பதினொன்றாம் வகுப்பு
இயல் -1
1.சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக:
1. கலைகளின் உச்சம்
அ) கட்டுரை ஆ) கதை இ) கவிதை ஈ) நாடகம்
2.தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை. வேரில்லாத மரம் கூடில்லாத
பறவை என்று கூறியவர்
அ) இரசூல் கம்சதோவ் ஆ) பாப்லோ நெருடா இ) மல்லார்மே
3. மொழி முதல் எழுத்துக்கள் எத்தனை?
அ) 12 ஆ) 22 இ)24 ஈ) 18
4.தவறான இணையைத் தேர்க.
அ) மொழி +ஆளுமை =உயிர் +உயிர் ஆ) கடல் +அலை
இ) தமிழ் +அறிஞர் = மெய்+உயிர் ஈ) மண் + வளம்
5.உதித்த இலக்கணக் குறிப்பு
அ) வினையெச்சம் ஆ) பண்புத்தொகை
இ) வினைத்தொகை ஈ) பெயரெச்சம்
6.தமிழ்ச்சொல்லைக் கண்டறிக
அ) விசா ஆ) யுகம் இ) ஊதியம் ஈ) தருணம்
7. இதழாளர் என்பதன் கலைச்சொல்
அ) Aesthetic ஆ) journalist இ) Critic ஈ) Philosopher
2.ஒரு மதிப்பெண் வினாக்கள்
1. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக
1. காலங்காத்தால எந்திரிச்சி படிச்சா ஒரு தெளிவு கெடைக்கும்
அதிகாலை நேரத்தில் எழுந்து படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்
2. முயற்சி செஞ்சா அதுக்கேற்ற பலன் வராம போவாது.
முயற்சி செய்தால் அதற்கேற்ற பலன் வராமல் போகாது.
3. காலத்துக்கேத்த மாரி புதுசு புதுசா மொழி வடிவத்த மாத்தனும்
காலத்துக்கேற்றபடி புதிது புதிதாக மொழி வடிவத்தை மாற்ற வேண்டும்
4.ஒவ்வொருத்தரும் பேசிக்கிட்டிருக்கும்போது எல்லாத்தையும் கவனமா பதிய
வைக்கனும் .
ஒவ்வொருவரும் பேசிக்கொண்டிருக்கும்போது எல்லாவற்றையும் கவனமாகப் பதிய வைக்க வேண்டும்.
5. தேர்வெழுத வேகமாகப் போங்க, நேரங்கழிச்சி போனா பதட்டமாயிரும்
தேர்வெழுத வேகமாகச் செல்லுங்கள். நேரம் கழித்துச் சென்றால் பதற்றமாகிவிடும்.
6.கவிதையினை பேசுவதுபோல் எழுதுவதே உத்தமம் என்றவர் யார்? பாரதியார்
7.மொழியென் ஒன்று பிறந்தவுடன் "உலகம் "என்பதும் "நான்" என்பதும்
தனித்தனியாக பிரிகிறது என்றவர் யார்? எர்னஸ்ட் காசிரர்
8.பேச்சுமொழியினை கவிதைகளில் பயன்படுத்துபவர்கள் எத்தனை வகையினர்?
3
9.புதுகவிதையின் இயக்கத்தை தோற்றுவித்தவர் யார், எந்தநாட்டைச் சார்ந்தவர்?
வால்ட் விட்மன், அமெரிக்கா.
10.ஸ்டெ/பான்மல்லார்மே எந்நாட்டைச் சேர்ந்தவர்? பிரான்ஸ் 11. "தமிழின் கவிதையியல்" நூலாசிரியர் யார? கா. சிவத்தம்பி
12.இந்திரனின் இயற்பெயர் - இராசேந்திரன்
13.உயிர்த்தெழும் காலத்துக்காக எனும் கவிதை தொகுப்பின் ஆசிரியர்
சு.வில்வரத்தினம்.
14. பறவைகள் ஒரு வேளை தூங்கப் போயிருக்கலாம் - ஒரிய மொழி
15.கவிதையை இயற்றுவதுடன் சிறப்பாக பாடும் ஆற்றல் கொண்ட ………….
சு. வில்வரத்தினம்.
16.ஙனம் என்பதன் பொருள் யாது? விதம்
17. குற்றியலுகரம் எத்தனை வகைப்படும்? ஆறு
18. கலைகளின் உச்சம் -கவிதை
19.உணர்ச்சிக்கு மிக அருகில் இருப்பது எம்மொழி?
பேச்சு மொழி
20.கவி ஆற்றூர் ரவி வர்மா எம்மாநிலத்தைச் சார்ந்தவர்? - கேரளா
21. எந்தஒரு சொல்லும் மற்றொரு சொல்லை விட முக்கியமானதாகிவிடாது என்றவர்
வால்ட்விட்மன்
22. பாப்லோ நெரூடா எந்த மொழிக் ஸ்பானிஷ் 23. வால்ட் விட்மன் கவிதையை மொழிப்பெயர்த்தவர் - சங்கர் ஜெயராமன்
24.மல்லார்மேவின் பிரென்ச் மொழி கவிதையை மொழிப்பெயர்த்தவர் வெஸ்ேரீராம்
25.பாப்லோ நெரூடாவின் கவிதையை மொழிப்பெயர்த்தவர்
ஆ.இரா.வேங்கடாசலபதி
26.ஒரு இனத்தின் மையப்புள்ளியாக விளங்குவது -மொழி
27. தன் இனத்தையும் மொழியையும் பாடாத கவிதை வேரில்லா
மரம் என்றவர் இரசூல் கம்சதோவ்
28. எழுத்ததிகாரம் எத்தனை எத்தனை பகுதிகளாக உள்ளன?
5,5
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக