மன்மதன் கோயில் சிலையொன்று
எதிரே வந்தது ரதியாக.!
கார்குழல் விரித்த மயிலாக
கவரும் அழகுத் தாரகையே !
மயக்கும் பார்வை விழியாளே
மயங்கும் எதுவும் உன்அழகாலே !
பாடும் குயிலே நீயும் தான்
பச்சை வண்ண புடவை கட்டி !
தங்கச்சரிகை போட்ட படி
தவழும் அன்ன நடையழகே !
வண்டைக்கவரும் வாசத்தால்
வளம் குறையா பூ நீயே !
உண்டு களித்திடும் தேன் சுமந்த
இன்பம் குறையா தாமரையே !
தேனைச் சொட்டும் இதழ்களையே
சுவைக்க தெரியா வண்டுகளே !
இருக்கும் ஊரின் நீ இருந்து
வருவது என்ன புறப்படுவாய் !
தேவலோகம் விலகி வந்த
தேவதை உந்தன் புகழ் அறியாத. !
மானிடக் கூட்டம் வாழுமிடம்
மங்கை உனக்கு ஏற்றதுவோ !
இந்திரலோகம் உனை அழைக்க
இருந்திடல் இங்கு முறை தானோ. .!
பிரமன் செய்த பேரழகே
பிரபஞ்ச ராணி நீ தானே. .!
பார்வை கொண்டு சாய்த்திடுவாய்
பாவை நீயும் எனதழகே. ..
மழலைக்கவி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக