பள்ளிக்கல்வித்துறை- விழுப்புரம் மாவட்டம்
ஒப்படைப்பு-ஜனவரி 2022
பத்தாம் வகுப்பு தமிழ்
மதிப்பெண்கள்: 50
குறிப்பு: (ஒப்படைப்பில் கொடுக்கப்பட்டுள்ள வினாக்களுக்கு
விடைகளை A4தாளில் எழுத்த வேண்டும்)
பகுதி-1 (மொத்தமதிப்பெண்கள் - 8)
1. கொடுக்கப்பட்டுள்ள
இரு சொற்களைப் பயன்படுத்தி ஒரு தொடர் அமைத்தல், சான்று (இயற்கை - செயற்கை பாதைத் தெரியாத
இயற்கைக் காடுகளில் பயணிக்கச் செயற்கைக் கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன.
அ) கொடு-கோடு
உணவு கொடுக்கும் ஆர்வத்தில் கோட்டை தாண்டினால் சீதை
ஆ) சிறு -சீறு
சிறுவர்கள் சீறும் பாம்பைக் கண்டு
அஞ்சினர்
இ) தான் -தாம்
தான் என்ற சுயநலம் மறந்தால் தாம்
என்ற பொதுநலம் பிறக்கும்
ஈ) விதி வீதி
விதியை எண்ணி வீதியில் நடந்தான்
அரிச்சந்திரன்.
2 கொடுக்கப்பட்ட
தொடரில் உள்ள முதற்பொருள், கருப்பொருள்களை
வகைப்படுத்தி எழுதுதல்.
காட்டில் விளைந்த
வரகில் சமைத்த உணவு மழை கால மாலையில் சூடாக உண்ண சுவை மிகுந்து
இருக்கும்,
முதற்பொருள்- நிலம் - காடும் காடு சார்ந்த இடமும் – முல்லை
பெரும்பொழுது
– மழைக்காலம்,கார்காலம்
சிறுபொழுது-
மாலை
கருப்பொருள்
– உணவு – வரகு (வரகு சோறு)
3.வறுமையின்
காரணமாக உதவி கேட்டு வருபவரின் தன்மானத்தை
எள்ளி நகையாடுவது
குறித்துக் குறள் கூறும் கருத்தினை எழுதுதல்,
இகழ்ந்து ஏளனம் செய்யாமல் பொருள் கொடுப்பவரை கண்டால் ,இரப்பவரின்
உள்ளத்தின் உள்ளே மகிழ்ச்சிபொங்கும் .
பகுதி-2 (மொத்தமதிப்பெண்கள் - 18)
4.உவமை சுட்டும்
செய்தியினைக் கண்டு எழுதுதல்,
"மாளாத காதல்
நோயாளன் போல
உடல் புண்ணைக் கதியால் அறுத்துச் சுட்டாலும் மருத்துவர்
மீது அன்பு கொள்ளும் நோயாளன் போல நீ எனக்கு துன்பமே தந்தாலும் உன்னை விட்டு நீங்க
மாட்டேன் இறைவா.
5.வழுவமைதி வகைகளை
இனங்கண்டு எழுதுதல்.
அ ) அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார்.
கால வழுவமைதி
ஆ ) "இந்த கண்ணன் ஒன்றைச் செய்தான் என்றால் அதை
அனைவரும் ஏற்பர் - என்று கூறினான்.
இட வழுவமைதி
இ ) சிறியவயதில் இந்த மரத்தில்தான் ஊஞ்சல் கட்டி
விளையாடுவோம்.
கால வழுவமைதி
6. பொருள்கோளின்
வகைகளை கண்டறிந்து விளக்கத்துடன் எழுதுதல்,
முயற்சி திருவினை
ஆக்கும் முயற்றின்மை
இன்மை புகுத்தி
விடும்.
- இக்குறட்பா ஆற்றுநீர்
பொருள்கோள்
ஆற்றுநீர் பொருள்கோள்:
திரும்பாமல் ஓடுகின்ற ஆற்றுநீர் ஓட்டம் போல்
சொற்கள் முன்பின்னாக மாறாமல் நேராகவே பொருள் கொள்ளபடுவது ஆற்றுநீர் பொருள்கோள்.
குறள் விளக்கம்:
இக்குறளில் முயற்சி என்னும் சொல்
தொடங்கி விடும் என்னும் சொல் முடியும் வரை ஆற்று நீர் ஓட்டம் போல் நேராக சென்று
பொருளை உணர்த்துவதால்இது ஆற்றுநீர் பொருள்கோள் ஆகும்.
7.ஆங்கிலச்
சொற்களுக்கு நிகரான தமிழ்ச் சொற்களைக் கவிதையில் கண்டு எழுதுதல்.
யாழிசை |
It's like new lute music |
அறைக்குள் யாழிசை ஏதென்று சென்று எட்டிப் பார்த்தேன்; பேத்தி, நெட்டுருப் பண்ணினாள் நீதிநூல்திரட்டையே. |
Wondering at the lute music Coming from the chamber Entered I to look up to in still My grand daughter Learning by rote the verses Of a didactic compilation. |
பாரதிதாசன் |
Translated by Kavignar Desini |
அ)Lute music –யாழிசை
ஆ)grand-daughter- பேத்தி
இ)Chamber – அறை
ஈ)
rote – நெட்டுரு
உ)
to lookup – எட்டிப்பார்த்தேன்
ஊ)
didactic compilation – நீதிநூல் திரட்டு
8 கடற்கரையில்
உப்புக்காய்ச்சுதல் நடைபெறுகிறது மலைப்பகுதியில் மலைப்பயிர்களும் நிலப்பகுதியில்
உழவுத்தொழிலும் நடைபெறுகின்றன. - காலப்போக்கில் பல மாற்றங்கள் நிகழ்ந்த போதிலும்
பண்டைத் தமிழரின் திணைநிலைத் தொழில்கள் இன்றளவும் தொடர்வதையும் அவற்றின் இன்றைய
வளர்ச்சியும் குறித்து எழுதுதல்.
காலப்போக்கில்
பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை மறுக்கமுடியாது. கடற்கரைகளில் ஓய்வு விடுதிகள் பெருகியுள்ளன. எனினும், மீன்பிடித்தல், உப்புக்
காய்ச்சுதல் தொழில்களும் நடைபெறுகின்றன.
மலைப்பகுதிகளில்
ஓய்வு இல்லங்கள் கட்டப்பட்டுள்ளன. காப்பி, தேயிலைத் தோட்டங்கள் அமைக்கப்
பெற்றுள்ளன. எனினும், நம் முன்னோர் செய்த
மலைநிலப்பயிர்களும் விளைவிக்கப் பெறுகின்றன.
நிலப்பகுதிகளில்
வாணிகம், தொழில் தொடர்பான பண்டசாலைகள்
பெருகியுள்ளன. எனினும் உழவுத்தொழிலும் செய்யப்பெறுகிறது. காலம் எவ்வளவுதான்
மாற்றத்தை ஏற்படுத்தினாலும், தமிழரின் திணைநிலைத் தொழில்களும்
ஆங்காங்கே இன்றளவும் தொடர்ந்து செய்யப்பட்டே வருகின்றன.
9.உரையாடலில் இடம்பெற்றுள்ள வினாவிடை வகைகளைக்
கண்டு எழுதுதல்.
பாமகள்:வணக்கம்
ஆதிரை! ஏதோ எழுதுகிறீர்கள் போலிருக்கிறதே?(அறியா வினா)
ஆதிரை: ஆமாம்!
கவியரங்கத்துக்குக் கவிதை எழுதிக்கொண்டிருக்கிறேன்.(நேர்
விடை )
பாமகள்: அப்படியா!
என்ன தலைப்பு? (அறியா வினா)
ஆதிரை; கல்வியில்
சிறக்கும் தமிழர்! (நேர் விடை ) நீங்கள் கவியரங்கத்துக்கு எல்லாம் வருவீர்களோ?
மாட்டீர்களோ?( ஐயவினா)
பாமகள்: ஏன் வராமல்? ( வினா எதிர் வினாதல் )
பகுதி-3 (மொத்த மதிப்பெண்கள் - 10) 2x5=10
10.வள்ளுவம் சிறந்த
அமைச்சருக்குக் கூறிய இலக்கணங்கள் நமக்கும் பொருந்துவதைக் குறள்வழி விளக்குதல்,
·
சிறந்த
அமைச்சர் என்பவர், ஒரு செயலைச் செய்வதற்குரிய கருவி, செய்வதற்கு
ஏற்ற காலம், மனவலிமை, குடிமக்களைக்
காத்தல், ஆட்சிமுறை குறித்துக் கற்றல், சிறந்த
நூல்களைக் கற்றல், விடாமுயற்சி என்னும்
சிறப்புகளைப் பெற்றிருக்க வேண்டும்.
*
நுண்ணறிவு, நூலறிவு, சூழ்ச்சித்
திறமை என்னும் ஆற்றல் பெற்றவரே சிறந்த அமைச்சராக முடியும் என வள்ளுவர் கூறுகிறார்.
இக்காலத்தில் நடைமுறை ஆட்சிக்கும் இப்பண்பு இன்றியமையாதனவே.
அதனால்
விளையும் நன்மை, செய்யும் வழிவகை ஆகியன அறிந்து
செயல் திறமும் கொண்டவராக இருக்க வேண்டும். குடியாட்சியிலும் இப்பண்புடையோரே
அமைச்சரானச் சிறப்பாக பணியாற்ற முடியும்.
11. நூலக உறுப்பினர்
படிவம் எழுதுதல்.
மாவட்ட நூலக ஆணைக்குழு மைய/கிளை/ஊர்ப்புற
நூலகம்
உறுப்பினர் சேர்க்கை அட்டை
அட்டை எண்: 100004 உறுப்பினர் எண்:105
1. பெயர் - அஅஅஅ
2. தந்தை பெயர் - கண்ணன்
3. பிறந்த தேதி - ௦1.01.1999
4. வயது - 23
5. படிப்பு - இளங்கலைத்தமிழ்
6. தொலைப்பேசி எண் -xxxxxxxxxxxxxx
7. அஞ்சல் முகவரி - 7/12 முருகன்
கோயில் தெரு,
விழுப்புரம் - 605602
(அஞ்சல்
குறியீட்டு எண்ணுடன்)
நான் விழுப்புரம் நூலகத்தில் உறுப்பினராகப் பதிவு செய்ய இத்துடன்
காப்புத்தொகை ரூ 1௦00 சந்தா தொகை ரூ 50 ஆக மொத்தம் ரூ 1050 ரொக்கமாகச் செலுத்துகிறேன்.நூலக நடைமுறை
மற்றும் விதிகளுக்குக் கட்டுப்படுகிறேன் என உறுதியளிக்கிறேன்.
இடம் ; விழுப்புரம் தங்கள் உண்மையுள்ள
நாள் :24.01.2022.
திரு/திருமதி/
செல்வி செல்வன்,....அஅஅஅஅ
...... .அவர்களை எனக்கு
நன்கு தெரியும் எனச் சான்று அளிக்கிறேன்.
அலுவலக முத்திரை பிணைப்பாளர் கையொப்பம்
(பதவி மற்றும் அலுவலகம்)
பகுதி-4 (மொத்த மதிப்பெண்கள் 16) 2x8=16
12. உரைக்குறிப்பு
எழுதுதல்.
தலைப்பு-சந்தக்
கவிதையில் சிறக்கும் கம்பன்
அன்பும் பண்பும் கொண்ட தலைவர்
அவர்களே!
தேர்ந்தெடுத்த பூக்களைப் போன்று வரிசை தொடுத்து
அமர்ந்திருக்கும் ஆன்றோர்களே! அறிஞர் பெருமக்களே ! வணக்கம் இயற்கை கொலு
வீற்றிருக்கும் காட்சியைப் பெரிய கலை நிகழ்வே நடப்பதான தோற்றமாகக் கம்பன் காட்டும்
கவி ஆட இவ்வுரையைத் தொடர்க! தண்டலை மயில்கள்
தண்டலை
மயில்களாடத் தாமரை விளக்கந் தாங்க. கொண்டல்கள் முழவினோங்க குவளை கண்விழித்து நோக்க
தெண்டிரை யெழினி காட்டத் தேம்பிழி மகர யாழின் வண்டுகள் இனிது பாட மருதம்
வீற்றிருக்கும் மாதோ! என்ற பாலகாண்டம் - நாட்டுப்படலத்திலுள்ள பாடலில் மருதநில அழகு
சந்தக்கவிதையாகச்
சிறந்ததுள்ளது.
சந்த அழகு தண்டலை.
கொண்டல்கள்,
தெண்டிரை.
வண்டுகள்
என்று
எதுகை நயம் சிறந்தும்
ஆட, தாங்க, ஏங்க, நோக்க, காட்ட, பாட
- என்று இனிமையான இலக்கிய ஓசை நயம் கலந்திட வந்துள்ளது.
பால
காண்டம் - ஆற்றுப்படலத்தில், ஆறு இயற்கையின் தோற்றம் தான்; எனினும்
அதை உயிரெனக் காணும் அழகுணர்ச்சி கம்பரின் கவிதையில் ஓடி நெஞ்சில் நிறைகிறது -
சரயுநதியாக
தாதுரு
சோலை.
போதவிழ்
பொய்கை.
மாதவி
வேலி
மோதிய…………….. என்று எழிலுற இலக்கிய நயம்
மிளிர்கிறது.
“அயோத்தியா
காண்டம் - கங்கைப் படலத்தில்” இராமனுடைய மாநிற மேனியை வருணிக்கும் கம்பன்.
மையோ?
மரகதமோ?
மறிகடலோ?
மழை முகிலோ?
ஐயோ
இவன் வடிவு என்பது
ஓர்
அழியா அழகு உடையவன்' என்று
எழிலும் இலக்கிய ரசனை சொட்டச் சொட்ட வருணித்துள்ளார்.
13. மதிப்புரை
எழுதுதல்,
நூல் : பள்ளி
ஆண்டு விழா மலருக்காக நீவீர் நூலகத்தில் படித்த ஒரு கவிதை நூல்.
கற்பனை வளம் நிறைந்த, இனிய
ஓசை அமைந்த,
கவிஞர்
தமிழ் ஒளியின் கவிதைகள், மீண்டும்
மீண்டும் படித்துச் சுவைக்கத் தூண்டின. ஒருபானைச் சோற்றுக்கு ஒருசோறு பதம் என்பர்.
அவ்வகையில் ஒன்று காண்போம். ''யாத்திரை' என்ற பாடலைப் படிக்கும்போது, கள்ளம் இல்லாத நெஞ்சம், நல் உறுதி உடைய உள்ளம் இன்னது
எனப் புலப்படுகிறது.
“கள்ளம் இருந்தக்கால்,
காணும் வழி அச்சுறுத்தும்! உள்ளம் இசைந்தாலோ,
உறுதி தளராதாம்!
உழைக்காமல் யாதுபயன்,
ஓய்ந்தார்க்கு
வெற்றியுண்டோ?
என்ற
பகுதி, உழைக்கும் மனிதனுடைய வாழ்வையும்
முடிவையும் காட்டுகின்றன. அஞ்சாமல் வாழ்க்கைக் கடலில் நீந்த வேண்டும். ஓயாமல்
உழைக்க வேண்டும். கவிஞர் உள்ளம், இயற்கை
அழகிலும் ஈடுபாடு கொண்டது. ஞாயிறு, இளவேனில், தாமரை, மழை, புயல், நிலா, விண்மீன் முதலியன பற்றி அவர்
பாடிய பாடல்கள்,
கற்பவர்
உள்ளத்தைக் கவர்கின்றன. 'பட்டமரம்"
பெரிய வாழ்க்கைத் தத்துவத்தை உணர்த்துகிறது. 'சேரன் கூத்தும்", 'வள்ளைப் பாட்டும்` தமிழர் மரபியலில் அவருக்கிருந்த
ஈடுபாட்டைக் காட்டுகிறது. "மண்ணில் முளைத்தவன் நான் - அதன்
மார்பில் திளைத்தவன் நான்!
எண்ணித் துணிந்து விட்டேன் - இனி
எங்கும்
பறந்து செல்வேன்"
என்று, கவிதை அவரது உளக்கருத்தைத்
தெளிவாக உணர்த்துகிறது. எடுத்தவுடன் படிக்கவேண்டும் என்கிற உணர்வைத்
தூண்டும்வகையில் இனிய வண்ண அட்டைகளால் ஒளி செய்யப்பட்டுள்ளது. விலை ரூ. 110. சற்று
அதிகமே. வெளியீடு: புகழ் புத்தகாலயம், செனாய்
நகர், சென்னை - 600 030
தமிழ்ஒளி, வானத்து விண்மீன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக