செவ்வாய், 28 செப்டம்பர், 2021

10 th tamil இயல் – 4 ஒருமதிப்பெண்

 

       இயல் – 4 

உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.                            

1.   ‘உனதருளே பார்ப்பன் அடியேனே ‘ – யாரிடம் யார் கூறியது?

அ) குலசேகராழ்வாரிடம் இறைவன்          ஆ) இறைவனிடம் குலசேகராழ்வார்

இ) மருத்துவரிடம் நோயாளி                      ஈ) நோயாளியிடம் மருத்துவர்

2.  தலைப்புக்கும் குறிப்புக்கும் பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.

தலைப்பு         : செயற்கை நுண்ணறிவு                                      

குறிப்புகள்     : கண்காணிப்புக் கருவி, அசைவு நிகழும் பக்கம் தன்

                        பார்வையைத்  திருப்புகிறது. திறன்பேசியில் உள்ள வரைபடம்

                        போக்குவரத்திற்குச் சுருக்கமான வழியைக் காட்டுகிறது.

அ) தலைப்புக்குப் பொருத்தமான குறிப்புகள் இடம்பெற்றுள்ளன.

ஆ) குறிப்புகளுக்குத் தொடர்பில்லாத தலைப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

இ) தலைப்புக்குத் தொடர்பில்லாத குறிப்புகள் அளிக்கப்பட்டுள்ளன.

ஈ) குறிப்புகளுக்குப் பொருத்தமில்லாத தலைப்பு வழங்கப்பட்டுள்ளது.

3.   பரிபாடல் அடியில் ‘விசும்பும் இசையும்’ என்னும் தொடர் எதனைக் குறிக்கிறது?                            

அ) வானத்தையும் பாட்டையும்                  ஆ) வானத்தையும் புகழையும்

இ) வானத்தையும் பூமியையும்                   ஈ) வானத்தையும் பேரொலியையும்

4.   குலசேகர ஆழ்வார் ‘வித்துவக் கோட்டம்மா’ என்று ஆண் தெய்வத்தை அழைத்துப்

            பாடுகிறார்.  பூனையார் பால்சோற்றைக் கண்டதும் வருகிறார்.   இத்தொடர்களில்

            இடம்பெற்றுள்ள வழுவமைதி முறையே –

அ) மரபு வழுவமைதி, திணை வழுவமைதி

ஆ) இட வழுவமைதி, மரபு வழுவமைதி

இ) பால் வழுவமைதி, திணை வழுவமைதி

ஈ) கால வழுவமைதி, இட வழுவமைதி

5.   பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் எது?

அ) துலா                     ஆ)சீலா                      இ) குலா                     ஈ) இலா

6.   ’இயல்பான மொழிநடையை உருவாக்குதல்’ என்னும் மென்பொருள்—–.

அ) வாட்சன்               ஆ) பெப்பர்                இ) வேர்டுஸ்மித்     ஈ) இலா

7.   ‘மீளாத்துயர்’ இத்தொடரில் உள்ள இலக்கணக் குறிப்பை எழுதுக.

அ) எதிர்மறைப் பெயரெச்சம்                                  ஆ) நான்காம் வேற்றுமைத் தொகை

இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்                    ஈ) பண்புத்தொகை

8.   தனிநபர் கணினிகளின் வளர்ச்சி எந்த ஆண்டுகளிலிருந்து தொடங்குகிறது?

அ) 1960களில்           ஆ) 1970களில்          இ) 1980களில்        ஈ) 1890களில்

9. ’வேர்டுஸ்மித்’ என்பதன் பொருள் ——–.

அ) எழுத்தாணி         ஆ) எழுத்தாலி           இ) எழுத்தாளி         ஈ) எழுத்துரு

10. இதழியலில் பயன்படும் மென்பொருள்———–.

அ) உரையாடு மென்பொருள் ஆ) உதவு மென்பொருள் இ) எழுத்தாளி   ஈ) எழுத்துரு

11. வேர்டுஸ்மித் ——- குப் பயன்படுகிறது.

அ) கடிதம்      ஆ) இயல்பான மொழிநடையை உருவாக்கத்திற்  இ) கவிதை   ஈ) ஓவியம்

12. ஐ.பி.எம் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவுக் கணினி வாட்சன் எந்த ஆண்டு

வடிவமைக்கப்பட்டது?

அ) 2014         ஆ) 2015        இ) 2016       ஈ) 2018

13. ‘இங்கிவனை யான் பெறவே என்ன தவம் செய்துவிட்டேன்’ – என்ற பாடல் அடிகளுக்கு

      உரியவர்———–.

அ) பாரதியார்         ஆ) பாரதிதாசன்       இ) கண்ணதாசன்     ஈ) வாணிதாசன்

14. மெய்நிகர் உதவியாளர் என்பது ஒரு ———– மென்பொருள்.

அ) உரையாடு     ஆ) உதவு             இ) எழுத்தாளி   ஈ) இயல்பான் மொழிநடையை உருவாக்கும்

15. இலா  என்பது ஒரு ———– மென்பொருள்.

அ) உரையாடு     ஆ) உதவு             இ) எழுத்தாளி   ஈ) இயல்பான் மொழிநடையை உருவாக்கும்  

16. பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள் ஒரு வினாடியில் எத்தனை

வாடிக்கையாளர்களிடம் உரையாடும் ?

அ) நூறு          ஆ) ஆயிரம்    இ) பத்தாயிரம்      ஈ) ஒரு லட்சம்

17. ஜப்பானின் சாப்ட் வங்கி உருவாக்கிய  இயந்திர மனிதன் ———–.

அ) பெப்பர் ஆ) பேப்பர்    இ) சாப்ட்வேர்           ஈ) ஹாட்வேர்

18. சீன பேரரசர் குப்லாய்கானின் ஆணையின்கீழ் கட்டப்பட்ட கோவில்  ——- கோவில்.

அ) சிவன்      ஆ) திருமால்              இ) விநாயகர்           ஈ) முருகன்

19. சீனாவில் காணப்படும் துறைமுகம் ————-.-

அ) முசிறி                   ஆ) கொற்கை            இ) சூவன்சௌ        ஈ) தொண்டி

20. சீன பேரரசர் குப்லாய்கானின் ஆணையின்கீழ் கட்டப்பட்ட சிவன் கோவில் ————-

 காலத்தது.

அ) சேரர்                    ஆ) சோழர்   இ) பாண்டியர்         ஈ) பல்லவர்

21. குலசேகராழ்வாரின் பெருமாள் திருமொழி இடம்பெற்றுள்ள நூல் ———–.

அ) நாலாயிரத் திவ்யப் பிரபந்தம்                     ஆ) பன்னிருத் திருமுறை     

இ)  மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ்    ஈ) மீனாட்சியம்மைக் குறம்.

22. நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில் பெருமாள் திருமொழி ————ல் உள்ளது.

அ) முதலாயிரம்                  ஆ) இரண்டாயிரம்   இ) மூன்றாயிரம்       ஈ) நான்காயிரம்

23. நாலாயிரத்திவ்வியப் பிரபந்தத்தில்  பெருமாள் திருமொழி ———– திருமுறையாக

உள்ளது.

அ) இரண்டாம்          ஆ) மூன்றாம்             இ) நான்காம்             ஈ) ஐந்தாம்

24. பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை ———.

அ) 150           ஆ) 105         இ) 106           ஈ) 107

25. குலசேகரரின் காலம் ———- நூற்றாண்டு.

அ) எட்டாம்             ஆ) ஒன்பதாம் இ) பத்தாம்  ஈ) பன்னிரண்டாம்

26. பரிபாடல் ——— நூல்களுள் ஒன்றாகும்.

அ) எட்டுத்தொகை                     ஆ) பத்துப்பாட்டு     

இ) சங்க மருவிய இலக்கியம்        ஈ) ஐம்பெருங்காப்பியம்

27. பரிபாடலுக்கான அடையாளமாகக் கூறப்படுவது——.

அ) நல்ல                     ஆ) ஒத்த         இ) ஓங்கு       ஈ) கற்றறிந்தார் ஏத்தும்

28. சங்க இலக்கியங்களில் பண்ணொடு பாடப்பட்ட  நூல் ———-.

அ) நற்றிணை            ஆ) குறுந்தொகை     இ) பதிற்றுப்பத்து     ஈ) பரிபாடல்

29. பரிபாடலில் உள்ள எழுபது பாடல்களில் தற்போது கிடைத்துள்ள பாடல்களின்

எண்ணிக்கை———.

அ) 20             ஆ) 21             இ) 22             ஈ) 24

30. தமிழில் உயர்திணைக்குரிய பால்களின் எண்ணிகை———–.

அ) 2                ஆ) 3              இ) 5                ஈ) 7

31. தமிழில் அஃறிணைக்குரிய பால்களின் எண்ணிகை———–.

அ) 2               ஆ) 3               இ) 5                ஈ) 7

32. தமிழில் திணை, பால்,  இடம் முறையே —— வரிசை ஆகும்.

அ) 3,2,5                     ஆ) 3,5,2                     இ) 5,2,3                     ஈ) 2, 5, 3

33.இலா என்ற செயற்கை நுண்ணறிவு  மென்பொருளை உருவாக்கியது ———— வங்கி

      ஆகும்.

அ) பாரத ஸ்டேட் வங்கி              ஆ) இந்தியன் வங்கி 

இ) இந்தியன் ஓவர் சீஸ் வங்கி      ஈ) சென்ட்ரல் வங்கி

34. வித்துவக்கோடு என்னும் ஊர் ———-  மாநிலத்தில் உள்ளது.

அ) தமிழ்நாடு                        ஆ) ஆந்திரம்              இ) கேரளா ஈ) கர்நாடகா

35. வித்துவக்கோடு என்னும் ஊர் கேரளா மாநிலத்தில் ——– மாவட்டத்தில் உள்ளது.

அ) கோழிக்கோடு                ஆ) கர்னூல்   இ) மாண்டியா           ஈ) பாலக்காடு

36. பரிபாடலில்  விசும்பில் ஊழி ஊழ் ஊழ் செல்ல என்னும் அடி உள்ள பாடலை இயற்றியவர் 

அ) கீரந்தையார்     ஆ) திருவள்ளுவர்                 இ) கபிலர்      ஈ) குலசேகராழ்வார்

37. ELA – என்பதன் விரிவாக்கம்.

அ) Electric Live Assistant               ஆ) Electronic Live Assistant     

இ) Eduction Live Assistant                        ஈ)  Election Live Assistant

1. உயர்திணை என்று யாரை அழைப்பர்?

அ) விலங்குகளை      ஆ) பறவைகளை      இ) மரங்களை           ஈ) மக்களை

2. திணையின்  உட்பிரிவு ——– ஆகும் .

அ) பால்        ஆ) எண்         இ) இடம்        ஈ) காலம்

3. தமிழ் இலக்கணம் கூறும் ‘பால்’ என்பதன் பொருள் பகுப்பு அல்லது பிரிவு  ஆகும். இக்கூற்றில்,

அ) பகுப்பு என்பது சரி, பிரிவு என்பது தவறு       

ஆ) பிரிவு என்பது சரி, பகுப்பு என்பது தவறு       

இ) இரண்டும் சரி

ஈ) இரண்டும் தவறு

4. ஐம்பாலில் அஃறிணைக்கு உரிய பால்கள்   எவை?

அ) ஆண்பால், பெண்பால்               ஆ) ஆண்பால், பெண்பால், பலர்பால்       

இ) ஒன்றன்பால், பலவின்பால்  ஈ) பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்

5. ஐம்பாலில் உயர்திணைக்கு உரிய பால்கள்   எவை?

அ) ஆண்பால், பெண்பால்               ஆ) ஆண்பால், பெண்பால், பலர்பால் 

இ) ஒன்றன்பால், பலவின்பால்       ஈ) பலர்பால், ஒன்றன்பால், பலவின்பால்

6. ’ஆடவர்’ என்னும் சொல் எந்த பாலைக் குறிக்கும்?

அ) ஆண்பால்                        ஆ) பெண்பால்         

இ) பலர்பால்                                 ஈ) ஒன்றன்பால்

7. ’அண்ணன்’ என்னும் சொல் எந்த பாலைக் குறிக்கும்?

அ) ஆண்பால்                      ஆ) பெண்பால்         

இ) பலர்பால்                         ஈ) ஒன்றன்பால்

8. ’யானை, புறா, மலை ’ முதலிய சொற்கள் எந்த பாலைக் குறிக்கும்?

அ) ஆண்பால்                        ஆ) பெண்பால்         

இ) பலர்பால்                         ஈ) ஒன்றன்பால்

9. ’வந்தேன்’ என்னும் சொல் ஒரு ———— சொல்லாகும்.

அ) தன்மைப் பெயர்             ஆ) தன்மை வினை        

இ) படர்க்கைப் பெயர்         ஈ) படர்க்கை வினை

10. இலக்கண முறையுடன் பிழையின்றிப் பேசுவதும் எழுதுவதும்  ———- ஆகும்.

அ) வழுநிலை            ஆ) வழாநிலை     

இ) வழுவமைதி         ஈ) கால வழு

11. இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும்  ———- ஆகும்.

அ) வழுநிலை          ஆ) வழாநிலை       

இ) வழுவமைதி         ஈ) கால வழு

12. இலக்கண முறைப்படி பிழை உடையது. எனினும், இலக்கண ஆசிரியர்களால் ஏதேனும் ஒரு காரணம் கருதி, பிழையன்று என ஏற்றுக்கொள்ளப்பட்டது ——— ஆகும்.

அ) வழுநிலை            ஆ) வழாநிலை       

இ) வழுவமைதி      ஈ) கால வழு

13. செழியன் வந்தது என்பது ஒரு ——— வழு ஆகும்.

அ) திணை வழு       ஆ) பால் வழு

இ) இட வழு              ஈ) கால வழு

14. ”கத்தும் குயிலோசை – சற்றே வந்து காதில் படவேணும்” என்னும் பாரதியின் அடிகள் ——- க்குச் சான்று ஆகும்.

அ) வழுநிலை            ஆ) வழாநிலை       

இ) வழுவமைதி      ஈ) கால வழு

பாடலைப் படித்து வினாக்களுக்கு விடையளிக்க.

  1. செந்தீச் சுடரிய ஊழியும் பனியொடு

தண்பெயல் தலைஇய ஊழியும் அவையிற்று

உள்முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு

மீண்டும் பீடு உயர்பு ஈண்டி அவற்றிற்கும்

உள்ளீடு ஆகிய இருநிலத்து ஊழியும்

1. இப்பாடலின் ஆசிரியர்?

அ) நக்கீரர்                                         ஆ) கீரந்தையார்    

இ) முடத்தாமைக் கண்ணியார்       ஈ) முடியரசன்

2. இப்பாடல் இடம்பெற்ற நூல்?

அ) பரிபாடல்                                         ஆ) குறிஞ்சிப்பாட்டு 

இ) திருமுருகாற்றுப்படை               ஈ) கூத்தராற்றுப்படை

3. இலக்கணக்குறிப்புத் தருக – செந்தீ

அ) பண்புத்தொகை                                ஆ) வினைத்தொகை 

இ) உவமைத்தொகை                     ஈ) உம்மைத்தொகை

4. பொருள் தருக – பீடு

அ) பாம்பு                                          ஆ) கொம்பு 

இ) சிறப்பு                                       ஈ) நூல்

5. பிரித்து எழுதுக- செந்தீ

அ) செந்+தீ                 ஆ) சிவந்த + தீ          இ) சிவப்பு +தீ           ஈ)செம்மை+தீ

(ஊழ் ஊழ் – அடுக்குத்தொடர்;  கிளர்ந்த, சுடரிய – பெயரெச்சம்; செல்ல, தோன்றி, மூழ்கி – வினையெச்சம்; தலைஇய- சொல்லிசை அளபெடை; இருநிலத்து – உரிச்சொற்றொடர்)

  • வாளால் அறுத்துச் சுடினும் மருத்துவன் பால்

மாளாத காதல் நோயாளன் போல் மாயத்தால்

மீளாத் துயர்தரினும் வித்துவக் கோட்டம்மா!நீ

ஆளா உனதருளே பார்ப்பன் அடியேனே!.

1. இப்பாடலின் ஆசிரியர்?

அ) நக்கீரர்                                         ஆ) குலசேகராழ்வார்    

இ) முடத்தாமைக் கண்ணியார்       ஈ) முடியரசன்

2. இப்பாடல் இடம்பெற்ற நூல்?

அ) பெருமாள் திருமொழி                    ஆ) குறிஞ்சிப்பாட்டு 

இ) திருமுருகாற்றுப்படை               ஈ) கூத்தராற்றுப்படை

3. மாளாத காதல் – வண்ணமிட்ட சொல்லுக்கான இலக்கணக்குறிப்பு

அ) பெயரெச்சம்                                                        ஆ) எதிர்மறைப் பெயரெச்சம்   

இ) ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்              ஈ) வினையெச்சம்

(அறுத்து – வினையெச்சம்; மீளா – ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...