அந்தி சாயும் வேளையிலே
முந்திக் கொள்ளும் பேரழகா
அன்பைப் பொழியும் எனதழகா
வேலைகள் உண்டு ஏராளம்
உணவை சமைக்கும் முன்பாக
தின்னத் துடிப்பது முறைதானோ
உனக்கும் உண்டு கலங்காதே
உறக்கம் தொடும் முன் விழிக்காதே
பதைக்கும் கைகள் ஓயட்டும்
பாதை மாற்றி போவாயே
வதைக்கும் உனது அன்புக்கே
வாழ்வைத் தந்தேன் காப்பாயே
இருக்கும் பணிகள் நான் முடிக்க
இருக்கும் நேரம் வெகு சிலவே
இருக்கம் கொண்டு நீ அணைக்க
இருக்கும் காலம் மிகப் பலவே
இயல்பாய் கொஞ்சம் ஓய்ந்திடுவாய்
இதழ்கள் சிதைக்கும் பணி விடுத்து
இன்னும் இன்னும் சில நிமிடம்
இதுவே கடைசி பணியாகும்
இரவின் தொடக்கம் வருமுன்னே
இங்கே வந்ததின் நோக்கத்தை
இரக்கம் இன்றி நீ நிகழ்த்த
இறங்கும் பெண்மையும் நான் தானே
இனிமை கொண்டே அரங்கேறும்
இரவின் ஆட்டம் அத்தனையும்
இனிதே தொடங்கும் நேரம் வா
இறுதி வரையில் முயல்வோம் வா. !
கட்டில் மொத்தம் களமாக
கட்டுடடல் இரண்டும் வளமாக
வாஞ்சை கொண்டு நீ தாக்க
வஞ்சி உண்டு உனைத்தாங்க
மிஞ்சும் வேகம் உடல்பரப்பு
மிகைபடும் காதல் உளம் நிரப்பு
கொஞ்சு மொழிகள் வேண்டாமே
குவியும் முத்தம் போதாதே
கெஞ்சும் படியாய் நீ ஆடு
கிரங்க வேண்டும் உயிர்க்கூடு
மஞ்சம் வந்த பின்னாலே
பஞ்சம் வேண்டாம் அள்ளிக்கொடு
வஞ்சம் கொள்ளா அன்பாலே
வாலை என்னை பின்னிடுவாய்
நெஞ்சம் மொத்தம் நீயாக
நித்தம் நித்தம் பன்னிடுவாய்
கஞ்சன் போல ஓய்வேடுத்து
வள்ளல் போலே உழைத்திடுவாய்
பசுமை கொண்ட நிலமாக
பயிர்கள் செழிக்க வளமாக
விதையை ஆழ நீ தூவு
விருட்சம் காண்போம் விரைவாக. .
மதயானையின் ஓய்வாக
மடியில் சாய்வாய் முடிவாக. .
கோழி கூவிய சத்தத்தில்
குரட்டை இன்றி உறங்கிடுவோம்.
மழலைக்கவி
08-07-2020.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக