வெள்ளி, 26 நவம்பர், 2021

10 தமிழ் அலகுத்தேர்வு -1 விடைகுறிப்பு கள்ளக்குறிச்சி மாவட்டம்-10th TAMIL UNIT TEST -1 ANSWER KEY

 10 தமிழ் அலகுத்தேர்வு -1 விடைகுறிப்புகள்-

கள்ளக்குறிச்சி மாவட்டம்

10th TAMIL UNIT TEST -1 ANSWER KEY




   10th TAMIL UNIT TEST -1 ANSWER KEY

                 10 ஆம் வகுப்பு தமிழ்

          கள்ளக்குறிச்சி மாவட்டம்

                    அலகுத்தேர்வு-1

                     விடைகுறிப்பு

                    

1.)எம்+ தமிழ் + நா

2.இ) மணி வகை .

3 அ) சருகும் சண்டும்.

4. ஈ)க. சச்சிதானந்தன்

5. ஆ) பாடல், கேட்டவர்.

6. ஈ) அந்தமான்

7.   ஆ) அல்லூர்.

8.i) உலகத்திலேயே ஒரு மொழிக்காக மாநாடு நடத்திய முதல் நாடு எது?

 ii) திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்ற நூலை எழுதியவர் யார்?

9.  சீவகசிந்தாமணி, வளையாபதி, குண்டலகேசி.

 

 

 

10.    பூம்பிஞ்சு,

            பிஞ்சு,

வடு,

மூசு,

            இளநீர்

 

11.வேங்கை - மரம், புலி

   வேம் + கை வேகின்ற  கை

   வேங்கை என்னும் சொல் தனிமொழியாய்

   நின்று மரம் எனும் பொருளையும்,

   தொடர்மொழியாய் வேகின்ற கை என வேறு   பொருளையும் தருவதால் பொதுமொழியாகும்.

 12. அடவி- காடு

    பழனம்-வயல்

13 Homagraph - ஒப்பெழுத்து

Conversation - உரையாடல்

 

14.    காண் - காணுதல்

         சிரி - சிரித்தல்

         படி - படித்தல்

         தடு - தடுத்தல்

 

15.    கல் - கற்குவியல்

       ஆடு  - ஆட்டுமந்தை

16.

மொழிச்சிறப்பு:

செம்மை பெற்ற தமிழ்மொழி, அன்னை மொழியாகவும், பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியாகவும்,

குமரிக்கண்டத்தில் நிலைத்து ஆட்சிசெய்த மண்ணுலகப் பேரரசாகவும் விளங்குகிறது.

இலக்கியச் சிறப்பு:

பாண்டிய மன்னனின் மகளாகவும்,திருக்குறளின் பெருமைக்குரியவளாகவும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண் கீழ்க்கணக்கு, சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய இலக்கியச் சிறப்புக்கு உரியவளாகவும் திகழ்கிறாள். ஆகவே, தமிழன்னையைப் பாவலரே வாழ்த்துகிறார்.

 

17. அழகார்ந்த செந்தமிழே! -  மனப்பாடம்

*அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

               -    பெருஞ்சித்திரனார்

18 1) வரகு, காடைக்கண்ணி, குதிரைவாலி.

         ii) சம்பாக்கோதுமை, குண்டுக்கோதுமை,

            வாற்கோதுமை

        iii) பயிர் வகைகள்

19.

1.நாற்று - நெல் நாற்று நட்டேன்.

2.கன்று - வாழைக்கன்று வளமாக இருந்தது.

3.பிள்ளை -தென்னம்பிள்ளையைத் தெற்கில் வைத்தேன்.

4.வடலி -பனை வடலியைப் பாங்காக வளர்த்தேன்.

5.பைங்கூழ் - பைங்கூழ் பசுமையாக இருந்தது.

 

20.


தனிமொழி,

ஒரு சொல் தனித்து நின்று பொருள் தருவது தனிமொழி எனப்படும்.

எ - கா : பூ, மாடு, கண், கண்ணன்.

தொடர்மொழி

இரண்டு அல்லது இரண்டிற்கு மேற்பட்ட தனிமொழிகள் தொடர்ந்து நின்று, பொருள்களைத் தருவது தொடர்மொழியாகும்.

எ - கா : கண்ணன் வந்தான். நிலம் கடந்தான்.

பொதுமொழி

ஒரு சொல், தனித்து நின்று ஒரு பொருளையும், அச்சொல்லே, பிரிந்துநின்று, தொடர்மொழியாகி வேறு பொருளையும் தருவது பொதுமொழியாகும்.

எ -கா : தாமரை (தனிமொழி) - தாமரைப்பூவைக் குறிக்கும். தா + மரை (தொடர்மொழி) - தாவுகின்ற மானைக் குறிக்கும்.

இவ்வாறு ஒருசொல், தனிமொழியாகவும் தொடர்மொழியாகவும் வெவ்வேறு பொருள் தருவது பொதுமொழியாகும்.

 

21.அரியவற்றுள் எல்லாம் அரிதே பெரியாரைப்

  பேணித் தமராக் கொளல்.

வ.எண்

               சீர்

  அசை

வாய்ப்பாடு

1

அரி/யவற்/றுள்

நிரை/நிரை /நேர்

புளிமாங்காய்

2

எல்/லாம்

நேர்/ நேர்

தேமா

3

அரி/தே

நிரை /நேர்

புளிமா

4

பெரி/யா/ரைப்

நிரை /நேர்/ நேர்

கருவிளங்காய்

5

பே/ணித்

நேர்/ நேர்

தேமா

6

தம/ராக்

நிரை /நேர்

புளிமா

7

கொளல்

நிரை

மலர்

இக்குறட்பா 'மலர்' என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது.

22 .  அறிவைப் பூட்டி வைக்காதே !

அறியாமை இருளில் தலை குனியாதே !

அறிவுப் பூட்டைத் திறந்திடு !

அறம் பொருள் இன்பம் கற்றிடு !

அவனியில் சிறந்து விளங்கிடு !

 

23. 

*தொடர் மழைக் காலங்களில் மக்கள்

வீடுகளில் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.

 * தேவையான உணவுப் பொருட்கள், தீப்பெட்டி, மெழுகுவர்த்தி போன்றவற்றைக் கையிருப்பில் வைக்க வேண்டும்.

* நீர் நிறைந்த ஆறு, குளம், குட்டை, ஏறி, கிணறு போன்ற பகுதிகளுக்குச் செல்லக் கூடாது..

* மின் சாதனப் பொருட்களைக் கவனமுடன் கையாள வேண்டும்.

* குடிசை வீடுகள், இடிந்து விழும் நிலையில் உள்ள  வீடுகளில் தங்காமல் பாதுகாப்பான இடங்களில் தங்க வேண்டும்.

 * வானிலைச் செய்திகளைக் கவனிக்க வேண்டும்..

23

(அல்லது)

    1பொது அறிவு  நூல்களைத் தேடிப்  படித்தவர் போட்டித்தேர்வில் வென்றார்

     2.ஊட்டமிகுஉணவு உண்டவர் நீண்டநாள் வாழ்ந்தார்

    3.இப்போது நம்மை வாழ்த்துகிறவர் நமது ஆசிரியர்

    4. தென்னை நட்டவர் இளநீரும் தேங்காயும் பெறுவார்

 

24.மொழிபெயர்ப்பு

            1.

நீங்கள் ஒரு மொழியில் மனிதரிடம் பேசினால், அது அவரின் அறிவைச் சென்றடைவதால் அவர் புரிந்துகொள்கிறார். நீங்கள் அவருடைய சொந்த மொழியில் பேசினால், அது அவருடைய இதயத்தைத் தொடும். - நெல்சன் மண்டேலா.

2.

மொழி என்பது பண்பாட்டின் வழிகாட்டி. அது மக்கள் எங்கே இருந்து வந்தார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதனைக் கூறும். - ரீட்டா மே பிரவுன்.

(அல்லது)

 24

 அ) தோட்டத்தில் பூத்த மணமலர்களில் வண்டுகள் மொய்த்துப் பண்பாடி மதுவுண்டன..

ஆ) பசுப்போல் அமைதியும் புலி போல் தீரமும் களிறு போல் உழைப்பும் வேண்டும்.

இ) வள்ளல் குமணன், ஏழ்மையால் வாடிவந்த பாவலனுக்குத் தனது தலையைக் கொடுத்துப் புகழ் பெற்றான்.

ஈ) நளனைக் கண்ட மக்கள், மழை முகில் கண்ட மயில் போல மகிழ்ச்சி கொண்டனர்

 

25.


என்னைத் தாலாட்டிய மொழி!

எனதருமைத் தாய்மொழி!

என் இனிய தமிழ்மொழி!

எண்ணமெல்லாம் நிறைந்த மொழி!

என் தாய்மொழிக்குத் தலை வணங்குகிறேன்.

அனைவருக்கும் வணக்கம்!

 

மனோன்மணீயம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல் விளக்கம்:

    பூமி என்ற பெண்ணின் ஆடை நீராலான கடல், முகம் பாரத கண்டம் ஆகும். நெற்றியாகத் தக்காணம் திகழ்கிறது. நெற்றியில் பொட்டு வைத்தது போல் தமிழகம் திகழ்கிறது. எல்லாத் திசைகளிலும்

    தமிழ்த்தாய் புகழ் பெற்று விளங்குகிறாள் எனச் சிறப்பிக்கிறார். உலகின் மூத்த மொழி, இளமையான மொழி, வளமான மொழி, பெண்ணே, தாயே உன்னை வாழ்த்துகிறேன் என்று பலவாறு வாழ்த்துகிறார்.

பெருஞ்சித்திரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின் பொருள்:

    அன்னை மொழியாக அழகாய் அமைந்து பழமைக்குப் பழமையாய்த் திகழும் மொழி. குமரிக்கண்டத்தில் நிலைத்து நிற்கும் வகையில் பாண்டிய மன்னனின் மகளாகத் திகழும் மொழி.

    தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் தலையணிந்து விளங்கும் தமிழை வாழ்த்துகின்றேன்.

ஒப்புமை:

இரு பாடல்களிலும் தமிழ் தாயாகவும், பழமையான மொழியாகவும் சிறப்பிக்கப்படுகிறது. எல்லாத்திசைகளிலும் புகழ் பெற்று நிலைத்து நிற்பது என்றும் இளமையானது என்று பொருள்பட அமைந்துள்ளது. பெண், தாய், மகள் என வெவ்வேறு வகையில் அழைத்தாலும் தமிழைத் தாயாக சிறப்பிக்கின்றனர். நறுமணமிக்க மொழி என்ற பொருளில் இருபாடல்களும் அமைந்துள்ளன.

                                            (அல்லது)

 25.


        தமிழ்ச் சொல்வளம்,

'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தக் குடி" என்பதற்கு ஏற்றவாறு தமிழ்மொழி தோன்றியது என்பது உண்மை. இதை தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.

கால வெள்ளத்தில் கரைந்து போன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ்.

 

    தமிழ்ச் சொல்வளம் பல துறைகளிலும் உள்ளது.

அதில் பயிர்வகைச் சொற்கள் மட்டும் சிறப்பாக எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன.

ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொற்கள் :

 தாள், தண்டு, கோல்,தூறு,தட்டு. கழி, கழை, அடி ஆகும்.

 

தாவரங்களின் இலை வகைகள்:

தாள், தோகை, இலை, ஓலை,சண்டு, சருகு.

கொழுந்து வகை: (நுனிப்பகுதி )

துளிர், கொழுந்து, குருத்து, கொழுந்தாடை பிஞ்சு வகை: வடு. பூம்பிஞ்சு, மூசு, கவ்வை. கச்சல் இன்னும் பிற. மேற்கண்ட அனைத்தும் தமிழ் சொல் வளமுடையது என்பதைக் காட்டுகிறது.

 

புதிய சொல்லாக்கத்திற்கான தேவை:

 

    புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், கருவிகள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு வேறு மொழி சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்கள் கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில் பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்கள் அமைந்தால் மட்டுமே தமிழ் நிலைத்து நிற்கும். வணிகம். பொருளாதாரம், அரசியல், சமூகம், அரசு சார்ந்த துறைகள் அனைத்திலும் தமிழ் மொழியாக்கம் தகுந்த சொற்களோடு அமைய வேண்டும்.

     கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு தமிழ்மொழியும் நடைபோடுவது அவசியம். புதிய சொல்லாக்கம் அழிந்து வரும் மொழிகளின் வரிசையில் இல்லாமல் எதிர்கால சந்ததியினருக்கு மொழியை எடுத்துச் செல்ல உதவும் என்பது உறுதி.


 26. சான்றோர் வளர்த்த தமிழ்

 

முன்னுரை

            முதல் மாந்தன் பேசிய மொழியான தமிழின் தொன்மை ஆய்வுக்குட்பட்டது. உலகின் பல மொழிகளுக்குத் தாய்மொழியாக இருப்பதும் தமிழே. அத்தமிழை வளர்க்க முயன்ற சான்றோர்கள் பலரை வளர்த்தது தமிழ் தமிழால் சான்றோரும் சான்றோரால் தமிழும் வளர்ந்ததை இலக்கிய  உலகு நன்கு அறியும்.  

வள்ளுவரும் ஒளவையும்

       உலகப்பொதுமறை தந்த வள்ளுவர் தமிழை உலகறியச் செய்தார். மூன்றடியில் உலகளந்த இறைவன் போல் ஈரடியில் உலகளந்த புலவன் வள்ளுவரே. பல மொழிகளில் பெயர்க்கப்பட்ட குறள் தமிழின் புகழைப் பறைசாற்றும், ஓரடியில் ஆத்திசூடி தந்த ஒளவையும் தமிழின் சிறப்பை வரிசைப்படுத்தினார். தமிழ் வளர்க்க ஒளவை வேண்டி நெல்லிக்கனி தந்த அதியமானும் தமிழ் வளர்த்தவரே.

 

 இலக்கியத்தில் தமிழ்

          ஐம்பெருங்காப்பியங்களும் ஐஞ்சிறு காப்பியங்களும் இதிகாசங்களும் கண்டவர்கள் தமிழின் இலக்கிய வாழ்வை மேம்படுத்தினர், கம்பன் தந்த உவமையும் சொல்லாடலும் தமிழின் பெருமைக்குச் சான்றுகள். அறநூல்களை அள்ளித்தந்த சான்றோர் அகமும் புறமும் படைத்து தமிழின் தமிழரின் தமிழ்நாட்டின் உயர்வை உலகிற்கு உணர்த்தினர்.

சிற்றிலக்கியத்தில் தமிழ்

 

       பரணி பாடிய செயங்கொண்டார் போன்றோரும், உலா பாடிய ஒட்டக்கூத்தர் போன்றோரும். குறவஞ்சி பாடிய திரிகூடராசப்பர் போன்றோரும், தூது தந்த புலவர்களும், கலம்பகம் தந்த புலவர்களும், பிள்ளைத்தமிழ் தந்த புலவர்களும், பள்ளு பாடிய புலவர்களும் 96 வகைச் சிற்றிலக்கியங்களை வழங்கிய பலரும் தமிழை வளர்த்தனர்.

பிறநாட்டார்

     வீரமாமுனிவர் சதுரகராதி தந்து தமிழால் பெருமை பெற்றார். போப் தமிழின் சிறப்புகளை மொழிபெயர்ப்பின் மூலம் உலகறியச் செய்தார். பிறநாட்டார் பலர் தமிழைப் போற்றி தமிழால் அறியப்பெற்றனர். பிற மொழி பேசுபவர்களும் தமிழை அறிய ஆர்வம் கொண்டனர்.

மொழிப்பற்றாளர்

      அகரமுதலி வெளியிட்ட தேவநேயப் பாவாணரும், பல நூல்களைப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதரும், மொழித்தியாகிகளும், பாரதியார், பாரதிதாசன், சுரதா வழிவந்த பரம்பரைக் கவிஞர்களும் மொழிப்பற்றோடு தமிழை வளர்த்து அழியாப் புகழ் அடைந்தனர்.

 

முடிவுரை

 

              அன்று முதல் இன்று வரை தமிழை வளர்க்கச் சான்றோர் பலர் தோன்றியுள்ளனர். தமிழை வளர்க்க எண்ணிய அனைத்துச் சான்றோர்களையும் தமிழ் வளர்த்தது என்பதே மறுக்க இயலா உண்மையாகும். தமிழ் வளர்ப்போம், புகழ் பெறுவோம்.

 

(அல்லது)

26நயம் பாராட்டல்

 

திரண்ட கருத்து:

 

தேனைவிட இனிமையான செம்மைத் தமிழ்மொழியே! தென்னாடு பெருமையடையச் தென்மொழியே! உடலிலும் உயிரிலும் ஒளிரும் உயர்மொழியே! உணர்வுக்கு செய்யும் உணர்வாய் விளங்கும் மொழியே! புகழால் வானினும் உயர்ந்த தமிழ்மொழியே! மனிதர்களுக்கு இருகண்களாக விளங்கும் மொழியே! தனிச்சிறப்பு மிக்க தமிழ்மொழியே! மேலும் மேலும் சிறந்து விளங்கும் தமிழ்மொழியே!

மையக்கருத்து:

தமிழ்மொழி உடல், உயிர், உணர்வு, கண் ஆகிய அனைத்தின் பயனாக விளங்குகிறது.

தொடை நயம்:

(i) மோனைத்தொடை -

`சீர்தோறும் அடிதோறும் முதல் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை.

தேனினும் - தென்னாடு

னினும் - ணர்வினுக்கு

தானனி - ழைத்தினி

(ii) எதுகைத்தொடை :

   சீர்தோறும் அடிதோறும் முதலெழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது எதுகை.

தேனினும் ஊனினும் வானினும்

 

(iii) இயைபுத்தொடை :

அடிதோறும் இறுதியில் உள்ள எழுத்தோ, அசையோ, சீரோ ஒன்றி வருவது இயைபு.

மொழியேமொழியே -  மொழியே

(iv) அணி நயம் :

தமிழ்மொழியின் சிறப்பு உயர்வாகக் கூறப்பட்டிருப்பதால் இது உயர்வு நவிற்சி அணி.

(v)சந்த நயம்:

எட்டுச் சீர்களைக் கொண்டுள்ளதால் எண்சீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்

 

 

 

https://maruthameducation.blogspot.com


.

pdf download  click here

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...