இரவின் அழகே அழகு !!
அந்தி வானம் சிந்தும் அழகை
ஏந்திக் கொள்ளும் பூமியே. .
இந்த சொர்க்கம் இல்லை இல்லை கண்டதில்லை எங்குமே.
வந்து போகும் நிலவும் மீனும்
குவிக்கும் அழகு ஆயிரம்
வானில் பறந்து கூடு தேடும்
பறவைக்கூச்சல் நல்லிசை
பூவில் கிடந்து தேனில் மிதந்து
ஓடும் வண்டின் மெல்லிசை
இங்கும் அங்கும் ஓடும் மேகம்
என்ன தேடி அலையுதோ
இதழ்விரிக்கும் அல்லிப்பூவின்
மணம் அறிய வாடுதோ
பயணம் மறந்து இரையில் கவனம்
வைத்த குருவி ஒன்றுமே
பனைமரத்தின் உச்சி மடலில்
படுத்துரங்கும் அழகு காண்
தன் இனத்தை அறிந்து கொள்ள
குயிலின் பாடல் திரும்வும்
வேறு திசையில் வந்தபோது
சேர்ந்து பாடும் அழகுகேள்
இலைகள் சுருட்டி உறங்கும் செடிகள்
காணும் காட்சி அற்புதம்
இன்னும் இன்னும் கோடி அழகு
இருளில் மூழ்கி மறையுதே. !!!
இந்த இரவு இன்னும் இன்னும் புதையலாகத் தோன்றுதே!!!!
மழலைக்கவி
க.மகேஸ்வரன்
09-07-2020
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக