செவ்வாய், 14 ஜூலை, 2020

மழை இறங்கும் மாலை -மழலைக்கவி




  மழை இறங்கும் மாலை 


காற்றின் திசை அறியா 
தென்னைமரம் நெளிய

காகம் குருவியெல்லாமே 
இடம் தேடி அலைய 

வேகம் எடுத்து 
சில நாய்கள் 
இருட்டில்  ஓடித்தொலைய 

தாகம் தீர்ந்த 
நிலத்தின் வெடிப்பு 
மெல்ல மெல்ல மறைய 

இரைதேடி திரிந்த பாம்பு 
புற்று தேடி விரைய 

ஈசல் கூட்டம் அடுக்கடுக்காய் 
மேலே வரத் துணிய

வாசல் எங்கும் 
வண்ணக் கோலம்
மழைத்துளிகள் வரைய 

ஏழை உள்ளம் 
சன்னல் வழி 
மழை பார்த்து  நனைய 

ஏற்றம் தரும் 
வாழ்வை எண்ணி 
பயிர்கள் தவமும் கலைய

மாற்றம் வரும்  
காலம் கருதி 
பூமித்தாயும் சிரிக்கவே!!!!
           
                மழலைக்கவி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here