வெள்ளி, 24 செப்டம்பர், 2021

குறுந்தொகை 138,"பூவின் பாடு நனி கேட்டே"

 #சங்க_காலப்_பயணம் 21

#சங்கப்புலவர்கள்


"பூவின் பாடு நனி கேட்டே"


ஊர் முழுமையாக அடங்கிய ஒரு இரவு நேரம்.இரவு வருவதாக கூறிய தலைவனுக்காக காத்திருக்கிறாள் தலைவி. உறக்கமற்ற அந்த இரவில் அவன் காலடி ஓசையை கேட்பதற்காக காதை தீட்டி  உற்றுக்கேட்டுக் கொண்டு படுத்திருக்கிறாள்.அப்பொழுது பக்கத்து எழில் குன்று மலையில் மயிலின் பாதங்களைப் போன்ற இலைகளை உடைய நொச்சி மரத்தின் மெல்லிய கொம்புகளில் இருந்து நீலமணி நிறத்தில் இருந்த மலர்கள் உதிர்ந்து கீழே விழும் மெல்லிய ஓசையை கூட துல்லியமாக தலைவிக்கு கேட்டதாம்...


இது எங்கயோ கேட்ட மாதிரியில்ல...


பூப்பூக்கும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை

புல்விரியும் ஓசை அதைக் கேட்கத்தான் ஆசை


வைரமுத்து வரிகள்தான்....😊


****

இனி நம் சங்கப் பாடலை பார்ப்போம்...


குறுந்தொகை 138,

பாடியவர் -  கொல்லன் அழிசி,  

மருதத் திணை – தோழி சொன்னது, 


********************************************

கொன்னூர் துஞ்சினும் யாந் துஞ்சலமே,

எம் இல் அயலது, ஏழில் உம்பர்

மயிலடி இலைய மா குரல் நொச்சி

அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த

மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே

********************************************


கொன்னூர் – பெரிய  ஊர்,

துஞ்சினும் – தூங்கினாலும், 

யாம் துஞ்சலமே – நாங்கள் தூங்கவில்லை,  

எம் இல் அயலது – எங்கள் வீட்டிற்கு அருகில்,

ஏழில் உம்பர் – உயர்ந்த ஏழில் மலையில்,  மயிலடி இலைய – மயிலின்  கால்களைப் போன்ற இலைகளை  உடைய,

மா குரல் – கருமையான அல்லது பெரியக் குலைகள், 

அணி மிகு – மிகவும் அழகான,

மென் கொம்பு – மெல்லிய கிளைகள்,  ஊழ்த்த – உதிர்த்த, 

மணி மருள் – நீலமணியைப் போன்ற,  பூவின் – பூக்கள், 

 பாடு நனி கேட்டே – விழுவதை கேட்டவாறு


பயணம் தொடரும்....

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here