மூன்றாம் வகுப்பு
தமிழ்
I சரியான விடையை தேர்ந்தெடு
1.எட்டுக் கைகள் விரிந்தால் ஒற்றைக்கால் தெரியும் அது என்ன?
அ)மரம் ஆ) மாடு இ) குடை ஈ) மலர்
2. அடிமலர்ந்து நுனி மலராத பூ என்ன பூ?
அ) கரும்பு ஆ) வாழைப்பூ இ ) தாமரை ஈ) மல்லிகை
3. கையிலே அடங்கும் பிள்ளை, கதை நூறு சொல்லும் பிள்ளை அது என்ன?
அ) அலைபேசி ஆ) தங்கம் இ)புத்தகம் ஈ) குடை
4.அன்றாடம் மலரும் அனைவரையும் கவரும் அது என்ன?
அ) கோலம் ஆ) விண்மீன்கள் இ) சூரியன் ஈ) மலர்
5.என்னோடு இருக்கும் சிறுமணி எனக்குத் தெரியாது ஆனால் உனக்குத் தெரியும்
அது என்ன?
அ)காது ஆ) மூக்கு இ) கண் ஈ) கை
6.இடிஇடிக்கும்,மின்னல் மின்னும், மழை பெய்யாது. அது என்ன?
அ) பட்டாசு ஆ) மழை இ) மத்தளம் ஈ) வானொலி
7.அடி காட்டுக்கு, நடு மாட்டுக்கு, நுனி வீட்டுக்கு அது என்ன?
அ) கரும்பு ஆ) நெல் இ) தக்காளி ஈ ) கத்தரிக்காய்
8.ஒளி கொடுக்கும் விளக்கல்ல வெப்பம் தரும் நெருப்பல்ல பளபளக்கும் தங்கம் அது என்ன?
அ) மெழுகுவர்த்தி ஆ) சந்திரன் இ) சூரியன் ஈ) குழல்விழக்கு
9. கதிரவன் இச்சொல் உணர்த்தும் பொருள்?
அ) சந்திரன் ஆ) சூரியன் இ) நெற்கதிர் ஈ) விண்மீன்
10. பகைவர்கள் இச்சொல்லின் எதிர்ச்சொல் ?
அ) நண்பர்கள் ஆ) அயலவர்கள் இ) எதிரிகள் ஈ) சகோதரர்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக