செவ்வாய், 28 செப்டம்பர், 2021

10 th tamil இயல் – 4 ஒருமதிப்பெண்

 

       இயல் – 4 

உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                            

1.   ‘உனதருளே பார்ப்பன் அடியேனே ‘ – யாரிடம் யார் கூறியது?

அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்          ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

இ) மருத்துவரிடம் நோயாளி                      ஈ) நோயாளியிடம் மருத்துவர்

2.  தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.

தலைப்பு         : செயற்கை நுண்ணறிவு                                      

குறிப்புகள்     : கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன்

                        பார்வையைத்  திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம்

                        போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காட்டுகிறது.

அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஆ) குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இ) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஈ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.

3.   பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?                            

அ) வானத்தையும் பாட்டையும்                  ஆ) வானத்தையும் புகழையும்

இ) வானத்தையும் பூமியையும்                   ஈ) வானத்தையும் பேரொலியையும்

4.   குலசேகர ஆழ்வார் ‘வித்துவக் கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப்

            பாடுகிறார்.  பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார்.   இத்தொடர்களில்

            இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே –

அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி

ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி

இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி

ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி

5.   பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

அ) துலா                     ஆ)சீலா                      இ) குலா                     ஈ) இலா

6.   ’இயல்பான மொழிநடையை உருவாக்குதல்’ என்னும் மென்பொருள்—–.

அ) வாட்சன்               ஆ) பெப்பர்                இ) வேர்டுஸ்மித்     ஈ) இலா

7.   ‘மீளாத்துயர்’ இத்தொடரில் உள்ள இலக்கணக் குறிப்பை எழுதுக.

அ) எதிர்மறைப் பெயரெச்சம்                                  ஆ) நான்காம் வேற்றுமைத் தொகை

இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்                    ஈ) பண்புத்தொகை

8.   தனிநபர் கணினிகளின் வளர்ச்சி எந்த ஆண்டுகளிலிருந்து தொடங்குகிறது?

அ) 1960களில்           ஆ) 1970களில்          இ) 1980களில்        ஈ) 1890களில்

9. ’வேர்டுஸ்மித்’ என்பதன் பொருள் ——–.

அ) எழுத்தாணி         ஆ) எழுத்தாலி           இ) எழுத்தாளி         ஈ) எழுத்துரு

10. இதழியலில் பயன்படும் மென்பொருள்———–.

அ) உரையாடு மென்பொருள் ஆ) உதவு மென்பொருள் இ) எழுத்தாளி   ஈ) எழுத்துரு

11. வேர்டுஸ்மித் ——- குப் பயன்படுகிறது.

அ) கடிதம்      ஆ) இயல்பான மொழிநடையை உருவாக்கத்திற்  இ) கவிதை   ஈ) ஓவியம்

12. ஐ.பி.எம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கணினி வாட்சன் எந்த ஆண்டு

வடிவமைக்கப்பட்டது?

அ) 2014         ஆ) 2015        இ) 2016       ஈ) 2018

13. ‘இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்’ – என்ற பாடல் அடிகளுக்கு

      உரியவர்———–.

அ) பாரதியார்         ஆ) பாரதிதாசன்       இ) கண்ணதாசன்     ஈ) வாணிதாசன்

14. மெய்நிகர் உதவியாளர் என்பது ஒரு ———– மென்பொருள்.

அ) உரையாடு     ஆ) உதவு             இ) எழுத்தாளி   ஈ) இயல்பான் மொழிநடையை உருவாக்கும்

15. இலா  என்பது ஒரு ———– மென்பொருள்.

அ) உரையாடு     ஆ) உதவு             இ) எழுத்தாளி   ஈ) இயல்பான் மொழிநடையை உருவாக்கும்  

16. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் ஒரு வினாடியில் எத்தனை

வாடிக்கையாளர்களிடம் உரையாடும் ?

அ) நூறு          ஆ) ஆயிரம்    இ) பத்தாயிரம்      ஈ) ஒரு லட்சம்

17. ஜப்பானின் சாப்ட் வங்கி உருவாக்கிய  இயந்திர மனிதன் ———–.

அ) பெப்பர் ஆ) பேப்பர்    இ) சாப்ட்வேர்           ஈ) ஹாட்வேர்

18. சீன பேரரசர் குப்லாய்கானின் ஆணையின்கீழ் கட்டப்பட்ட கோவில்  ——- கோவில்.

அ) சிவன்      ஆ) திருமால்              இ) விநாயகர்           ஈ) முருகன்

19. சீனாவில் காணப்படும் துறைமுகம் ————-.-

அ) முசிறி                   ஆ) கொற்கை            இ) சூவன்சௌ        ஈ) தொண்டி

20. சீன பேரரசர் குப்லாய்கானின் ஆணையின்கீழ் கட்டப்பட்ட சிவன் கோவில் ————-

 காலத்தது.

அ) சேரர்                    ஆ) சோழர்   இ) பாண்டியர்         ஈ) பல்லவர்

21. குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி இடம்பெற்றுள்ள நூல் ———–.

அ) நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்                     ஆ) பன்னிருத் திருமுறை     

இ)  மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்    ஈ) மீனாட்சியம்மைக் குறம்.

22. நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் பெருமாள் திருமொழி ————ல் உள்ளது.

அ) முதலாயிரம்                  ஆ) இரண்டாயிரம்   இ) மூன்றாயிரம்       ஈ) நான்காயிரம்

23. நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில்  பெருமாள் திருமொழி ———– திருமுறையாக

உள்ளது.

அ) இரண்டாம்          ஆ) மூன்றாம்             இ) நான்காம்             ஈ) ஐந்தாம்

24. பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ———.

அ) 150           ஆ) 105         இ) 106           ஈ) 107

25. குலசேகரரின் காலம் ———- நூற்றாண்டு.

அ) எட்டாம்             ஆ) ஒன்பதாம் இ) பத்தாம்  ஈ) பன்னிரண்டாம்

26. பரிபாடல் ——— நூல்களுள் ஒன்றாகும்.

அ) எட்டுத்தொகை                     ஆ) பத்துப்பாட்டு     

இ) சங்க மருவிய இலக்கியம்        ஈ) ஐம்பெருங்காப்பியம்

27. பரிபாடலுக்கான அடையாளமாகக் கூறப்படுவது——.

அ) நல்ல                     ஆ) ஒத்த         இ) ஓங்கு       ஈ) கற்றறிந்தார் ஏத்தும்

28. சங்க இலக்கியங்களில் பண்ணொடு பாடப்பட்ட  நூல் ———-.

அ) நற்றிணை            ஆ) குறுந்தொகை     இ) பதிற்றுப்பத்து     ஈ) பரிபாடல்

29. பரிபாடலில் உள்ள எழுபது பாடல்களில் தற்போது கிடைத்துள்ள பாடல்களின்

எண்ணிக்கை———.

அ) 20             ஆ) 21             இ) 22             ஈ) 24

30. தமிழில் உயர்திணைக்குரிய பால்களின் எண்ணிகை———–.

அ) 2                ஆ) 3              இ) 5                ஈ) 7

31. தமிழில் அஃறிணைக்குரிய பால்களின் எண்ணிகை———–.

அ) 2               ஆ) 3               இ) 5                ஈ) 7

32. தமிழில் திணை, பால்,  இடம் முறையே —— வரிசை ஆகும்.

அ) 3,2,5                     ஆ) 3,5,2                     இ) 5,2,3                     ஈ) 2, 5, 3

33.இலா என்ற செயற்கை நுண்ணறிவு  மென்பொருளை உருவாக்கியது ———— வங்கி

      ஆகும்.

அ) பாரத ஸ்டேட் வங்கி              ஆ) இந்தியன் வங்கி 

இ) இந்தியன் ஓவர் சீஸ் வங்கி      ஈ) சென்ட்ரல் வங்கி

34. வித்துவக்கோடு என்னும் ஊர் ———-  மாநிலத்தில் உள்ளது.

அ) தமிழ்நாடு                        ஆ) ஆந்திரம்              இ) கேரளா ஈ) கர்நாடகா

35. வித்துவக்கோடு என்னும் ஊர் கேரளா மாநிலத்தில் ——– மாவட்டத்தில் உள்ளது.

அ) கோழிக்கோடு                ஆ) கர்னூல்   இ) மாண்டியா           ஈ) பாலக்காடு

36. பரிபாடலில்  விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல என்னும் அடி உள்ள பாடலை இயற்றியவர் 

அ) கீரந்தையார்     ஆ) திருவள்ளுவர்                 இ) கபிலர்      ஈ) குலசேகராழ்வார்

37. ELA – என்பதன் விரிவாக்கம்.

அ) Electric Live Assistant               ஆ) Electronic Live Assistant     

இ) Eduction Live Assistant                        ஈ)  Election Live Assistant

1. உயர்திணை என்று யாரை அழைப்பர்?

அ) விலங்குகளை      ஆ) பறவைகளை      இ) மரங்களை           ஈ) மக்களை

2. திணையின்  உட்பிரிவு ——– ஆகும் .

அ) பால்        ஆ) எண்         இ) இடம்        ஈ) காலம்

3. தமிழ் இலக்கணம் கூறும் ‘பால்’ என்பதன் பொருள் பகுப்பு அல்லது பிரிவு  ஆகும். இக்கூற்றில்,

அ) பகுப்பு என்பது சரி, பிரிவு என்பது தவறு       

ஆ) பிரிவு என்பது சரி, பகுப்பு என்பது தவறு       

இ) இரண்டும் சரி

ஈ) இரண்டும் தவறு

4. ஐம்பாலில் அஃறிணைக்கு உரிய பால்கள்   எவை?

அ) ஆண்பால், பெண்பால்               ஆ) ஆண்பால், பெண்பால், பலர்பால்       

இ) ஒன்றன்பால், பலவின்பால்  ஈ) பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்

5. ஐம்பாலில் உயர்திணைக்கு உரிய பால்கள்   எவை?

அ) ஆண்பால், பெண்பால்               ஆ) ஆண்பால், பெண்பால், பலர்பால் 

இ) ஒன்றன்பால், பலவின்பால்       ஈ) பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்

6. ’ஆடவர்’ என்னும் சொல் எந்த பாலைக் குறிக்கும்?

அ) ஆண்பால்                        ஆ) பெண்பால்         

இ) பலர்பால்                                 ஈ) ஒன்றன்பால்

7. ’அண்ணன்’ என்னும் சொல் எந்த பாலைக் குறிக்கும்?

அ) ஆண்பால்                      ஆ) பெண்பால்         

இ) பலர்பால்                         ஈ) ஒன்றன்பால்

8. ’யானை, புறா, மலை ’ முதலிய சொற்கள் எந்த பாலைக் குறிக்கும்?

அ) ஆண்பால்                        ஆ) பெண்பால்         

இ) பலர்பால்                         ஈ) ஒன்றன்பால்

9. ’வந்தேன்’ என்னும் சொல் ஒரு ———— சொல்லாகும்.

அ) தன்மைப் பெயர்             ஆ) தன்மை வினை        

இ) படர்க்கைப் பெயர்         ஈ) படர்க்கை வினை

10. இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும்  ———- ஆகும்.

அ) வழுநிலை            ஆ) வழாநிலை     

இ) வழுவமைதி         ஈ) கால வழு

11. இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும்  ———- ஆகும்.

அ) வழுநிலை          ஆ) வழாநிலை       

இ) வழுவமைதி         ஈ) கால வழு

12. இலக்கண முறைப்படி பிழை உடையது. எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்பட்டது ——— ஆகும்.

அ) வழுநிலை            ஆ) வழாநிலை       

இ) வழுவமைதி      ஈ) கால வழு

13. செழியன் வந்தது என்பது ஒரு ——— வழு ஆகும்.

அ) திணை வழு       ஆ) பால் வழு

இ) இட வழு              ஈ) கால வழு

14. ”கத்தும் குயிலோசை – சற்றே வந்து காதில் படவேணும்” என்னும் பாரதியின் அடிகள் ——- க்குச் சான்று ஆகும்.

அ) வழுநிலை            ஆ) வழாநிலை       

இ) வழுவமைதி      ஈ) கால வழு

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

  1. செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு

தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று

உள்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு

மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும்

உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்

1. இப்பாடலின் ஆசிரியர்?

அ) நக்கீரர்                                         ஆ) கீரந்தையார்    

இ) முடத்தாமைக் கண்ணியார்       ஈ) முடியரசன்

2. இப்பாடல் இடம்பெற்ற நூல்?

அ) பரிபாடல்                                         ஆ) குறிஞ்சிப்பாட்டு 

இ) திருமுருகாற்றுப்படை               ஈ) கூத்தராற்றுப்படை

3. இலக்கணக்குறிப்புத் தருக – செந்தீ

அ) பண்புத்தொகை                                ஆ) வினைத்தொகை 

இ) உவமைத்தொகை                     ஈ) உம்மைத்தொகை

4. பொருள் தருக – பீடு

அ) பாம்பு                                          ஆ) கொம்பு 

இ) சிறப்பு                                       ஈ) நூல்

5. பிரித்து எழுதுக- செந்தீ

அ) செந்+தீ                 ஆ) சிவந்த + தீ          இ) சிவப்பு +தீ           ஈ)செம்மை+தீ

(ஊழ் ஊழ் – அடுக்குத்தொடர்;  கிளர்ந்த, சுடரிய – பெயரெச்சம்; செல்ல, தோன்றி, மூழ்கி – வினையெச்சம்; தலைஇய- சொல்லிசை அளபெடை; இருநிலத்து – உரிச்சொற்றொடர்)

  • வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா!நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே!.

1. இப்பாடலின் ஆசிரியர்?

அ) நக்கீரர்                                         ஆ) குலசேகராழ்வார்    

இ) முடத்தாமைக் கண்ணியார்       ஈ) முடியரசன்

2. இப்பாடல் இடம்பெற்ற நூல்?

அ) பெருமாள் திருமொழி                    ஆ) குறிஞ்சிப்பாட்டு 

இ) திருமுருகாற்றுப்படை               ஈ) கூத்தராற்றுப்படை

3. மாளாத காதல் – வண்ணமிட்ட சொல்லுக்கான இலக்கணக்குறிப்பு

அ) பெயரெச்சம்                                                        ஆ) எதிர்மறைப் பெயரெச்சம்   

இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்              ஈ) வினையெச்சம்

(அறுத்து – வினையெச்சம்; மீளா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்)

பதினொன்றாம் வகுப்பு இயல் -1 one mark test

பதினொன்றாம் வகுப்பு


இயல் -1


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

 

 

click here

🟣👉 *FESTIVAL ADVANCE FORM FA FORM PDF* ⚡👉 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீபாவளி பண்டிகை விழா முன்பணம் பெறுவதற்கான விண்ணப்பம்

 🟣👉 *FESTIVAL ADVANCE FORM FA FORM PDF*



⚡👉 அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தீபாவளி பண்டிகை விழா முன்பணம் பெறுவதற்கான விண்ணப்பம்click here

TEACHERS & GOVTNMENTS STAFF NEW NHIS 2021



NHIS 2021 

 

 

CLICK HERE TO DOWNLOAD

TEACHERS & GOVT STAFF NEW NHIS 2021 FORM PDF DOWNLOAD

 

 

 

 click here download

11 வகுப்பு -இயல் -1 ONE MARK

 


                         

                               பதினொன்றாம் வகுப்பு


                                      இயல் -1


1.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:


1. கலைகளின் உச்சம்


) கட்டுரை ஆ) கதை ) கவிதை) நாடகம்


2.தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை. வேரில்லாத மரம் கூடில்லாத

பறவை என்று கூறியவர்


) இரசூல் கம்சதோவ்) பாப்லோ நெருடா இ) மல்லார்மே


3. மொழி முதல் எழுத்துக்கள் எத்தனை?


) 12 ) 22 )24 ) 18


4.தவறான இணையைத் தேர்க.


) மொழி +ஆளுமை =உயிர் +உயிர் ஆ) கடல் +அலை


) தமிழ் +அறிஞர் = மெய்+உயிர் ஈ) மண் + வளம்


5.உதித்த இலக்கணக் குறிப்பு

) வினையெச்சம் ஆ) பண்புத்தொகை

) வினைத்தொகை ) பெயரெச்சம்


6.தமிழ்ச்சொல்லைக் கண்டறிக


) விசா ஆ) யுகம் இ) ஊதியம் ஈ) தருணம்


7. இதழாளர் என்பதன் கலைச்சொல்


) Aesthetic ) journalist ) Critic ) Philosopher


2.ஒரு மதிப்பெண் வினாக்கள்


1. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக


1. காலங்காத்தால எந்திரிச்சி படிச்சா ஒரு தெளிவு கெடைக்கும்



அதிகாலை நேரத்தில் எழுந்து படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்


2. முயற்சி செஞ்சா அதுக்கேற்ற பலன் வராம போவாது.



முயற்சி செய்தால் அதற்கேற்ற பலன் வராமல் போகாது.



3. காலத்துக்கேத்த மாரி புதுசு புதுசா மொழி வடிவத்த மாத்தனும்



காலத்துக்கேற்றபடி புதிது புதிதாக மொழி வடிவத்தை மாற்ற வேண்டும்


4.ஒவ்வொருத்தரும் பேசிக்கிட்டிருக்கும்போது எல்லாத்தையும் கவனமா பதிய


வைக்கனும் .


ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது எல்லாவற்றையும் கவனமாகப் பதிய வைக்க வேண்டும்.




5. தேர்வெழுத வேகமாகப் போங்க, நேரங்கழிச்சி போனா பதட்டமாயிரும்



தேர்வெழுத வேகமாகச் செல்லுங்கள். நேரம் கழித்துச் சென்றால் பதற்றமாகிவிடும்.



6.கவிதையினை பேசுவதுபோல் எழுதுவதே உத்தமம் என்றவர் யார்? பாரதியார்


7.மொழியென் ஒன்று பிறந்தவுடன் "உலகம் "என்பதும் "நான்" என்பதும்


தனித்தனியாக பிரிகிறது என்றவர் யார்? எர்னஸ்ட் காசிரர்


8.பேச்சுமொழியினை கவிதைகளில் பயன்படுத்துபவர்கள் எத்தனை வகையினர்?

3

9.புதுகவிதையின் இயக்கத்தை தோற்றுவித்தவர் யார், எந்தநாட்டைச் சார்ந்தவர்?

வால்ட் விட்மன், அமெரிக்கா.


10.ஸ்டெ/பான்மல்லார்மே எந்நாட்டைச் சேர்ந்தவர்? பிரான்ஸ் 11. "தமிழின் கவிதையியல்" நூலாசிரியர் யார? கா. சிவத்தம்பி


12.இந்திரனின் இயற்பெயர் - இராசேந்திரன்


13.உயிர்த்தெழும் காலத்துக்காக எனும் கவிதை தொகுப்பின் ஆசிரியர்


சு.வில்வரத்தினம்.


14. பறவைகள் ஒரு வேளை தூங்கப் போயிருக்கலாம் - ஒரிய மொழி


15.கவிதையை இயற்றுவதுடன் சிறப்பாக பாடும் ஆற்றல் கொண்ட ………….

சு. வில்வரத்தினம்.


16.ஙனம் என்பதன் பொருள் யாது? விதம்


17. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்? ஆறு


18. கலைகளின் உச்சம் -கவிதை


19.உணர்ச்சிக்கு மிக அருகில் இருப்பது எம்மொழி?

பேச்சு மொழி


20.கவி ஆற்றூர் ரவி வர்மா எம்மாநிலத்தைச் சார்ந்தவர்? - கேரளா


21. எந்தஒரு சொல்லும் மற்றொரு சொல்லை விட முக்கியமானதாகிவிடாது என்றவர்


வால்ட்விட்மன்


22. பாப்லோ நெரூடா எந்த மொழிக் ஸ்பானிஷ் 23. வால்ட் விட்மன் கவிதையை மொழிப்பெயர்த்தவர் - சங்கர் ஜெயராமன்


24.மல்லார்மேவின் பிரென்ச் மொழி கவிதையை மொழிப்பெயர்த்தவர் வெஸ்ேரீராம்




25.பாப்லோ நெரூடாவின் கவிதையை மொழிப்பெயர்த்தவர்


.இரா.வேங்கடாசலபதி


26.ஒரு இனத்தின் மையப்புள்ளியாக விளங்குவது -மொழி


27. தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லா


மரம் என்றவர் இரசூல் கம்சதோவ்


28. எழுத்ததிகாரம் எத்தனை எத்தனை பகுதிகளாக உள்ளன?


5,5

11 TAMIL VIDEO LESSON LINK

 


 

 

11 TAMIL 

 

VIDEO LESSON LINK 

 

 CLICK HERE

11 TAMIL 2MARK PDF

 

 

 


 

11 TAMIL 

 

2MARK PDF 

 

CLICK HERE

11 TAMIL ONE MARK PDF

 

 

 


11th TAMIL 

ONE MARK 

PDF

 

 

 

click here

11th TAMIL IDEAL GUIDE FREE PDF DOWNLOAD

 


 

 

 

 

 

11th TAMIL 

 

IDEAL GUIDE 

 

FREE PDF DOWNLOAD

 

 

 

 CLICK HERE

12th TAMIL 2MARKS PDF

 


 

12th  TAMIL 

 

2MARKS PDF  

 

FREE DOWNLOAD

 

click here download pdf file 

12 tamil one mark

  

12 tamil one mark 

pdf

 

 

click here download

 

 

 


12தமிழ் Onemark test

 


 

12தமிழ் Onemark test


click here download

பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்


 கவிஞர் கண்ணதாசன்


பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன்

பிறந்து பாரென இறைவன் பணித்தான்

படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

படித்துப் பாரென இறைவன் பணித்தான்


அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன்

அறிந்து பாரென இறைவன் பணித்தான்

அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன்

அளித்துப் பாரென இறைவன் பணித்தான்


பாசம் என்பது யாதெனக் கேட்டேன்

பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்

மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன்

மணந்து பாரென இறைவன் பணித்தான்


பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன்

பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்

முதுமை என்பது யாதெனக் கேட்டேன்

முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்


வறுமை என்பது என்னெனக் கேட்டேன்

வாடிப் பாரென இறைவன் பணித்தான்

இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன்

இறந்து பாரென இறைவன் பணித்தான்;


üஅனுபவித் தேதான் அறிவது வாழ்வெனில்

ஆண்டவ னேநீ ஏன் எனக் கேட்டேன்

ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி

அனுபவம் என்பதே நான்தான்ý என்றான்!


நன்றி : கவிஞர் கண்ணதாசன்

3rd std - tamil மூன்றாம் வகுப்பு தமிழ்



மூன்றாம் வகுப்பு

தமிழ்


I சரியான விடையை தேர்ந்தெடு

1.எட்டுக் கைகள் விரிந்தால் ஒற்றைக்கால் தெரியும் அது என்ன?

)மரம் ஆ) மாடு ) குடை ) மலர்


2. அடிமலர்ந்து நுனி மலராத பூ என்ன பூ?

) கரும்பு ) வாழைப்பூ ) தாமரை ஈ) மல்லிகை


3. கையிலே அடங்கும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை அது என்ன?

) அலைபேசி ஆ) தங்கம் )புத்தகம்) குடை


4.அன்றாடம் மலரும் அனைவரையும் கவரும் அது என்ன?

) கோலம்) விண்மீன்கள் இ) சூரியன் ஈ) மலர்


5.என்னோடு இருக்கும் சிறுமணி எனக்குத் தெரியாது ஆனால் உனக்குத் தெரியும்

அது என்ன?

)காது ஆ) மூக்கு ) கண் ) கை

6.இடிஇடிக்கும்,மின்னல் மின்னும், மழை பெய்யாது. அது என்ன?

) பட்டாசு ) மழை இ) மத்தளம் ஈ) வானொலி


7.அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு அது என்ன?

) கரும்பு ) நெல்) தக்காளி ஈ ) கத்தரிக்காய்

8.ஒளி கொடுக்கும் விளக்கல்ல வெப்பம் தரும் நெருப்பல்ல பளபளக்கும் தங்கம் அது என்ன?

) மெழுகுவர்த்தி ஆ) சந்திரன் ) சூரியன் ) குழல்விழக்கு


9. கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள்?

) சந்திரன் ) சூரியன் ) நெற்கதிர் ஈ) விண்மீன்


10. பகைவர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல் ?

) நண்பர்கள் ஆ) அயலவர்கள் ) எதிரிகள்) சகோதரர்கள்

மூன்றாம் வகுப்பு -தமிழ் answerkey

 


மூன்றாம் வகுப்பு
-தமிழ்

I.சரியான விடையைத் தேர்வு செய்க.


1.நித்திலம் இச்சொல்லின் பொருள் ________

.பவளம் ஆ.முத்து இ.தங்கம் ஈ.வைரம்

விடை..முத்து

2.ஒலியெழுப்பி இச்சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது __


.ஒலி+எழுப்பி ஆ.ஒலி+யெழுப்பி இ.ஒலியை+யெழுப்பி ஈ.ஒலியை+எழுப்பி

விடை...ஒலி+எழுப்பி

3.பகைவர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல் யாது?


.எதிரிகள் ஆ.நண்பர்கள் இ.அயலவர்கள் ஈ.சகோதரர்கள்

விடை.நண்பர்கள்

4.பின்வருவனவற்றுள் வல்லின எழுத்துகள் அல்லாதது எது?


.க் ஆ.ட் இ.ம் ஈ.ற்

விடை...ம்

5.குழலி பாடம் படித்தாள். இத்தொடரில் வினை எது?


.குழலி ஆ.பாடம் இ.படித்தாள் ஈ., ஆ இரண்டும்

விடை...படித்தாள்

6.கல்யாணத்தில் நாட்டியமாடுபவர்_____________


.பூனை ஆ.ஒட்டகச்சிவிங்கி இ.யானை ஈ.குரங்கு

விடை..ஒட்டகச்சிவிங்கி


7.கீழ்காண்பவற்றுள் மட்காத பொருள்______-


.சணல் பை ஆ.சாக்குப் பை இ.நெகிழிப் பை ஈ.துணிப் பை

விடை...நெகிழிப் பை

8.கதை+என்ன _இதனைச் சேர்த்து எழுதக் கிடைக்கும் சொல்

.கதைஎன்ன ஆ.கதையன்ன இ.கதையென்ன ஈ.கதயென்ன

விடை..கதையென்ன

9.வெயில் இச்சொல்லின் எதிர்ச்சொல்______________


.நிழல் ஆ.பகல் இ.வெப்பம் ஈ.இருள்

விடை..நிழல்


10.விபத்தில் பேருந்து சிக்கியதும் பெரியவர்___எண்ணிற்குத் தொடர்பு கொண்டார்


.208 .308 .108 .408


விடை..108



 

 

 

.இலக்கியா,

..தொடக்கப் பள்ளி,

நொனையவாடி.

உளுந்தூர்பேட்டை

#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...