ஞாயிறு, 24 அக்டோபர், 2021

#கீழடி விசைப்பலகை" மற்றும் "தமிழி ஒருங்குறி மாற்றி" பற்றிய ஒரு எளிய அறிமுகம்

 


தமிழக அரசு புதிதாக அறிமுகம் செய்துள்ள "கீழடி விசைப்பலகை" மற்றும் "தமிழி ஒருங்குறி மாற்றி" பற்றிய ஒரு எளிய அறிமுகம். 
கீழடி விசைப்பலகை பற்றி  :   தமிழ் Type Writing  தெரியாதவர்களுக்கும் அனைத்துவிதமான ஒருங்குறி (unicode font) ஃபாண்டுகளிலும் டைப் செய்வதற்கு  மிகப்பெரிய வரமாக இந்த செயலி இருக்க போகிறது.  ஏற்கனவே  indiclabs.in நிறுவனம் வெளியிட்டுள்ள NHM Writer ன் Limited Edition ஆக, தமிழ் மொழிக்கென மட்டும் பிரத்தியேகமாக,  அதே நிறுவனத்தின் மூலம்  தயாரிக்கப்பட்டு  இந்த விசைப்பலகை  தற்போது தமிழக அரசினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.  இந்த விசைப்பலகையின் சிறப்பு என்னவென்றால்,   ஆங்கிலத்தில் தமிழ் உச்சரிப்பை (Phonetic Transliteration) டைப் செய்வதன் மூலம் தமிழ் எழுத்துக்களை / வார்த்தைகளை  நாம்  மிக மிக எளிதாக டைப் செய்யலாம். உதாரணத்திற்கு,  “அம்மா” என்ற வார்த்தைக்கு ஆங்கில keyboard இல் “ammaa" என்று மாத்திரம் டைப் செய்தால் போதுமானது.  நண்பர்களுக்கு நாம் தங்கிளீஸில் டைப் செய்வதை அப்படியே தமிழில் டைப் செய்ய பயன்படுத்தலாம் என்பது இந்த செயலியின் சிறப்பாகும்.
கீழடி விசைப்பலகையை பயன்படுத்துவது எப்படி ? 
1. முதலில் உங்கள் கணினியில்  http://www.tamilvu.org/ta/unicode என்ற இணையதளத்திற்கு சென்று  கீழடி விசைப்பலகையை (சுமார் 2.5 mb) தரவிறக்கம் செய்யவும்.  
2.  ஆங்கிலத்தில் தமிழ் உச்சரிப்பை (Phonetic Transliteration) டைப் செய்வதற்கு,  “ALT”  மற்றும்  ”2” பட்டன்களை ஒரே நேரத்தில் அழுத்தி விடவும். இப்போது  நீங்கள் எந்த ஆங்கில எழுத்தை அழுத்தினாலும் அதற்கு சமமான தமிழ் எழுத்து திரையில் டைப் ஆவதைப் பார்க்க முடியும். உதாரணத்திற்கு  “அம்மா” என்ற வார்த்தைக்கு ஆங்கில keyboard இல் “ammaa" என்று மாத்திரம் டைப் செய்தால் போதுமானது.    (மறுபடியும் ஆங்கில மொழியில் டைப் செய்ய அதே  “ALT”  மற்றும்  ”2” பட்டன்களை அழுத்தவும்)
3. "ணகரம்”, “ளகரம்”  போன்றவற்றை டைப் செய்வதற்கு மட்டும்   SHIFT Key ஐ பயன்படுத்தவும். 

 "தமிழி ஒருங்குறி மாற்றி" பற்றி  :   ஒருங்குறியல்லாத   ஃபாண்டுகளை ஒருங்குறி (unicode font) ஆக மாற்றுவதற்கு இந்த செயலி மிகவும் உதவியாக இருக்கும்.  குறிப்பாக வானவில் அவ்வையார் போன்ற ஒருங்குறியல்லாத   ஃபாண்டுகளை மிகத் துல்லியமாக  ஒருங்குறி (unicode font) ஆக  இந்த செயலியின் மூலம் மாற்றலாம். இந்த செயலியையும் (சுமார் 12 mb) http://www.tamilvu.org/ta/unicode
என்ற இணையதளத்திற்கு சென்று பதிவிறக்கம்  செய்துகொள்ளலாம்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here