PDF DOWNLOAD CLICK HERE
திங்கள், 31 ஜனவரி, 2022
ஞாயிறு, 30 ஜனவரி, 2022
சனி, 29 ஜனவரி, 2022
வெள்ளி, 28 ஜனவரி, 2022
EL SURRENDER 31.03..2022
ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு நிறுத்தி வைத்தல் - 31.03.2022 வரை நடைமுறையில் உள்ளது என அரசாணையில் திருத்தம்!!!
வியாழன், 27 ஜனவரி, 2022
ELECTION DUTY ஆசிரியர்களுக்கு தேர்தல் பயிற்சி 3Days
*🌎தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்களுக்கு 3 கட்ட பயிற்சி பிப்ரவரி 5, 12 மற்றும் 18 தேதிகளில் பயிற்சி முகாம் நடைபெறும்*
*மாநில தேர்தல் ஆணையம் தகவல் !!!.*
*3 கட்ட பயிற்சி முகாம், பொதுத்தேர்வு பணிகள் பாதிக்காத வகையில் தேவையான ஆசிரியர்களை விடுவிப்பது குறித்து தேர்வுத்துறை இயக்குநர்கள், இணை இயக்குநர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் ஆலோசனை !!!.*
*ஆலோசனை தொடங்கியது !!!.*
*நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவது தொடர்பாக தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா, இணை இயக்குநர்களுடன் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேரில் ஆலோசனை !!!.*
*சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் ஆலோசனை நடைபெற்று வருகிறது !!!.*
*முதலமைச்சருடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றுள்ளதால், மாநில தேர்தல் ஆணையரின் இந்த கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் பங்கேற்கவில்லை !!!.*
*இன்று மாலை 3 மணிக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் காணொலி காட்சி மூலமாக மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளருடன் ஆலோசனை நடத்தவுள்ளார் !!
செவ்வாய், 25 ஜனவரி, 2022
PG VACANCY LIST VERIFICATION 2022
*🛑💢2021-2022ஆம் ஆண்டு ஆசிரியர் பொது மாறுதல் - முதுகலை ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை EMIS இணையதளத்தில் சரிபார்த்தல் சார்ந்து பள்ளிக் கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்!*
TNPSC TAMIL வழூஉச் சொற்களும் திருத்தங்கள்
வழூஉச் சொற்களும் திருத்தங்கள்
1. கடகால் – கடைக்கால்
2. குடக்கூலி – குடிக்கூலி
3. முயற்சித்தார் – முயன்றார்
4. வண்ணாத்திப்பூச்சி – வண்ணத்துப்பூச்சி
5. வென்னீர் – வெந்நீர்
6. எண்ணை – எண்ணெய்
7. உசிர் – உயிர்
8. ஊரணி – ஊருணி
9. சிகப்பு – சிவப்பு
10. புண்ணாக்கு – பிண்ணாக்கு
11. கோர்வை – கோவை
12. வலதுபக்கம் – வலப்பக்கம்
13. தலைகாணி – தலையணை
14. வேர்வை – வியர்வை
15. சீயக்காய் – சிகைக்காய்
16. சுவற்றில் – சுவரில்
17. காவா – கால்வாய்
18. நாகரீகம் – நாகரிகம்
19. கயறு – கயிறு
20. அடயாளம் – அடையாளம்
21. அலமேலுமங்கை – அலர்மேல்மங்கை
22. அவரக்கா – அவரைக்காய்
23. அறுவறுப்பு – அருவருப்பு
24. அங்கிட்டு – அங்கு
25. இளநி – இளநீர்
26. இறச்சி – இறைச்சி
27. ஒசத்தி ஒயர்வு – உயர்வு
28. ஒண்டியாய் – ஒன்றியாய்
29. ஒண்டிக்குடித்தனம் – ஒன்றிக்குடித்தனம்
30. கவுளி – கவளி
31. கோர்த்து – கோத்து
32. சந்தணம் – சந்தனம்
33. பதட்டம் – பதற்றம்
34. புழக்கடை – புறக்கடை
35. மணத்தக்காளி – மணித்தக்காளி
36. வெங்கலம் – வெண்கலம்
37. வைக்கல் – வைக்கோல்
38. சாயங்காலம் – சாயுங்காலம்
39. அடமழை – அடைமழை
40. அடமானம் – அடைமானம்
41. அருவாமனை – அரிவாள்மனை
42. அண்ணாக்கயிறு – அரைஞாண்கயிறு
43. அமக்களம் – அமர்க்களம்
44. இத்தினை – இத்தனை
45. இத்துப்போதல் – இற்றுப்போதல்
46. உடமை – உடைமை
47. உந்தன் – உன்றன்
48. ஒம்பது – ஒன்பது
49. ஒருவள் – ஒருத்தி
50. கத்திரிக்காய் – கத்தரிக்காய்
51. கடப்பாறை – கட்ப்பாரை
52. கட்டிடம் – கட்டடம்
53. காக்கா – காக்கை
54. கருவேற்பிலை – கறிவேப்பிலை
55. கெடிகாரம் – கடிகாரம்
56. கோடாலி – கோடரி
57. சாம்பராணி – சாம்பிராணி
58. சிலது – சில
59. சிலவு – செலவு
60. தடுமாட்டம் – தடுமாற்றம்
61. தாப்பாள் – தாழ்ப்பாள்
62. துடப்பம் – துடைப்பம்
63. துவக்கம் – தொடக்கம்
64. துவக்கப்பள்ளி – தொடக்கப்பள்ளி
65. துளிர் – தளிர்
66. தொந்திரவு – தொந்தரவு
67. தேனீர்; – தேநீர்
68. நேத்து – நேற்று
69. நோம்பு – நோன்பு
70. நஞ்சை – நன்செய்
71. நாகறிகம் – நாகரிகம்
72. நாத்தம் – நாற்றம்
73. பண்டகசாலை – பண்டசாலை
74. பயிறு – பயறு
75. பாவக்காய் – பாகற்காய்
76. புஞ்சை – புன்செய்
77. பேரன் – பெயரன்
78. முழுங்கு – விழுங்கு
79. முழித்தான் – விழித்தான்
80. மெனக்கட்டு – வினைகெட்டு
81. மோர்ந்து – மோந்து
82. ரொம்ப – நிரம்ப
83. வயறு – வயிறு
84. வெண்ணை – வெண்ணெய்
85. வெய்யில் – வெயில்
86. வேண்டாம் – வேண்டா
87. வெட்டிப்பேச்சு – வெற்றுப்பேச்சு
88. தாவாரம் – தாழ்வாரம்
89. எடஞ்சல் – இடைஞ்சல்
90. எலிமிச்சம்பழம் – எலுமிச்சம்பழம்
91. கைமாறு – கைம்மாறு
92. தலகாணி – தலையணை
93. பொடைத்தாள் – புடைத்தாள்
94. அருகாமையில் – அருகில்
95. ஊரணி – ஊருணி
96. எண்ணை – எண்ணெய்
97. வெண்ணீர்; – வெந்நீர்
98. இன்னிக்கு – இன்றைக்கு
99. கழட்டு – கழற்று
100. துகை – தொகை
101. வத்தல் – வற்றல்
102. பசும்பால் – பசுப்பால்
103. வலது பக்கம் – வலப்பக்கம்
104. பேத்தி – பெயர்த்தி
105. தின்னீர் – திருநீறு
106. திருவாணி – திருகாணி
107. சாணி – சாணம்
108. இரும்பல் – இருமல்
109. காத்து – காற்று
110. புட்டு – பிட்டு
111. கவுனி – கவனி
112. இவையன்று – இவையல்ல
113. அனியாயம் – அநியாயம்
114. இடது பக்கம் – இடப்பக்கம்
115. உத்திரவு – உத்தரவு
116. எதுகள் – எவை
117. எந்தன் – என்றன்
118. (நெல்) குத்துதல் – (நெல்) குற்றுதல்
119. சோத்துப்பானை – சோற்றுப்பானை
120. பீத்தல் – பீற்றல்
121. புணையம் – பிணையம்
122. எல்லோரும் – எல்லாரும்
123. கத்திரிக்கோல் – கத்தரிக்கோல்
124. கர்ப்பூரம் – கருப்பூரம்
125. கோர்த்தான் – கோத்தான்
126. சித்தரித்தல் – சித்திரித்தல்
127. தேங்காய் முடி – தேங்காய் மூடி
128. தோற்கடித்தான் – தோல்வியுற அடித்தான்
129. விசாரி – உசாவு
130. நாழி – நாழிகை
131. பூசணிக்காய் – பூச்சுணைக்காய்
132. முகர்தல் – மோத்தல்
133. மென்மேலும் – மேன்மேலும்
134. அப்பாவி – அற்ப ஆவி
135. அமக்களம் – அமர்க்களம்
136. எல்கை – எல்லை
137. ஏழரை நாட்டுச் சனியன் – ஏழரை ஆட்டைச் சனியன்
138. களி கூறுங்கள் – களிகூருங்கள்
139. கம்மனாட்டி – கைம்பொண்டாட்டி
140. கழிசடை – கழியாடை
141. கிடாய் – கடா
142. கெவுளி – கௌ;ளி
143. சதை – தசை
144. சும்மாடு – சுடையடை
145. பயிறு – பயறு
146. பன்னிரெண்டு – பன்னிரண்டு
147. பாவக்காய் – பாகற்காய்
148. மார்வலி – மார்புவலி
149. முந்தாணி – முன்தானை
150. வெங்கலம் – வெண்கலம்
151. வேர்க்குரு – வேர்க்குறு
152. ஓரவத்தி – ஓரகத்தி
153. கண்றாவி – கண்ணராவி
154. கம்மாய் – கண்மாய்
155. சக்களத்தி – சகக்கிளத்தி
156. சில்லரை – சில்லறை
157. சின்னாபின்னம் – சின்னபின்னம்
158. நிச்சயதார்த்தம் – நிச்சியதார்த்தம்
159. மாதாமாதம் – மாதம்மாதம்
160. மிரட்டினார் – மருட்டினார்
161. வரேன் – வாரேன்
162. வராது – வாராது
163. வாத்தியார் – உபாத்தியாயர்
164. வாத்திச்சி – உபாத்தியாயினி
165. வாய்ப்பாடு – வாய்பாடு
166. வாவரசி – வாழ்வரசி
167. வியாதியஸ்தர் – வியாதிஸ்தர்
168. வெங்கடாசலம் – வேங்கடாசலம்
169. வெள்ளாமை – வேளாண்மை
170. மனது – மனம்
TNPSC TAMIL ஒருமை, பன்மை பிழை நீங்கிய தொடர்
ஒருமை, பன்மை பிழை நீங்கிய தொடர்
ஒரு பொருளை மட்டும் குறிப்பது ஒருமை,
ஒன்றுக்கு மேற்பட்ட பொருட்களைக் குறிப்பது பன்மை.
ஒருமை – பன்மை
புத்தகம் – புத்தகங்கள்
கால் – கால்கள்
மனிதர் – மனிதர்கள்
ஒருமை, பன்மை கொண்ட பெயர்ச்சொற்களை எழுதும்போது அவ்வவற்றிற்குத் தகுந்தாற்போல் வினைச்சொற்களைக் கொண்டு முடிக்க வேண்டும்.
(எ.கா) ‘மாடு மேய்கின்றன’ என்ற சொற்றொடரில் மாடு ஒருமை. ஒருமைப் பெயரைக் குறிக்கும்போது ‘மேய்கின்றன’ என்ற பன்மைப் பெயரைக் குறிக்கும். வினைச் சொல்லைப் பயன்படுத்துவது தவறு. ‘மேய்கிறது’ என்ற ஒருமைப் பெயரைக் குறிக்ககூடிய வினைச்சொல்லைப் பயன்படுத்த வேண்டும். ஆகவே
மாடு மேய்கின்றன – தவறு
மாடுகள் மேய்கின்றன – சரி
மாடு மேய்கிறது – சரி
வாக்கியங்களைப் பிழையின்றி எழுத சில இலக்கண நெறிகளைக் கையாள வேண்டும்.
1. உயர்திணை எழுவாய் உயர்திணைப் பயனிலையை பெற்று வரும். அதே போன்று அஃறிணை எழுவாய்க்குப் பின் அஃறிணை வினைமுற்றே (து.று) வரவேண்டும்
(எ.கா)
அவன் மிகவும் சிறந்தவன்
சுப்பன் மிக நல்லவன்
வண்டி வந்தது, கோழி கூவிற்று
2. எழுவாய் ஐம்பால்களுள் எதில் உள்ளதோ அதற்கேற்ற வினைமுற்றையே பயன்படுத்த வேண்டும்.
(எ.கா)
கோதை படித்தது – தவறு
கோதை படித்தாள் – சரி
3. ‘கள்’ விகுதி பெற்ற எழுவாய்,வினைமுற்றிலும் ‘கள்’ விகுதி பெறும். அதே போன்று எழுவாய் ‘அர்’ விகுதி பெற்றிருந்தால் மரியாதைப் பன்மை வினைமுற்றில் ‘ஆர்’ விகுதி வருதலும், பலர்பால் வினைமுற்றில் ‘அர்’ விகுதி வருதலும் தெரிந்து கொள்ளலாம்.
(எ.கா)
மாணவர்கள் தேர்வு எழுதினார் – தவறு
மாணவர்கள் தேர்வு எழுதினார்கள் – சரி
4. எழுவாய் ஒருமையாயின் வினைமுற்றும் ஒருமையாகவே இருக்க வேண்டும்
(எ.கா)
என் எழுதுகோல் இதுவல்ல – தவறு
என் எழுதுகோல் இது வன்று – சரி
5. தொடரில் காலத்தை உணர்த்தும் குறிப்புச் சொற்கள் இருப்பின் அதற்கேற்ற காலத்திலமைந்த வினைமுற்றையே எழுத வேண்டும்.(எ.கா)
தலைவர் நாளை வந்தார் – தவறு
தலைவர் நாளை வருவார் – சரி
6. கூறியது கூறல் ஒரே தொடரில் இடம்பெறக் கூடாது.
7. வாக்கியத்தில் உயர்திணை அஃறிணைப் பெயர்கள் கலந்து வந்தால், சிறப்புக் கருதின் உயர்திணைப் பயனிலை கொண்டும் இழிவு கருதின் அஃறிணைப் பயனிலை கொண்டும், வாக்கியத்தை முடிக்க வேண்டும்.
(எ.கா)
மூடனும் மாடும் குளத்தில் குளித்தனர் – தவறு
மூடனும் மாடும் குளத்தில் குளித்தன – சரி
8.உயர்திணை, அஃறிணைப் பெயர்கள் விரவி வந்தால், மிகுதி பற்றி ஒரு துணைவினை கொண்டு முடித்தல் வேண்டும்.(எ.கா)
ஆற்று வெள்ளத்தில் மக்களும் மரங்களும் குடிசைகளும் ஆடுமாடுகளும் மிதந்து சென்றனர் – தவறு
ஆற்று வெள்ளத்தில் மக்களும் மரங்களும் குடிசைகளும் ஆடுமாடுகளும் மிதந்து சென்றனர் – சரி
9. ‘ஒவ்வொரு’ என்னும் தொடர் ஒருமையையும் ஒவ்வொருவர் என்னும் தொடர் பன்மையையும் வினைமுற்றாகக் கொள்ளும்.
எ.கா
ஒவ்வொரு நிகழ்ச்சியும் சிறப்பாக அமைந்தது
ஒவ்வொன்றும் நாள்தோறும் வெடிக்கிறது
ஓவ்வொருவர்: ஒவ்வொருவர் எனும் தொடர் பன்மை வினைமுற்றை கொள்ளும்
ஒவ்வொருவரும் குறள் படிக்கின்றனர்
செல்வி, லதா, கீதாஞ்சலி ஒவ்வொருவரும் நன்கு படிக்கின்றனர்
ஒவ்வொரு நாலும் ஒவ்வொரு உண்மையை விளக்குகின்றது
ஒவ்வொரு – உயிர்மெய் முன் வரும்
ஒவ்வோர் – உயிர் முன் வரும்
10. ஐயம் காட்டும் ஓகாரம் வரும்போது பிரிப்புக்காக வரும் ‘ஆவது’ என்னும் சொல்லின் பின்னும் ‘அல்லது’ எனும் சொல் வருதல் கூடாது. வினைமுற்று ஒருமையாகவே முடியும்.
ஒன்றோ அல்லது இரண்டோ தருக (தவறு)
ஒன்றோ இரண்டோ தருக (சரி)
நாயாவது நரியாவது தின்றிருக்கும் (தவறு)
நாய் அல்லது நரி தின்றிருக்கும் (சரி) என்று தான் வர வேண்டும்
TNPSC TAMIL சந்திப்பிழை அறிதல்
சந்திப்பிழை அறிதல்
சந்திப் பிழையை நீக்குதல்
வல்லின எழுத்துக்கள் ஆறு – க், ச், ட், த், ப் இவைகளில் க், ச், த், ப் ஆகிய எழுத்துகள் மிகவும் வலிமையானவை. ட்,ற – ஆகிய இரண்டு எழுத்துகளும் மொழிக்கு முதலில் வர இயலாதவை வல்லினம் என்று அழைக்கப்படும்.
வல்லினம் மிகும் இடங்களும் மிகா இடங்களும் வல்லினம் மிகும் இடங்கள்
1. இரண்டாம் வேற்றுமை உருபிற்குப் பின் வல்லினம் மிகும் (ஐ)
குழந்தையை + கண்டேன்₌ குழந்தையைக் கண்டேன்
பொருளை + தேடு ₌ பொருளைத்தேடு
புலியை + கொன்றான் ₌ புலியைக் கொன்றான்
நூலை + படி ₌ நூலைப்படி
2. நான்காம் வேற்றுமை உருபிற்குப் பின் வல்லினம் மிகும்.
வீட்டிற்கு + சென்றான் ₌ வீட்டிற்குச் சென்றான்
கல்லூரிக்கு + போனாள் ₌ கல்லூரிக்குப் போனாள்
3. ஆறாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகும். ‘அது’ – மறைந்திருப்பது
தாமரை+ பூ ₌ தாமரைப்பூ
குதிரை + கால் ₌ குதிரைக்கால்
4. ஏழாம் வேற்றுமைத் தொகையில் வலி மிகும்.
குடி + பிறந்தார் ₌ குடிப்பிறந்தார்
வழி + சென்றார் ₌ வழிச்சென்றார்
5. வன்றொடர்க் குற்றியலுகரத்தின் பின் வல்லினம் வர மிகும் (வல்லெழுத்தை அடுத்து வந்த குற்றிலுகரம்)
பாக்கு + தூள் ₌ பாக்குத்தூள்
தச்சு + தொழில் ₌ தச்சுத்தொழில்
கேட்டு + கொடு ₌ கேட்டுக்கொடு
பத்து + பாட்டு ₌ பத்துப்பாட்டு
படிப்பு + செலவு ₌ படிப்புச்செலவு
பற்று + தொகை ₌ பற்றுத்தொகை
6. மென்தொடர்க் குற்றியலுகரத்தின் பின் சில இடங்களில் வல்லினம் மிகும்.
இரும்பு + தூள் ₌ இரும்புத்தூள்
மருந்து + கடை ₌ மருந்துக்கடை
கன்று + குட்டி ₌ கன்றுக்குட்டி
7. அ, இ, உ என்னும் சுட்டெழுத்துகளின் பின்னும் ‘எ’ என்னும் வினா எழுத்திற்குப் பின்னும் வலி மிகும்.
அ+ கடல் ₌ அக்கடல்
இ + பாடம் ₌ இப்பாடம்
உ + சிறுவன் ₌ உச்சிறுவன்
எ + தொழில் ₌ எத்தொழில்
8. சுட்டு, வினாக்களின் திரிபுகளான அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
அந்த + கிணறு ₌ அந்தக்கிணறு
இந்த +தமிழ் ₌ இந்தத்தமிழ்
எந்த + செயல் ₌ எந்தச்செயல்
9. அந்த, இந்த, அப்படி, இப்படி என்னும் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
அந்த + பையன் ₌ அந்தப்பையன்
இந்த + சிறுவன் ₌ இந்தச்சிறுவன்
அப்படி + செய் ₌ அப்படிச்செய்
இப்படி +பார் ₌ இப்படிப்பார்
10. எந்த, எப்படி, எங்கு என்ற வினாச் சொற்களின் பின் வல்லினம் மிகும்.
எங்கு + பார்த்தாய் ₌ எங்குப்பார்த்தாய்?
எப்படி + சாதித்தாய் ₌ எப்படிச்சாதித்தாய்?
எந்த + செடி ₌ எந்தச்செடி?
11. நிலைமொழி ஈற்றில் உயிரெழுத்து நிற்கää வருமொழி முதலில் வரும் வல்லினம் மிகுந்து ஒலிக்கும் (உயிரீற்றுச் சொற்களின் பின் வல்லினம் மிகும்)
நிலா+ சோறு ₌ நிலாச்சோறு
மழை+ காலம் ₌ மழைக்காலம்
பனி + துளி ₌ பனித்துளி
12. இருபெயரொட்டுப் பண்புத்தொகையில் வல்லினம் மிகும்
சாரை + பாம்பு ₌ சாரைப்பாம்பு
மார்கழி + திங்கள் ₌ மார்கழித்திங்கள்
மல்லி +பூ ₌ மல்லிப்பூ
13. பண்புத்தொகையில் வல்லினம் மிகும்
சதுரம் + பலகை ₌ சதுரப்பலகை
வட்டம் + பாறை ₌ வட்டப்பாறை
பச்சை + பட்டு ₌ பச்சைப்பட்டு
14. அகர இகர ஈற்று வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்
தேட + சொன்னான் ₌ தேடச்சொன்னான்
வர + சொன்னான் ₌ வரச்சொன்னான்
ஓடி + பிடித்தான் ₌ ஓடிப்பிடித்தான்
15. ஓரெழுத்து ஒரு மொழிக்குப் பின் வல்லினம் மிகும்
பூ +பறித்தான் ₌ பூப்பறித்தான்
கை + கரண்டி ₌ கைக்கரண்டி
தீ + பற்றியது ₌ தீப்பற்றியது
16. ஆய், போய் என்னும் வினையெச்சத்தின் பின் வல்லினம் மிகும்
நன்றாய் + பேசினார்₌ நன்றாய்ப்பேசினார்
போய் + தேடு ₌ போய்த்தேடு
17. இனி, தனி மற்று, மற்ற, மற்றை என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்
இனி + காணலாம் ₌ இனிக்காணலாம்
தனி + தமிழ் ₌ தனித்தமிழ்
மற்று + கண்டவை ₌ மற்றுக்கண்டவை
மற்ற+ பொருள்கள் ₌ மற்றப்பொருள்கள்
மற்றை + கூறுகள் ₌ மற்றைக் கூறுகள்
18. என, ஆக என்னும் சொற்களுக்குப் பின் வரும் வல்லினம் மிகும்.
என + கூறினான் ₌ எனக்கூறினான்
ஆக + சொன்னான் ₌ ஆகச்சொன்னான்
19. சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின் வரும் வல்லினம் மிகும்
சால + சிறந்தது ₌ சாலச்சிறந்தது
தவ + பெரிது ₌ தவப்பெரிது
20. ஈறுகெட்ட எதிரிமறைப் பெயரெச்சத்தின் பின்வரும் வல்லினம் மிகும்
உண்ணா + சோறு ₌ உண்ணாச்சோறு
ஓடா + குதிரை ₌ ஓடாக்குதிரை
அழியா + புகழ் ₌ அழியாப்புகழ்
21. தனிக்குறிலையடுத்து வரும் ஆ என்னும் நெடிலுக்குப் பின்வரும் வல்லினம் மிகும்
பலா + சுளை ₌ பலாச்சுளை
இரா + பகல் ₌ இராப்பகல்
கனா + காலம் ₌ கனாக்காலம்
22. முற்றியலுகரச் சொற்களின் பின் வல்லினம் மிகும்
திரு + குறள் ₌ திருக்குறள்
பொது + சொத்து ₌ பொதுச்சொத்து
23. இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்
தண்ணீர் + குடம் ₌ தண்ணீர்க்குடம்
மலர் + கூடை ₌ மலர்க்கூடை
24. மூன்றாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்
மரம் + பெட்டி ₌ மரப்பெட்டி
இரும்பு + சாவி ₌ இரும்புச்சாவி
25. நான்காம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்
சட்டை + துணி ₌ சட்டைத்துணி
குடை + கம்பி ₌ குடைக்கம்பி
26. ஐந்தாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகையில் வல்லினம் மிகும்
அடுப்பு + புகை ₌ அடுப்புப்புகை
விழி + புனல் ₌ விழிப்புனல்
27. உவமைத்தொகையில் வல்லினம் மிகும்
பவளம் + பற்று ₌ பவளப்பற்று
மலர் + கண் ₌ மலர்க்கண்
28. ட, ற, ஒற்று இரட்டிக்கும் உயிர்தொடர், நெடி தொடர் குற்றியலுகரத்திற்குப் பின் வல்லினம் மிகும்
வயிறு + போக்கு ₌ வயிற்றுப்போக்கு(உயிர்த்தொடர்)
முரடு + காளை ₌ முரட்டுக்காளை
நாடு + பற்று ₌ நாட்டுப்பற்று (நெடில்தொடர்)
காடு + தேன் ₌ காட்டுத்தேன்
வல்லினம் மிகா இடங்கள்:
1. இரண்டாம் வேற்றுமைத் தொகையில் வல்லினமிகாது
தமிழ் + கற்றார் ₌ தமிழ் கற்றார்
நீர் + குடித்தான் ₌ நீர் குடித்தான்
துணி + கட்டினான் ₌ துணி கட்டினான்
2. உம்மைத் தொகையில் வல்லினம் மிகாது
தாய் + தந்தை ₌ தாய் தந்தை
இரவு + பகல் ₌ இரவு பகல்
செடி+கொடி ₌ செடி கொடி
3. ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம் தவிர்த்து மற்றப் பெயரெச்சங்களின் பின் வல்லினம் மிகாது
நல்ல + குழந்தை ₌ நல்ல குழந்தை
படித்த + பெண் ₌ படித்த பெண்
செய்யாத+ செயல் ₌ செய்யாத செயல்
4. உயர்திணைப் பொதுப்பெயர்களின் பின் வல்லினமிகாது
தொழிலாளர் + தலைவர் ₌ தொழிலாளர் தலைவர்
மாணாக்கர் + கூடினர் ₌ மாணாக்கர் கூடினர்
தாய் + பாடினாள் ₌ தாய் பாடினாள்
5. அஃறிணை வினைமுற்றின் பின் வல்லினம் மிகாது
முழங்கின + சங்குகள் ₌ முழங்கின சங்குகள்
பாடின + குயில்கள் ₌ பாடின குயில்கள்
வந்தது + கப்பல் ₌ வந்தது கப்பல்
6. எட்டு, பத்து தவிர மற்ற எண்களின் பின் வல்லினம் மிகாது
ஒன்று + கொடு ₌ ஒன்று கொடு
இரு + சீர் ₌ இருசீர்
மூன்று + கிளி ₌ மூன்று கிளி
7. அது, இது என்னும் சட்டகளின் பின்னும் எது? யாது? என்னும் வினாச் சொற்களின் பின்னும் வல்லினம் மிகாது.
அது + போயிற்று ₌ அது போயிற்று
இது + பறந்தது ₌ இது பறந்தது
எது + கண்டது ₌ எது கண்டது?
யாது + சொல் ₌ யாது சொல்?
8. அத்தனை, இத்தனை, எத்தனை எனும் சொற்களின் பின் வல்லினம் மிகாது.
அத்தனை + பழங்களா? ₌ அத்தனை பழங்களா?
இத்தனை + பூக்களா? ₌ இத்தனை பூக்களா?
எத்தனை + தேங்காய்? ₌ எத்தனை தேங்காய்?
9. வினாவை உணர்த்தும் ஆ, ஓ, ஏ, யா என்னும் வினா எழுத்துகளின் பின் வல்லினம் மிகாது
அவளா + தைத்தாள் ₌ அவளா தைத்தாள்?
இவளோ + போனாள் ₌ இவளோ போனாள்?
அவனே + செல்வான் ₌ அவனே செல்வான்?
10. சில, பல என்னும் சொற்களின் பின் வல்லினம் மிகாது
பல + குடிசைகள் ₌ பல குடிசைகள்
சில + சொற்கள் ₌ சில சொற்கள்
11. விளிப்பெயர் பின்னும், வியங்கோள் வினைமுற்றின் பின்னும் வல்லினம் மிகாது
கண்ணா + கேள் ₌ கண்ணாகேள்
வேலா + செல் ₌ வேலாசெல்
வாழ்க + தமிழ் ₌ வாழ்கதமிழ்
12. எழுவாய்த் தொடரில் வல்லினம் மிகாது
நாய் + போனது ₌ நாய் போனது
வள்ளி + படித்தாள் ₌ வள்ளி படித்தாள்
13. வினைத்தொகையில் வல்லினம் மிகாது
ஊறு + காய் ₌ ஊறுகாய்
ஆடு + கொடி ₌ ஆடு கொடி
விரி + கதிர் ₌ விரி கதிர்
14. அடுக்குத் தொடரில் வல்லினம் மிகாது
தீ + தீ ₌ தீதீ
பாம்பு + பாம்பு ₌ பாம்புபாம்பு
15. சில ஆறாம் வேற்றுமைத் தொகையில் வல்லினம் மிகாது
வள்ளுவர் +கருத்து ₌ வள்ளுவர் கருத்து
ஒளவை + சொல் ₌ ஒளவை சொல்
16. அவை இவை என்னும் சொற்களின் பின் வரும் வல்லினம் மிகாது
அவை+போயின ₌ அவை போயின
இவை + செய்தன ₌ இவை செய்தன
17. படியென்னும் சொல் வினையோடு சேர்ந்து வருமிடத்தில் வல்லினம் மிகாது
வரும்படி +கூறினான் ₌ வரும்படி கூறினான்
போகும்படி + சொன்னான் ₌ போகும்படி சொன்னான்
18. இரட்டைக் கிளவியில் வல்லினம் மிகாது
கல + கல ₌ கலகல
பள + பள ₌ பளபள
19. அவை, இவை என்னம் சுட்டுச் சொற்களின் பின் வல்லினம் மிகாது
அவை + சென்றன ₌ அவை சென்றன
இவை + செய்தன ₌ இவை செய்தன
20. அது, இது என்னும் சுட்டுகளின் பின்வரும் வல்லினம் மிகாது
அது + பறந்தது ₌ அது பறந்தது
இது + கடித்தது ₌ இது கடித்தது
21. எது, யாது என்னும் வினாச்சொற்களின் பின் வல்லினம் மிகாது
எது + பறந்தது ₌ எது பறந்தது?
யாது + தந்தார் ₌ யாது தந்தார்?
22. இரண்டு வடசொற்கள் சேரும்போது வல்லினம் மிகாது
சங்கீத+ சபா ₌ சங்கீத சபா
மகாஜன + சபா ₌ மகாஜன சபா
23. சில வினையெச்சத் தொடரில் வல்லினம் மிகாது
வந்து + போனான் ₌ வந்து போனான்
செய்து + கொடுத்தான் ₌ செய்து கொடுத்தான்
#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS
தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...
-
Yes என்று உறுதி செய்து சான்றிதழ் பெறுவோம் Click here
-
11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ்மொழி இலக்கியத் திறனறித்தேர்வு -2024 மாதிரி வினாத்தாள் -1 விடைக்குறிப்பு* (கூடுதல் குறிப்புகளுடன் )