ஞாயிறு, 12 ஜூலை, 2020

தங்க மீனவன்

நா முத்துக்குமார் 
பிறந்தநாள் வாழ்த்துகள்!!! 

காஞ்சியிலே பிறந்த 
கவிக்குழந்தை நீயே

கருவினிலே உயிர்த்த மொழிக்குழந்தை நீயே

அண்ணாவின் ஊர்பிறந்த 
தம்பியும்  நீயே

அன்னையவள் பாசம் 
கொண்ட மைந்தனும் நீயே

தமிழ் உந்தன் இளவயது 
தோழியும் தானே 

கைவிரலில் மறைந்திருந்தது தமிழ்ப்புதையல் தானே 

பாரதி போல் இளம் வயதில் 
பட்டம் கொண்டாய் 


பாட்டரங்க மேடை எங்கும் 
வெற்றியே கொண்டாய் 

தமிழோடு நீ கொண்ட 
உறவின் நீட்சி
 
தரணி வாழும் கவிதைகளே 
அதற்கும் சாட்சி 

அதனாலே நீ பிடித்தாய் 
பட்டாம்பூச்சி

தூர் தானே ஊர் போற்றும் கவிதையாச்சி 

அடுக்கடுக்காய் வாழ்த்துகளே குவியல் ஆச்சி 

இயற்பியலைக் கடந்து வந்த 
தமிழே உன்னை 

இந்நிலத்தில் போற்றாதார் 
யார் தான் உண்டு 

பச்சையப்பன் கல்லூரி 
தமிழால் வணங்கி 

நட்சத்திரக் கால் பதித்து 
வந்தாய் நீயும் 

நாடெல்லாம் போற்றும் படி 
பாட்டால் நின்றாய் 

அணிலாடும் முன்றிலுக்குள் அன்பைச் சொன்னாய் 

வேடிக்கைப் பார்ப்பவனாய் 
வாழ்க்கை சொன்னாய் 

தங்க மீன்கள் மேயவிட்டு 
விருதைப் பிடித்தாய் 

ஆனந்த யாழிசையில் 
அகிலம் வென்றாய்  

வாழ்வியலை வரிசைகட்டி 
பாட்டில் சொன்னாய்  

வரிவரியாய் கவிதைகளை 
மெட்டில் தந்தாய்

ஊரெல்லாம் உன் வரியே 
ஒலிக்கும் போது

உறங்கியே போனாயே 
குயிலே நீயும்

விண்ணுலகம் உம்புகழை 
அறிந்திட வேண்டி 

மண்ணுலகம் விட்டு நீயும்  
பயணம் போனாய் 

புவியுள்ள காலம் மொத்தம்  
கடந்தே  வாழும் 

தமிழ்கவியே உம்மொழியே 
பாட்டாய் பாடும் 

பிறந்தநாள் கொண்டாடும் 
கவியே வாழ்க.  . 
                     மழலைக்கவி 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here