செவ்வாய், 14 ஜூலை, 2020

மழை இறங்கும் மாலை -மழலைக்கவி




  மழை இறங்கும் மாலை 


காற்றின் திசை அறியா 
தென்னைமரம் நெளிய

காகம் குருவியெல்லாமே 
இடம் தேடி அலைய 

வேகம் எடுத்து 
சில நாய்கள் 
இருட்டில்  ஓடித்தொலைய 

தாகம் தீர்ந்த 
நிலத்தின் வெடிப்பு 
மெல்ல மெல்ல மறைய 

இரைதேடி திரிந்த பாம்பு 
புற்று தேடி விரைய 

ஈசல் கூட்டம் அடுக்கடுக்காய் 
மேலே வரத் துணிய

வாசல் எங்கும் 
வண்ணக் கோலம்
மழைத்துளிகள் வரைய 

ஏழை உள்ளம் 
சன்னல் வழி 
மழை பார்த்து  நனைய 

ஏற்றம் தரும் 
வாழ்வை எண்ணி 
பயிர்கள் தவமும் கலைய

மாற்றம் வரும்  
காலம் கருதி 
பூமித்தாயும் சிரிக்கவே!!!!
           
                மழலைக்கவி 

ஞாயிறு, 12 ஜூலை, 2020

தங்க மீனவன்

நா முத்துக்குமார் 
பிறந்தநாள் வாழ்த்துகள்!!! 

காஞ்சியிலே பிறந்த 
கவிக்குழந்தை நீயே

கருவினிலே உயிர்த்த மொழிக்குழந்தை நீயே

அண்ணாவின் ஊர்பிறந்த 
தம்பியும்  நீயே

அன்னையவள் பாசம் 
கொண்ட மைந்தனும் நீயே

தமிழ் உந்தன் இளவயது 
தோழியும் தானே 

கைவிரலில் மறைந்திருந்தது தமிழ்ப்புதையல் தானே 

பாரதி போல் இளம் வயதில் 
பட்டம் கொண்டாய் 


பாட்டரங்க மேடை எங்கும் 
வெற்றியே கொண்டாய் 

தமிழோடு நீ கொண்ட 
உறவின் நீட்சி
 
தரணி வாழும் கவிதைகளே 
அதற்கும் சாட்சி 

அதனாலே நீ பிடித்தாய் 
பட்டாம்பூச்சி

தூர் தானே ஊர் போற்றும் கவிதையாச்சி 

அடுக்கடுக்காய் வாழ்த்துகளே குவியல் ஆச்சி 

இயற்பியலைக் கடந்து வந்த 
தமிழே உன்னை 

இந்நிலத்தில் போற்றாதார் 
யார் தான் உண்டு 

பச்சையப்பன் கல்லூரி 
தமிழால் வணங்கி 

நட்சத்திரக் கால் பதித்து 
வந்தாய் நீயும் 

நாடெல்லாம் போற்றும் படி 
பாட்டால் நின்றாய் 

அணிலாடும் முன்றிலுக்குள் அன்பைச் சொன்னாய் 

வேடிக்கைப் பார்ப்பவனாய் 
வாழ்க்கை சொன்னாய் 

தங்க மீன்கள் மேயவிட்டு 
விருதைப் பிடித்தாய் 

ஆனந்த யாழிசையில் 
அகிலம் வென்றாய்  

வாழ்வியலை வரிசைகட்டி 
பாட்டில் சொன்னாய்  

வரிவரியாய் கவிதைகளை 
மெட்டில் தந்தாய்

ஊரெல்லாம் உன் வரியே 
ஒலிக்கும் போது

உறங்கியே போனாயே 
குயிலே நீயும்

விண்ணுலகம் உம்புகழை 
அறிந்திட வேண்டி 

மண்ணுலகம் விட்டு நீயும்  
பயணம் போனாய் 

புவியுள்ள காலம் மொத்தம்  
கடந்தே  வாழும் 

தமிழ்கவியே உம்மொழியே 
பாட்டாய் பாடும் 

பிறந்தநாள் கொண்டாடும் 
கவியே வாழ்க.  . 
                     மழலைக்கவி 

 

சனி, 11 ஜூலை, 2020

பாவை நீயும் எனதழகே !!

மழையில் குளித்த நிலவொன்று கண்முன் வந்தது அழகாக    ! 

மன்மதன் கோயில் சிலையொன்று 
எதிரே வந்தது ரதியாக.! 

கார்குழல் விரித்த மயிலாக 
கவரும் அழகுத் தாரகையே  ! 

மயக்கும் பார்வை விழியாளே 
மயங்கும் எதுவும் உன்அழகாலே ! 

பாடும் குயிலே நீயும் தான் 
பச்சை வண்ண புடவை கட்டி  ! 

தங்கச்சரிகை போட்ட படி 
தவழும் அன்ன நடையழகே ! 

வண்டைக்கவரும் வாசத்தால் 
வளம் குறையா பூ நீயே  ! 

உண்டு களித்திடும் தேன் சுமந்த 
இன்பம் குறையா தாமரையே  ! 

தேனைச் சொட்டும் இதழ்களையே
சுவைக்க தெரியா வண்டுகளே  ! 

இருக்கும் ஊரின் நீ இருந்து 
வருவது என்ன புறப்படுவாய்  ! 

தேவலோகம் விலகி வந்த 
தேவதை உந்தன்  புகழ் அறியாத. ! 

மானிடக் கூட்டம் வாழுமிடம் 
மங்கை உனக்கு ஏற்றதுவோ ! 

இந்திரலோகம் உனை அழைக்க 
இருந்திடல் இங்கு முறை தானோ. .! 

பிரமன் செய்த  பேரழகே 
பிரபஞ்ச ராணி நீ தானே.  .! 

பார்வை கொண்டு சாய்த்திடுவாய் 
பாவை நீயும் எனதழகே.  .. 

               மழலைக்கவி 

வியாழன், 9 ஜூலை, 2020

இரவின் அழகே அழகு !!




       இரவின் அழகே அழகு !! 


அந்தி வானம் சிந்தும் அழகை 
ஏந்திக் கொள்ளும் பூமியே.  . 

இந்த சொர்க்கம் இல்லை இல்லை கண்டதில்லை எங்குமே.

வந்து போகும்  நிலவும் மீனும் 
குவிக்கும் அழகு ஆயிரம் 

 வானில்  பறந்து  கூடு தேடும் 
பறவைக்கூச்சல் நல்லிசை

பூவில் கிடந்து தேனில் மிதந்து 
ஓடும்  வண்டின்  மெல்லிசை 

இங்கும் அங்கும் ஓடும் மேகம் 
என்ன தேடி அலையுதோ 

 இதழ்விரிக்கும் அல்லிப்பூவின் 
மணம் அறிய வாடுதோ 

பயணம் மறந்து இரையில் கவனம் 
வைத்த குருவி ஒன்றுமே 

பனைமரத்தின் உச்சி மடலில் 
படுத்துரங்கும் அழகு காண்
 
தன் இனத்தை அறிந்து கொள்ள 
குயிலின்  பாடல்  திரும்வும் 

வேறு திசையில் வந்தபோது 
சேர்ந்து பாடும் அழகுகேள் 

இலைகள் சுருட்டி உறங்கும் செடிகள் 
காணும் காட்சி அற்புதம் 

இன்னும் இன்னும் கோடி அழகு 
இருளில் மூழ்கி மறையுதே. !!! 

இந்த இரவு இன்னும் இன்னும் புதையலாகத் தோன்றுதே!!!! 

                மழலைக்கவி 
              க.மகேஸ்வரன் 
                09-07-2020

நா. முத்துக்குமார்

நா.முத்துக்குமார்
பிறந்தநாள் வாழ்த்துகள்!!! 

காஞ்சியில் பிறந்த 
கருப்புத்தமிழன்
தாயை இழந்த
தமிழ்த்தாயின் தலைமகன்
பட்டாம்பூச்சி விற்க வந்து
தேசிய விருதுகள் வாங்கியவன்..

வறுமையை படித்து 
அறிவால் வென்றவன்
அறிவுமதியையே 
அன்பால் வென்றவன்
அளவிடா உறவுகளை 
அன்பால் பினைத்தான்
அன்பின் நீர் பாய்ச்சி 
நட்புகள் வளர்த்தான் ! 

பயணங்களின் காதலன் 
பாசம் நிறைந்த படைப்பாளி
கருணாவின் 
உள்ளம்கவர்ந்த சகோதரன்
செல்லதுரை வீட்டு 
செல்லப்பிள்ளை 
மீன்குழம்புக்கு வரையறை 
எழுதிய மீன் விரும்பி 

தன்னை புதுப்பித்து 
தமிழால் புதுமை செய்தவன்
தமிழ் வளத்தை காத்தவன்
தன் நலத்தை கவனிக்காதவன்
மஞ்சள்காமாலை  கடந்திருந்தால்
மஞ்சள் பட்டாடை புகழ்பரப்பும்
காஞ்சியின் புகழ் தெரிந்திருக்கும்
கனவெல்லாம் பளித்திருக்கும் 
கனவு படைப்பான சில்க் சிட்டி
நோபல் பரிசுகூட கிடைத்திருக்கும்

நோய் என்ற ஆயுதத்தால்
காலன் செய்த மாய வித்தை
காலத்தின் வலை மீனாய்
காலமானான் மீன் விரும்பி..

விட்டுவைத்து சென்ற இடம் 
வீரத்தமிழ் தலை கிரிடம்
உனக்கான இடம் அதற்கு 
உனை அன்றி போட்டி இல்லை
தரணியிலே  உன் புகழை
மிஞ்ச ஒரு ஆளுமில்லை 
தமிழா நீ சாகவில்லை
தமிமும் இசையுமாய் வாழ்கிறாய் ..
தமிழ் உள்ளவரை வாழ்ந்திடுவாய்
வாழ்க வளமுடன்.

  மழலைக்கவி
 க.மகேஸ்வரன்..

கண்மணியே கண்ணுறங்கு!!!


என்கண்மணியே கண்ணுறங்கு !! 

கருவுக்குள் உருபெற்று 
கால்பதித்த நாள் முதலே 
காத்திருந்தேன் காத்திருந்தேன் 
கண்மணியே உனக்காக. .!

எனக்குள்ளேநீ துளிர்த்த 
நல்ல செய்தி சொன்ன ஆச்சி 
மணிக்கட்டு நரம்பமுக்கி
மகிழ்ச்சியோடு சொன்னாலே ..!  

அதுமுதலே  நான் உன்னை 
பொத்தி பொத்தி வளர்த்தேனே 
ஆகாரம் கூட உன்னை
நினைத்தே தான் தின்னேனே ..!

 சாப்பிட்ட உணவு எல்லாம்
 ஒவ்வாமல் ஓடி வர
வாந்தியும் தான்  வந்த போதும் 
சலைக்காமல் நான் தின்னேன் !

மாசக் கணக்கை எல்லாம் 
மனசோடு எண்ணி வந்தேன் 
கொண்ட ஆசை அத்தனையும்  
கோடியுண்டு  நெஞ்சுக்குள்ள. !

  
மசக்கையில பட்ட பாடு 
பின் வாசல் கதவறியும் 
மல்லாந்து  படுத்த பாடு 
கயித்து கட்டில் தானறியும் !


வாந்தியில வயிர் வலிச்சா
உனக்கு நோகும் என்பதால
அடக்கி அடக்கி தோற்றுப் போனேன் 
அடி வாசல் தாண்டுமுன்னே !


வயிற்றுக்குள்ள உன்னை வச்சி 
வலிக்காமல் நான் நடந்தேன் 
அதிர்வில்லா வேலை மட்டும் 
அளவோடு செய்து வந்தேன்!

நாத்து நடப் போகவில்லை  
களை புடுங்க  இறங்கவில்லை 
கருவளரும் பிள்ளை  உனக்கு 
வலி கொடுக்க மனசுமில்லை !

எட்டு மாசம் தாண்டியாச்சி 
வயிறு மொத்தம் சரிந்துபோச்சி
கொட்டும் மேள சத்தத்தோடு 
சாதி சனம் கூடியாச்சி !

கண்ணாடி வலவி போட்டு 
கலர்கலரா சோறும் போட்டு 
சந்தனத்தில் நலங்கு வச்சி 
சாதி சனம் வாழ்த்தியாச்சி  !


 அடிமேல அடிவச்சி  
ஆடிநானும் நடந்து வர 
ஆத்தா உன் புள்ளைக்கு 
நல்ல செய்தி சொல்லிடம்மா  !

பெரியவங்க சொன்ன படி 
கதை கதையா சொன்னதெல்லாம்  பின்னால உதவும்  என்று 
பிசகாம கேட்டு வைத்தாய் !

 பத்தாம் மாதம்  தொடங்கயிலே 
பத்திரமாய் நான் இருக்க 
குதித்து வர காத்திருக்கும் 
உன் நெனப்பில் பூத்திருக்க.!

உலகத்து சாமிக்கெல்லாம் 
வேண்டுதல்கள் கோடி ஆச்சி 
உனை பார்க்கும் ஆவல் கொண்டே
துடிக்குதிங்கே என் மூச்சி !

அடிவயிறு வலியெடுக்கும்
அடையாளம் தெரியலயே  
அப்படியும் இப்படியும் மக்கள் 
சொன்னகதை புரியலயே  ! 

 எப்படியும் பிள்ளை உன்னை 
நான் தானே பெறவேண்டும் 
துணிவு மொத்தம் கொண்டவளாய் 
காத்திருந்தேன் பெற்றெடுக்க.!

சொன்ன தேதி வந்தபோது 
சொர சொரனு மனசுக்குள்ள 
 பயம் ஒன்று பற்றிக்கொள்ள
பதறிப் போய்தான் நின்றேனே.! 

குழப்பிக் கொண்டே  கிடந்தேன் நான் 
காலை மாலை இரவு என 
எப்போது வலி வருமோ 
திக்கத்து போனேன் நான் ! 

மெதுமெதுவாய் பகல்  ஓட 
அந்தி சாயும்  மாலையில
வேலை எல்லாம் முடிஞ்ச பின்னே
சாஞ்சி கிடந்தேனே தூங்காம.! 


அப்பப்போ  வரும் போல 
அடி வயிற்றில் சிறுவலியும் 
அந்த நேரம் கூடிடுச்சி 
வலியும் ரொம்ப அதிகமாச்சி  ! 

பஸ் புடிக்க  நின்னேனே
ஆஸ்பத்திரி போக வேண்டி
தட்டுத் தடுமாறி போய் சேர்ந்தேன் 
அவசமாய் ஆஸ்பத்திரி.!

 அவசரமாய் புடவை மாத்தி  
அணியெல்லாம் கழற்றிவிட்டு 
நான் மட்டும் போனேனே 
உனை சுமந்த வயித்தோட.! 

உனக்கு முன்னால 
எத்தனையோ பேர்பிறக்க 
கருவுக்குள் துடித்திருக்க 
வெளியே வர காத்திருக்க.!

 நானும் அந்த ஆவலோடு 
நடையெங்கும் நடந்தேனே 
நர்சம்மா சொன்ன வாக்கு 
நடந்திடவே நான் விரும்பி! 

நடநடயா  நான் நடந்தே
குதிகாலும் நொந்துபோக
அடி வயிற்றில் நீ உதைத்த 
அதிவேக உதை ஒன்னு  ! 

தண்ணீர் குடம் உடைந்து  
தரையிரங்கி சொட்டயில 
ஓடி நான்  போய் சொன்னேன் 
ஊசிபோடும் நர்ஸ்கிட்ட . .! 

 விறு விறுனு கூட்டிப்போயி  
 படுக்கயில கிடத்திப்புட்டு 
வந்த வேலை முடிந்தது போல் 
வாய் பேசாம போச்சிதந்தம்மா  ! 

 சில்வர் தகட்டு மேல 
நெலியும் பனி கட்டி போல 
நடுங்கி நான் நெளிந்தேனே 
நள்ளிரவு கடந்தபோதும்   ! 

 வலி ஏதும் எடுக்காம 
வரும் பாடும் இல்லாம 
விழிபிதுங்கி காத்திருந்தேன் 
கண்மணியே உன் வரவை   ! 

உடல்பில் ஊரிவரும் 
உள்மூச்சி வலியொன்னு 
மேல்மூச்சும் கீழ்மூச்சும் 
இன்னும் குறையவில்லை   ! 

இயல்பாய் இழுத்த மூச்சை 
இருமடங்கா உந்தி தள்ள
இன்னு இன்னு வேகமுன்னு 
சொன்ன சொல்லு மாறலயே!!

உயிரை நான் பிடிச்சி 
உன்னை வெளியேற்ற 
நாடி நரம்புஎல்லாம் 
வலிமையத்து போனதுவே  ! 

நீ தான் செய்ய வேணும் 
பிள்ளைய பெக்க வேணும்
முக்குடியம்மா முக்குனு 
மூத்த நர்ஸ்சு சொல்லிப்போச்சி  ! 

இன்னும் இன்னும் போராடி 
மொத்த உயிர் நான் திரட்டி 
உன்னை வெளியேற்ற 
எடுத்த முயற்றி தோற்கவில்லை  ! 

கருவறையை தாண்டி நீயும் 
கவனமாக வெளியில் வர 
தலைவந்த செய்தி சொல்லி 
கத்தியால் கீறல் போட. ! 

சத்தம் மொத்தம் கத்தி தீர்த்த 
பேச்சற்ற தொண்டை நோக 
வேண்டாத தெய்வமில்லை 
நினைக்காத நினைப்பு இல்லை  ! 

காத்து மட்டும் வந்து போக 
கழுத்தளவு எழுந்து நானும் 
முக்கி தானும் வெளித் தள்ள 
முழு உடலாய் நீ வந்தாய்  ! 

தொப்புல் கொடியோடும் 
காத்துவந்த சதையோடும்
என்னை பிளந்தபடி  
கண்மணியே நீ பிறந்தாய்  ! 

தொப்புல் கொடிவேட்டி 
பின் முதுகில் தட்டு தட்டி 
உன் சத்தம்  எழுகையிலே 
என் சத்தம் குறைந்ததுவே ! 

கழுவி உனைத்துடைத்து 
மார்போடு போட்டதுல
கதகதப்பு  கூடிநிற்க 
கண்மணியே நீ கிடந்தாய்  ! 


உள்ளே கிடந்த உன்னை 
வெளியே பார்த்ததுல 
மகிழ்ச்சி குறையவில்லை  
மனசு வலியை நினைக்கவில்லை  ! 

கருவுக்குள் இருந்த உன்னை 
கண்ணாலே காணும் காட்சி 
வடிவம் கொண்டு வந்த கண்ணே  
என்னுயிரே என்ன சொல்ல.! 

பத்து மாசம் காத்திருந்து 
பார்த்த முகம் கண்மணியே 
பொத்தி பொத்தி உனை வளர்க்க 
பொழப்பு மொத்தம் கண்மணியே.!!! 

உன்னுயிரை நான் சுமந்து 
என்னுயிராய் உனை ஈன்று கண்ணுக்குள்ளே காத்திடுவேன் கண்மணியே கண்ணுறங்கு.  .!!! 
                          
                           மழலைக்கவி 
                               08-07-2020





உயிரே உறவே .!!






தன்னம்பிக்கை துணைவருமே.!




காதல் கணவா . .

  காதல் கணவா. . 

அந்தி சாயும் வேளையிலே 
முந்திக் கொள்ளும் பேரழகா 

அன்பைப் பொழியும் எனதழகா 
வேலைகள் உண்டு ஏராளம் 

உணவை சமைக்கும் முன்பாக 
தின்னத் துடிப்பது முறைதானோ
 
உனக்கும் உண்டு கலங்காதே 
உறக்கம் தொடும் முன் விழிக்காதே

பதைக்கும் கைகள் ஓயட்டும் 
பாதை மாற்றி போவாயே 

வதைக்கும் உனது அன்புக்கே 
வாழ்வைத் தந்தேன் காப்பாயே 

இருக்கும் பணிகள் நான் முடிக்க 
இருக்கும் நேரம் வெகு சிலவே 

இருக்கம் கொண்டு நீ அணைக்க 
இருக்கும் காலம் மிகப் பலவே 

இயல்பாய் கொஞ்சம் ஓய்ந்திடுவாய் 
இதழ்கள் சிதைக்கும் பணி விடுத்து 

இன்னும் இன்னும் சில நிமிடம் 
இதுவே கடைசி பணியாகும் 

இரவின் தொடக்கம் வருமுன்னே 
இங்கே வந்ததின் நோக்கத்தை 

இரக்கம் இன்றி நீ நிகழ்த்த 
இறங்கும் பெண்மையும் நான் தானே

இனிமை கொண்டே அரங்கேறும் 
இரவின் ஆட்டம் அத்தனையும் 

இனிதே தொடங்கும் நேரம் வா 
இறுதி வரையில் முயல்வோம் வா. !  

கட்டில் மொத்தம்  களமாக 
கட்டுடடல்  இரண்டும்  வளமாக 

வாஞ்சை கொண்டு நீ தாக்க 
வஞ்சி உண்டு உனைத்தாங்க 

மிஞ்சும் வேகம் உடல்பரப்பு 
மிகைபடும் காதல் உளம் நிரப்பு

கொஞ்சு மொழிகள் வேண்டாமே 
குவியும் முத்தம் போதாதே 

கெஞ்சும் படியாய் நீ ஆடு 
கிரங்க வேண்டும் உயிர்க்கூடு 

மஞ்சம் வந்த பின்னாலே 
பஞ்சம் வேண்டாம் அள்ளிக்கொடு

வஞ்சம் கொள்ளா அன்பாலே 
வாலை என்னை பின்னிடுவாய் 

நெஞ்சம் மொத்தம் நீயாக 
நித்தம் நித்தம் பன்னிடுவாய் 

கஞ்சன் போல ஓய்வேடுத்து 
வள்ளல் போலே உழைத்திடுவாய் 

பசுமை கொண்ட நிலமாக 
பயிர்கள் செழிக்க வளமாக 

விதையை ஆழ நீ தூவு 
விருட்சம் காண்போம் விரைவாக.  . 

மதயானையின் ஓய்வாக 
மடியில் சாய்வாய் முடிவாக.  . 

கோழி கூவிய சத்தத்தில் 
குரட்டை இன்றி உறங்கிடுவோம்.  
 
                    மழலைக்கவி 
                        08-07-2020.

தனிமையின் தவிப்புகள்







சிறார்திரைப்படம்

 Download  Click here