"நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, ஆனால் தோற்று விட்டோம்."
நோக்கியா கைபேசி நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் மிகக் குறைந்த விலைக்கு வாங்கியது. அப்பொழுது நடந்த செய்தியாளர் சந்திப்பில், நோக்கியா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் அவருடைய உரையை நிறைவு செய்யும் போது கூறிய வார்த்தைகள் -"நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை, ஆனால் தோற்று விட்டோம். " இந்த வார்த்தைகளைக் கூறும்போது அவர் மட்டும் அல்ல, அவருடைய மொத்த நிர்வாக குழுவும் கண்ணீர் விட்டு அழுதுவிட்டனர்.நோக்கியா ஒரு உலகப் புகழ் பெற்ற மரியாதைக்குரிய நிறுவனம். தொழில்ரீதியாக அவர்கள் எந்த தவறும் வேகமாக மாறிக்கொண்டிருந்தது. நோக்கியா எதிர்காலம் எப்படி மாறும் என்று கணிக்கத் தவறி விட்டது,நோக்கியா எதிர்காலத்திற்கான திட்டங்கள் வகுக்கத் தவறி விட்டது, நோக்கியா எதிர்காலத்திற்குத் தகுந்தவாறு தங்களை மெருகேற்றிக் கொள்ளத் தவறி விட்டது. உலகின் மிகப் பெரிய கைபேசி நிறுவனமாக மாறும் வாய்ப்பை நோக்கியா இழந்தது. மிகப்பெரும் பொருள் ஈட்டக் கூடிய ஒரு வாய்ப்பை இழந்தது, தொழிலில் நிலைத்து நிற்கக் கூடிய வாய்ப்பஇழந்தது . நோக்கியாவின் கதையிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள்- நீங்கள் காலத்திற்குத் தகுந்தாற்போல உங்களையும், உங்கள் தொழிலையும் மெருகேற்றாவிட்டால். போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவீர்கள். நீங்கள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்பவில்லை என்றால், உங்கள் எண்ணங்களும் மனநிலையும் கால ஓட்டத்திற்கு தகுந்தவாறு விரைவாக ஓட முடியாவிட்டால், உங்கள் நேரம் முடிந்துவிடும். ஒரு மனிதன் புதிது புதிதாக கற்றுக் கொள்ளும் வரை வெற்றிகரமாக இருக்கிறான். அனைத்தையும் நான் கற்றுக்கொண்டுவிட்டேன், எனக்கு எல்லாம் தெரியும் என்ற எண்ணம் வந்துவிட்டால், அவன் தோல்வி ஆரம்பம் என்று அர்த்தம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக