாறலாம்.
01.04.2019 increment உள்ளவர்களுக்கு 12 % , எனவும் 1.07, 01.10, 01.01.2020 increment உள்ளவர்களுக்கு 17 % என பதிவிட்டால் due மற்றும் drawn automatic ஆக வரும்.
ஒவ்வொருவருக்கும் அம்மாதத்தில் பெற வேண்டிய ஊதியத்தை பதிவிட வேண்டும்.
MA and HRA manual enter ஆக கொடுக்கப்பட்டுள்ளது.
உங்களுக்கு ஏற்றார்போல் மாற்றிக்கொண்டு பட்டியலைத் தயார் செய்யுங்கள்.fwd msg
கடிதம் -1
கடிதம் -2
வெள்ளி, 29 அக்டோபர், 2021
1 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகள் செயல்படும் முறை குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் புதிய விளக்கம்
நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து 1 முதல் 8 வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுகின்றன என்று அமைச்சர் அன்பில் மகேஷ் விளக்கமளித்துள்ளார். காலையில் இருந்து மாலை வரை முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும். சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும்.
காலையிலிருந்து மாலை வரை வழக்கம்போல் முழு நேரமும் வகுப்புகள் நடைபெறும். தினமும் ஏற்கெனவே அறிவித்தபடி சுழற்சி முறையில் வகுப்புகள் நடைபெறும். அதாவது, திங்கள் கிழமை ஒரு வகுப்பிற்கு பாடம் நடத்தப்பட்டால் செவ்வாய் கிழமை அவர்களுக்கு விடுமுறை. மீண்டும் புதன்கிழமை அவர்கள் வரவேண்டும்.
எந்த வகுப்பினரை எந்த நாட்களில் வர வைக்க வேண்டும் என்பதை அந்த அந்த பள்ளி நிர்வாகமே முடிவு செய்து கொள்ளலாம். ஏனென்றால் ஒரு பள்ளியில் ஒரு வகுப்பறையில் வெவ்வேறு எண்ணிக்கையில் மாணவர்கள் இருப்பார்கள். எனவே அந்த எண்ணிக்கைக்கு ஏற்றவாறு அந்த அந்த பள்ளி மாணவர்களை திங்கள்கிழமை வரவைக்க வேண்டுமா? அல்லது செவ்வாய்க்கிழமை வரவழைக்க வேண்டுமா? என்பதை அவர்களே முடிவு செய்து கொள்ளலாம். இதுபோன்று ஒரு வகுப்பிற்கு ஒருநாள் விட்டு ஒருநாள் வகுப்புகள் நடைபெறும்.
ஒரு வகுப்பறையில் 20 மாணவ மாணவிகள் மட்டுமே இருக்கும் வகையில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட வேண்டும். மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டியதில்லை. பெற்றோர் விருப்பத்தின் அடிப்படையில் அனுப்பலாம். வழக்கம்போல் சத்துணவு வழங்கப்படும். ஆன்லைன் வழியில் கல்வி தேவைப்படுவோர் தொடர்ந்து ஆன்லைனில் படிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகளில் வழக்கம் போல் சத்துணவு வழங்கப்படும். ஆன்லைன் வழியில் கல்வி தேவைப்படும் மாணவர்கள் தொடர்ந்து ஆன்லைனில் படிக்கலாம் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மதுரையில் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
State Bank of India வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா? - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு
State Bank of India வங்கியில் கணக்கு வைத்துள்ளீர்களா? - உங்களுக்கான முக்கிய அறிவிப்பு.. ஆப்பா? OFFER ஆ?
state bank of india
வங்கி சேவையில் மிகச் சிறந்த சலுகைகளை வழங்கிக் கொண்டிருக்கும் எஸ்பிஐ வங்கியின் ஏடிஎம் கட்டண விதிமுறைகளை பற்றி இங்கே தெரிந்துக் கொள்ளுங்கள்
சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மாதத்துக்கு 3 மூறை மட்டும் கட்டணம் இல்லாமல் பணத்தை டெபாசிட் செய்ய முடியும். அதற்கு மேல் ஒரு டெபாசிட்டுக்கு 50 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) கட்டணம் செலுத்த வேண்டும். கணக்கு தொடங்கிய வங்கிக் கிளையைத் தவிர வேறு கிளைகளில், ஒரு நாளில் அதிகபட்சம் 2 லட்சம் ரூபாய் வரை மட்டும் டெபாசிட் செய்யலாம். அதற்கு மேல் டெபாசிட் தொகையை ஏற்பது பற்றி அந்த கிளையின் மேலாளர் முடிவு செய்வார்.
எஸ்பிஐ சேமிப்புக் கணக்கில் மாதாந்திர இருப்புத் தொகை சராசரி குறைந்தபட்சம் 5000 ரூபாயில் இருந்து 3000 ரூபாயாகக் குறைகிறது. இந்த மினிமம் பேலன்ஸ் அளவு 50 சதவீதம் (ரூ.1,500) வரை குறைந்தால் 10 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) அபராதமாகக் கழிக்கப்படும். 75 சதவீதம் வரை குறைந்தால் 15 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) அபராதம் வசூலிக்கப்படும்.
இந்த அபராதத் தொகை தற்போது 30 ரூபாய் 50 ரூபாய் வரை (ஜிஎஸ்டி தனி) இருக்கிறது. குறைந்தபட்ச இருப்புத் தொகை சிறிய நகரங்களில் 2,000 ரூபாயாகவும் கிராமங்களில் 1000 ரூபாயாகவும் இருக்கும்.
25,000 ரூபாய் வரை மாதாந்திர இருப்புத் தொகை சராசரி கொண்ட சேமிப்புக் கணக்கு வாடிக்கையாளர்கள் மாதம் 5 முறை (பண எடுப்பது மட்டுமின்றி இதர பயன்பாடுகளும் சேர்த்து) கட்டணம் இல்லாமல் எஸ்பிஐ ஏடிஎம்மில் பணம் எடுக்கலாம். 25 ஆயிரத்துக்கு மேல் மாதாந்திர இருப்புத் தொகை சராசரி கொண்டிருந்தால் எந்த கட்டுப்பாடும் இல்லை.
போதிய இருப்புத் தொகை இல்லாமல் ஏடிஎம் பரிவர்த்தனை தோல்வியில் முடிந்தாலும் 20 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) கட்டணம் உண்டு. சாதாரண டெபிட் கார்டை இலவசமாகவே வழங்குகிறது. ஆனால், கோல்டு டெபிட் கார்டு பெற 100 ரூபாயும் (ஜிஎஸ்டி தனி) பிளாட்டினம் டெபிட் கார்டு வாங்க 300 ரூபாய் (ஜிஎஸ்டி தனி) வழங்க வேண்டும்.
*2020-21 ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தற்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது*
2020-21 ஆம் ஆண்டிற்கான CPS ACCOUNT STATEMENT தற்போது இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது*
வியாழன், 28 அக்டோபர், 2021
_*பள்ளிக் கல்வி - தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973 - சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையை சமர்ப்பிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - இணைப்பு: மனித வள மேலாண்மைத் துறையின் கடிதம்!!!*_
_*பள்ளிக் கல்வி - தமிழ்நாடு அரசுப் பணியாளர் நடத்தை விதிகள் 1973 - சொத்து மற்றும் கடன் விவர அறிக்கையை சமர்ப்பிக்க பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு - இணைப்பு: மனித வள மேலாண்மைத் துறையின் கடிதம்!!!*_
புதன், 27 அக்டோபர், 2021
DEPT EXAM RESULT TNPSC 2021
TNPSC தேர்வாணையம் மூலமாக துறை வாரியான பணியாளர்களுக்கு உரிய துறை தேர்வுகள் மற்றும் மொழித் தேர்வுகள் ஆகியவற்றிற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்கான தேர்வுகளும் கடந்த 24.08.2021 அன்று நடைபெற்றது.
தற்போது அதற்கான தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இந்த தேர்ச்சி பட்டியலில் தேர்வு செய்யப்பட்டுளோர் அடுத்த கட்டமாக VIVA VOCE தேர்வுகளில் கலந்து கொள்ள வேண்டும். தேர்ச்சி பெற்றோருக்கு அடுத்ததாக நடைபெற உள்ள வாய்மொழித் தேர்வில் கலந்து கொள்வதற்கான அழைப்பு விரைவில் வெளியாகும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதற்கான முழு விவரங்களையும் கீழே உள்ள இணைய முகவரி மூலம் பெற்றுக் கொள்ளலாம்.
TNPSC ad no 597 பி.எஸ்.சி கணிதம் பி.எஸ்.சி புள்ளிஇயல் மற்றும் பி.ஏபொருளாதாரம் படித்தவர்களுக்கு TNPSC தேர்வாணையம் மூலம் சுகாதாரத்துறையில் 200 இடங்கள் அதாவது வேக்சிங் செக்யூரிட்டி மற்றும் வட்டார சுகாதார புள்ளிஇயலார் போன்ற பதவிகளுக்கு வருகின்ற ஜனவரி மாதம் 9 ஆம் தேதி தேர்வு நடக்க உள்ளது. தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு ஏதுமி ல்லை.
பி.எஸ்.சி கணிதம் பி.எஸ்.சி புள்ளிஇயல் மற்றும் பி.ஏபொருளாதாரம் படித்தவர்களுக்கு TNPSC தேர்வாணையம் மூலம் சுகாதாரத்துறையில் 200 இடங்கள் அதாவது வேக்சிங் செக்யூரிட்டி மற்றும் வட்டார சுகாதார புள்ளிஇயலார் போன்ற பதவிகளுக்கு வருகின்ற ஜனவரி மாதம் 9 ஆம் தேதி தேர்வு நடக்க உள்ளது.
தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு ஏதுமி ல்லை.
advertisement. 597
TNPSC AD NO 596 பி.எஸ்.சி கணிதம் பி.எஸ்.சி புள்ளிஇயல் மற்றும் பி.ஏபொருளாதாரம் படித்தவர்களுக்கு TNPSC தேர்வாணையம் மூலம் சுகாதாரத்துறையில் 200 இடங்கள்
பி.எஸ்.சி கணிதம் பி.எஸ்.சி புள்ளிஇயல் மற்றும் பி.ஏபொருளாதாரம் படித்தவர்களுக்கு TNPSC தேர்வாணையம் மூலம் சுகாதாரத்துறையில் 200 இடங்கள் அதாவது வேக்சிங் செக்யூரிட்டி மற்றும் வட்டார சுகாதார புள்ளிஇயலார் போன்ற பதவிகளுக்கு வருகின்ற ஜனவரி மாதம் 9 ஆம் தேதி தேர்வு நடக்க உள்ளது.
தேர்வுக்கு அதிகபட்ச வயது வரம்பு ஏதுமி ல்லை.
advertisement 596
செவ்வாய், 26 அக்டோபர், 2021
அரசு அலுவலர்கள் பணி ஏற்பு முதல் பணி ஓய்வு வரை பணபலன்கள் பெற IFHRMS முழு கையேடு தமிழில்
அரசு அலுவலர்கள் பணி ஏற்பு முதல் பணி ஓய்வு வரை பணபலன்கள் பெற IFHRMS முழு கையேடு தமிழில்
திங்கள், 25 அக்டோபர், 2021
_*வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கு கொண்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக முறைப்படுத்தி உரிய பதிவுகள் பணிப்பதிவேட்டில் மேற்கொண்டு அதற்கான பணப் பலன்களை பெற்று வழங்க தலைமையாசிரியர்களுக்கு கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!!*_ ☝️☝️☝️
_*வேலைநிறுத்தப் போராட்டத்தில் பங்கு கொண்ட ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக முறைப்படுத்தி உரிய பதிவுகள் பணிப்பதிவேட்டில் மேற்கொண்டு அதற்கான பணப் பலன்களை பெற்று வழங்க தலைமையாசிரியர்களுக்கு கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு!!!*_
☝️☝️☝️click here
முதல்வரின் ( புதிய )காப்பீட்டு திட்டத்தில் இணைவது எப்படி
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
இந்த மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சேர பல்வேறு அடிப்படை தகுதிகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணைய குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72 ஆயிரத்துக்கு குறைவாக இருக்க வேண்டும். காப்பீட்டு திட்டத்தில் இணைய விரும்புபவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடம் வருமான சான்று பெற்று குடும்ப அட்டையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட மையத்தில்அளிக்க வேண்டும்.
மனுதாரர்கள் அளித்துள்ள விவரங்களை பரிசீலித்து தகுதியுடைய நபர்கள் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கப்படுவர். ஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி, அவர்களது குழந்தைகள் மற்றும் பெற்றோர் ஆகியோர் முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் சிகிச்சை பெறலாம். அவர்களது பெயர்கள் அனைத்தும் குடும்ப அட்டையில் இடம் பெற்று இருக்க வேண்டும்.
மற்ற மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு வந்து 6 மாதங்களுக்கு மேல் தங்கி இருப்பவர்களும் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையலாம். அவர்கள் தமிழ்நாடு தொழில் துறையிடம் இருந்து சான்று பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
தமிழக முகாம்களில் உள்ள இலங்கையை சேர்ந்த தமிழர்கள் முகாம்களில் தங்கி இருப்பதற்கான சான்றுகளை இணைத்து எந்தவொரு வருமான சான்றும் இல்லாமல் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டமானது தமிழகத்தில் கடந்த 2012-ம் ஆண்டு ஜனவரி 11-ந் தேதி நடைமுறைக்கு வந்தது.
இதுவரை இந்த திட்டத்தின் கீழ் அனைத்து மாவட்டங்களை சேர்ந்தவர்களும் பயன் பெற்றுள்ளனர்.
சென்னையில் 1.95 லட்சம் பேரும், கோவை மாவட்டத்தில் 1.47 லட்சம் பேரும், காஞ்சீபுரத்தில் 1.46 லட்சம் பேரும், விழுப்புரத்தில் 1.33 லட்சம் பேரும், வேலூரில் 1.35 லட்சம் பேரும், திருவள்ளூரில் 1.43 லட்சம் பேரும், சேலத்தில் 1.38 லட்சம் பேரும், ஈரோட்டில் 1.10 லட்சம் பேரும், மதுரையில் 1.37 லட்சம் பேரும், நெல்லை மாவட்டத்தில் 1.01 லட்சம் பேரும் பயன் பெற்றுள்ளனர்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 80 ஆயிரம் முதல் 95 ஆயிரம் பேர் வரை சிகிச்சை பெற்றுள்ளனர்.
#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS
தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...
-
11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு -2024 மாதிரி வினாத்தாள் -1 விடைக்குறிப்பு* (கூடுதல் குறிப்புகளுடன் )
-
11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு -2024 மாதிரி வினாத்தாள் -2 விடைக்குறிப்பு* (கூடுதல் குறிப்புகளுடன் )
-
1. தென்மொழி ,தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை ஊட்டியவர் யார் ? அ)பாவலரேறு பெருஞ்சித்திரனார் 2.வேர்க்கடலை ,மிளகாய் விதை, ம...