மாணவர்கள் வருகை இல்லை என்றாலும் ஆசிரியர்கள் பணிக்கு வரவேண்டும்..
*.கல்வித்துறையின் விசித்திரமான முடிவு..
மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் ஆசிரியர்களை மட்டும் பள்ளிக்கு வரவழைப்பது ஏன்... ஆன் லைன் வழியாக இருந்த இடத்தில் இருந்தே அவர்கள் செயல்பட முடியுமே...
ஆசிரியர்களை மட்டும் ஒரே இடத்தில் கூட்டி வைப்பதால் அவர்களில் ஒருவர் வழியே மற்றவருக்கு.... மற்றவருக்கென்று கொரோனா பரவ வாய்ப்பிருக்கிறதே... இதை அரசு கவனத்தில் கொண்டு, இருந்த இடத்தில் இருந்து பள்ளிக்குழுவின் வழியாக மாணவர்களுக்கு வகுப்புகள் எடுத்திட வழிகோள வேண்டும்..
பள்ளியில் மாணவர் வேறு ஆசிரியர் வேறு என்றல்ல.. நோய்த்தொற்று ஆசிரியர்களாலும் சக ஆசிரியர்களுக்கு பரவிடக்கூடும்... தொற்று அபாயத்தில் இருப்பவர்கள் 40+ வயது ஆசிரியர்கள்தான்
எனவே, ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு அரசு சங்கடத்தை ஏற்படுத்திட வேண்டாம்
என்று ஆசிரியர் சங்கங்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக