வியாழன், 13 ஜனவரி, 2022

10TAMIL QUESTION BANKS பத்தாம் வகுப்பு தமிழ்- 2022 திருப்புதல் -1 விடைக் குறிப்புகள் 10 TH TAMIL REVISION TEST MODEL QUESTION -2 ANSWERKEY


பத்தாம் வகுப்பு தமிழ்
-

 2022

திருப்புதல் -1 விடைக் குறிப்புகள்

(MARKS -100)


1..சருகும் சண்டும்

2..எம்+ தமிழ் + நா

3.அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு

4.பாண்டிய மன்னன்

5.மகரந்த தூளை

6.பொதுமொழி

7..வினைத்தொகை

8.ஐ,கு

9.அன்மொழிதொகை

10.கால்டுவெல்

11.பெயரெச்ச

12.பெருஞ்சித்திரனர்

13.பண்புத்தொகை

14.தமிழ் மொழியை

15.வேற்று மொழியினர்





16.சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.

17.

18.உலகத்திலேயே ஒரு மொழிக்காக மாநாடு நடத்திய முதல் நாடு எது?

ஒரு நாட்டு வளத்துக்கு தக்கபடியே அந்நாட்டு மக்களின் எவ்வொழுக்கம் அமைந்திருக்கும்?

19.உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை எனப்படுகிறது .


20.மகரந்த தூளை சுமந்துகொண்டு வா

     இனிய வாசனையுடன் வா

     இல்லைகளின் மீதும் நீரலைகள் மீதும் உராய்ந்து

     உயிர் நெருப்பை காத்து நன்றாக வீசு

21.







22.ஊட்டமிகுஉணவு உண்டவர் நீண்டநாள் வாழ்ந்தார்


பொது அறிவு நூல்களைத் தேடிப் படித்தவர் போட்டித்தேர்வில் வென்றார்


23.மலையை கடந்து மாலை சென்றேன்

24. நிலக்காற்று

    பண்டைய இலக்கியம்

25.



26.


27.






28.










29.


30. 1.நாற்று - நெல் நாற்று நட்டேன்.

       2.கன்று - வாழைக்கன்று வளமாக இருந்தது.

       3.பிள்ளை -தென்னம்பிள்ளையைத் தெற்கில் வைத்தேன்.

       4.வடலி -பனை வடலியைப் பாங்காக வளர்த்தேன்.

       5.பைங்கூழ் - பைங்கூழ் பசுமையாக இருந்தது.


31.





32.பெயர் : சுப்ரமணிய பாரதியார்

வாழ்த்த காலம்: 1882-1921

ஊர் : எட்டயபுரம்  

சிறப்புகள் : கவிஞர் ,இதழாளர்,கட்டுரை ஆசிரியர்

படைப்புகள்: கண்ணன் பாட்டு, குயில்பாட்டு,

                    பாஞ்சாலி சபதம் ,புதிய ஆத்திச்சுடி


33.மொழிச்சிறப்பு:

செம்மை பெற்ற தமிழ்மொழி, அன்னை மொழியாகவும், பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியாகவும்,

குமரிக்கண்டத்தில் நிலைத்து ஆட்சிசெய்த மண்ணுலகப் பேரரசாகவும் விளங்குகிறது.

இலக்கியச் சிறப்பு:

பாண்டிய மன்னனின் மகளாகவும்,திருக்குறளின் பெருமைக்குரியவளாகவும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இலக்கியச் சிறப்புக்கு உரியவளாகவும் திகழ்கிறாள். ஆகவே, தமிழன்னையைப் பாவலரே வாழ்த்துகிறார்.







34.அழகார்ந்த செந்தமிழே!

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!



தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!*




35.



36. உவமை அணி

இக்குறளில் பயின்று வரும் அணி உவமையணி ஆகும்.

 அணி விளக்கம் : உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் ஒரு வாக்கியமாகவும் அமைந்து இடையில் போல, போன்ற என்னும் 

உவம உருபுகள் பயின்று வருவது உவமையணி ஆகும்.



அணி பொருத்தம் : உவமை : வேலொடு நின்றான் இரு என்றது

உவமேயம் : கோலொடு நின்றான் இரவு.

உவம உருபு: போலும்.



37.







38. என்னைத் தாலாட்டிய மொழி!

எனதருமைத் தாய்மொழி!

என் இனிய தமிழ்மொழி

எண்ணமெல்லாம் நிறைந்த மொழி!

என் தாய்மொழிக்குத் தலை வணங்குகிறேன்.

அனைவருக்கும் வணக்கம்



மனோன்மணீயம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல் விளக்கம்:

பூமி என்ற பெண்ணின் ஆடை நீராலான கடல், முகம் பாரத கண்டம் ஆகும். நெற்றியாகத் தக்காணம் திகழ்கிறது. நெற்றியில் பொட்டு வைத்தது போல் தமிழகம் திகழ்கிறது. எல்லாத் திசைகளிலும்

தமிழ்த்தாய் புகழ் பெற்று விளங்குகிறாள் எனச் சிறப்பிக்கிறார். உலகின் மூத்த மொழி, இளமையான மொழி, வளமான மொழி, பெண்ணே, தாயே உன்னை வாழ்த்துகிறேன் என்று பலவாறு வாழ்த்துகிறார்.

பெருஞ்சித்திரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின் பொருள்:

அன்னை மொழியாக அழகாய் அமைந்து பழமைக்குப் பழமையாய்த் திகழும் மொழி. குமரிக்கண்டத்தில் நிலைத்து நிற்கும் வகையில் பாண்டிய மன்னனின் மகளாகத் திகழும் மொழி.

தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் தலையணிந்து விளங்கும் தமிழை வாழ்த்துகின்றேன்

ஒப்புமை:

இரு பாடல்களிலும் தமிழ் தாயாகவும், பழமையான மொழியாகவும் சிறப்பிக்கப்படுகிறது. எல்லாத்திசைகளிலும் புகழ் பெற்று நிலைத்து நிற்பது என்றும் இளமையானது என்று பொருள்பட அமைந்துள்ளது. பெண், தாய், மகள் என வெவ்வேறு வகையில் அழைத்தாலும் தமிழைத் தாயாக சிறப்பிக்கின்றனர். நறுமணமிக்க மொழி என்ற பொருளில் இருபாடல்களும் அமைந்துள்ளன.

39.உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது. குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.



அனுப்புநர்

.தமிழழகன்,

15. வெற்றி நகர்,

தஞ்சாவூர்,

பெறுநர்

உணவுப் பாதுகாப்பு ஆணையர்,

உணவுப் பாதுகாப்பு ஆணையம்,

சென்னை.

 

மதிப்பிற்குரிய ஐயா,

பொருள்: உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் உள்ள உணவு விடுதியின் மீது நடடிவக்கை எடுக்க வேண்டுதல் சார்பு.

வணக்கம். நான் எனது நண்பனுடன் கடந்த வாரம் தஞ்சாவூர் நூலகத்திற்கு அருகில் உள்ள உணவு விடுதியில் மதிய உணவு உண்டேன். விலை கூடுதலாக இருந்தது. உணவும் சுத்தமாகத் தயாரிக்கப்படவில்லை. விடுதியிலிருந்து வெளியே வருவதற்கு முன்பாகவே என் நண்பனுக்கு மயக்கம் வந்தது. மருத்துவரிடம் என் நண்பனை அழைத்துச் சென்றேன். அவன் உண்ட உணவில் கோளாறு இருந்ததாக மருத்துவர் கூறினார். ஆகவே, அந்த உணவுவிடுதியின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இணைப்பு :- 1) மருத்துவரின் சான்று.

2) விடுதி விலை ரசீது .

இப்படிக்கு,உண்மையுள்ள,

.தமிழழகன்

இடம்: தஞ்சாவூர்,

 நாள்: 23 .1 2 .2021



உறைமேல் முகவரி

பெறுநர்

உணவுப் பாதுகாப்பு ஆணையர்,

உணவுப் பாதுகாப்பு ஆணையம்,

சென்னை.






40.கிடைத்த உணவில் ஒரு பங்கை

உடன் வரும் நாய்க்கு தந்தாளே

உயிர்கள் மீது அன்போடு

உலகம் போற்ற வாழ்ந்தாளே..


41.


42.தொடர் மழைக் காலங்களில் மக்கள்

வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

* தேவையான உணவுப் பொருட்கள், தீப்பெட்டி, மெழுகுவர்த்தி போன்றவற்றைக் கையிருப்பில் வைக்க வேண்டும்.

* நீர் நிறைந்த ஆறு, குளம், குட்டை, ஏறி, கிணறு போன்ற பகுதிகளுக்குச் செல்லக் கூடாது..

* மின் சாதனப் பொருட்களைக் கவனமுடன் கையாள வேண்டும்.

* குடிசை வீடுகள், இடிந்து விழும் நிலையில் உள்ள வீடுகளில் தங்காமல் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும்.

* வானிலைச் செய்திகளைக் கவனிக்க வேண்டும்..




பொன்போன்ற சூரியன், அதிகாலையில் தோன்றிப் பிரகாசமான கதிர்களைக் கொண்டு, உலக இருளைப் போக்குகிறது. பால் மேகங்கள் அலையத் தொடங்குகின்றன. வண்ணமயமான பறவைகள், தங்கள் காலை இசையால் மகிழ்ச்சி அடைகின்றன. அழகிய பட்டாம்பூச்சிகள், மலர்களைச் சுற்றி நடனமாடுகின்றன. மலர்களின் வாசனை, தென்றல் காற்றை நிரப்புகின்றது. காற்று, எல்லா இடங்களிலும் வீசி மகிழ்ச்சியூட்டுகிறது.


43.தமிழ்ச் சொல்வளம்,

'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தக் குடி" என்பதற்கு ஏற்றவாறு தமிழ்மொழி தோன்றியது என்பது உண்மை. இதை தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.

கால வெள்ளத்தில் கரைந்து போன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ்.



தமிழ்ச் சொல்வளம் பல துறைகளிலும் உள்ளது.

அதில் பயிர்வகைச் சொற்கள் மட்டும் சிறப்பாக எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன.

ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொற்கள் :

தாள், தண்டு, கோல்,தூறு,தட்டு. கழி, கழை, அடி ஆகும்.

தாவரங்களின் இலை வகைகள்:

தாள், தோகை, இலை, ஓலை,சண்டு, சருகு.

கொழுந்து வகை: (நுனிப்பகுதி )

துளிர், கொழுந்து, குருத்து, கொழுந்தாடை பிஞ்சு வகை: வடு. பூம்பிஞ்சு, மூசு, கவ்வை. கச்சல் இன்னும் பிற. மேற்கண்ட அனைத்தும் தமிழ் சொல் வளமுடையது என்பதைக் காட்டுகிறது.

 

புதிய சொல்லாக்கத்திற்கான தேவை:



புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், கருவிகள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு வேறு மொழி சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்கள் கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில் பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்கள் அமைந்தால் மட்டுமே தமிழ் நிலைத்து நிற்கும். வணிகம். பொருளாதாரம், அரசியல், சமூகம், அரசு சார்ந்த துறைகள் அனைத்திலும் தமிழ் மொழியாக்கம் தகுந்த சொற்களோடு அமைய வேண்டும்.

கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு தமிழ்மொழியும் நடைபோடுவது அவசியம். புதிய சொல்லாக்கம் அழிந்து வரும் மொழிகளின் வரிசையில் இல்லாமல் எதிர்கால சந்ததியினருக்கு மொழியை எடுத்துச் செல்ல உதவும் என்பது உறுதி.




44.கோபல்லபுரத்து மக்கள்

முன்னுரை

* பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற நேயம் கிராமத்து விருந்தோம்பல்.

* கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவர் கி.ராஜநாராயணன்.

* கோபல்லபுரத்து அன்னமய்யா விருந்தோம்பலின் சான்று.

தேசாந்திரியின் சோர்வும் தீர்வும்

* சுப்பையாவின் புஞ்சையில் அருகு எடுக்கும் வேலை.

* அன்னமய்யா கூட்டி வந்த ஆள் சோர்வாக இருந்தான்.

* அவன் யார் என சுப்பையா கேட்க வரட்டும் அவன் வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி நாமும் குடிப்போம் என்றான்

* கொத்தாளி லாட் சன்னியாசி போல் உடை அணிந்து இருந்தான் அவ்வாலிபன்.

* குடிக்கத் தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்சுத்தண்ணி வழங்கப்பட்டது.

* வேப்பமர நிழலே சொர்க்கமாக அயர்ந்து விட்டான். அன்னமய்யாவின் கருணை

* கள்ளியை ஒழித்தது போல் அருகை ஒழிக்க முடியவில்லையே என கவலைப்பட்டார்கள் சம்சாரிகள்.

* விழித்தவன் தன்பெயர் பரமேஸ்வரன் என்றும் தற்போதைய பெயர் மணி என்றும் சொன்னான்.

* உருண்டை கம்மஞ்சோற்றை இடது கையில் வைத்து, பள்ளம் பறித்து அதில் துவையல் வைத்தார்கள்.

* அந்தக் ஒரு கால் கடுமையான பசியிலும் அரை உருண்டைதான் சாப்பிட்டான்.

* திரும்பவும் படுத்து அமைதியாகக் கண்மூடிக் கிடந்தார்.

முடிவுரை

* அதிகாலை வேளையில் களைத்து வந்தவருக்குக் கரிசல் இதயங்கள் காட்டிய அன்பு கண்முன் படமாகிறது.

* கருணையுடன் மணி பார்த்த பார்வையில் நன்றி தெரிகிறது.

* கஞ்சிக்கலயம், சோற்றின் மகுளி துவையல், கம்மஞ்சோறு இவற்றில் கரிசல்மண் மணக்கிறது



45.


சான்றோர் வளர்த்த தமிழ்



முன்னுரை

முதல் மாந்தன் பேசிய மொழியான தமிழின் தொன்மை ஆய்வுக்குட்பட்டது. உலகின் பல மொழிகளுக்குத் தாய்மொழியாக இருப்பதும் தமிழே. அத்தமிழை வளர்க்க முயன்ற சான்றோர்கள் பலரை வளர்த்தது தமிழ் தமிழால் சான்றோரும் சான்றோரால் தமிழும் வளர்ந்ததை இலக்கிய  உலகு நன்கு அறியும்.  

வள்ளுவரும் ஒளவையும்

உலகப்பொதுமறை தந்த வள்ளுவர் தமிழை உலகறியச் செய்தார். மூன்றடியில் உலகளந்த இறைவன் போல் ஈரடியில் உலகளந்த புலவன் வள்ளுவரே. பல மொழிகளில் பெயர்க்கப்பட்ட குறள் தமிழின் புகழைப் பறைசாற்றும், ஓரடியில் ஆத்திசூடி தந்த ஒளவையும் தமிழின் சிறப்பை வரிசைப்படுத்தினார். தமிழ் வளர்க்க ஒளவை வேண்டி நெல்லிக்கனி தந்த அதியமானும் தமிழ் வளர்த்தவரே.

இலக்கியத்தில் தமிழ்

ஐம்பெருங்காப்பியங்களும் ஐஞ்சிறு காப்பியங்களும் இதிகாசங்களும் கண்டவர்கள் தமிழின் இலக்கிய வாழ்வை மேம்படுத்தினர், கம்பன் தந்த உவமையும் சொல்லாடலும் தமிழின் பெருமைக்குச் சான்றுகள். அறநூல்களை அள்ளித்தந்த சான்றோர் அகமும் புறமும் படைத்து தமிழின் தமிழரின் தமிழ்நாட்டின் உயர்வை உலகிற்கு உணர்த்தினர்.

சிற்றிலக்கியத்தில் தமிழ்

பரணி பாடிய செயங்கொண்டார் போன்றோரும், உலா பாடிய ஒட்டக்கூத்தர் போன்றோரும். குறவஞ்சி பாடிய திரிகூடராசப்பர் போன்றோரும், தூது தந்த புலவர்களும், கலம்பகம் தந்த புலவர்களும், பிள்ளைத்தமிழ் தந்த புலவர்களும், பள்ளு பாடிய புலவர்களும் 96 வகைச் சிற்றிலக்கியங்களை வழங்கிய பலரும் தமிழை வளர்த்தனர்.

பிறநாட்டார்

வீரமாமுனிவர் சதுரகராதி தந்து தமிழால் பெருமை பெற்றார். போப் தமிழின் சிறப்புகளை மொழிபெயர்ப்பின் மூலம் உலகறியச் செய்தார். பிறநாட்டார் பலர் தமிழைப் போற்றி தமிழால் அறியப்பெற்றனர். பிற மொழி பேசுபவர்களும் தமிழை அறிய ஆர்வம் கொண்டனர்.

மொழிப்பற்றாளர்

அகரமுதலி வெளியிட்ட தேவநேயப் பாவாணரும், பல நூல்களைப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதரும், மொழித்தியாகிகளும், பாரதியார், பாரதிதாசன், சுரதா வழிவந்த பரம்பரைக் கவிஞர்களும் மொழிப்பற்றோடு தமிழை வளர்த்து அழியாப் புகழ் அடைந்தனர்.

முடிவுரை

அன்று முதல் இன்று வரை தமிழை வளர்க்கச் சான்றோர் பலர் தோன்றியுள்ளனர். தமிழை வளர்க்க எண்ணிய அனைத்துச் சான்றோர்களையும் தமிழ் வளர்த்தது என்பதே மறுக்க இயலா உண்மையாகும். தமிழ் வளர்ப்போம், புகழ் பெறுவோம்.



3 கருத்துகள்:

#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...