சனி, 27 நவம்பர், 2021

10-தமிழ் அலகுத்தேர்வு-1 விடைகுறிப்பு விழுப்புரம் மாவட்டம்

 10-தமிழ் அலகுத்தேர்வு-1 விடைகுறிப்பு  விழுப்புரம் மாவட்டம்

10th TAMIL UNIT TEST -1 VILLUPURAM DISTRICT

                       

      

                     விழுப்புரம் மாவட்டம்

                      பத்தாம் வகுப்பு                                                                                                                  அலகுத்தேர்வு -1  

                      விடைகுறிப்பு 

                          பகுதி -1


1 அ) துரைமாணிக்கம்

2 ஆ) மோனை , எதுகை

3 (இ) அடி

4 ஈ) பாடல் ; கேட்டவர்

5 ஆ) அன்மொழிதொகை

6- ஈ) பெருஞ்சித்திரனார்

7 ஈ) விளித்தொர்

 

                     பகுதி -2

8     அ). நாடும் மொழியும் 

நமதிருகண்கள்என்றவர் யார்?


ஆ). திருந்திய மக்களை மற்ற 

உயிரினின்றும் பிரித்துக்காட்டுவது எது?.


9 கவை,கொம்பு,கொப்பு,கிளை


10 அருமை உடைத்தேன் றசாவாமை வேண்டும்

   பெருமை முயற்சி தரும்.


        பிரிவு -2

11 வேங்கை - மரம், புலி

   வேம் + கை வேகின்ற  கை

   வேங்கை என்னும் சொல் தனிமொழியாய்

   நின்று மரம் எனும் பொருளையும்,

   தொடர்மொழியாய் வேகின்ற கை என 

    வேறு   பொருளையும் தருவதால் 

     பொதுமொழியாகும்.

 

 

12 இன்னிசை அளபெடை பயின்று வந்துள்ளது

செய்யுளில்ஓசை குறையாத இடத்தும் 

இனிய ஓசைக்காக குறில் நெடிலாக அளபெடுப்பது இன்னிசைஅளபெடை.

13 பொருள் –திருமால்

 இலக்கணகுறிப்பு - இசைநிறை அளபெடை அல்லது செய்யுளிசைஅளபெடை

          பகுதி-3          பிரிவு -1

14

1.நாற்று - நெல் நாற்று நட்டேன்.

2.கன்று - வாழைக்கன்று வளமாக இருந்தது.

3.பிள்ளை -தென்னம்பிள்ளையைத் தெற்கில் வைத்தேன்.

4.வடலி -பனை வடலியைப் பாங்காக வளர்த்தேன்.

5.பைங்கூழ் - பைங்கூழ் பசுமையாக இருந்தது.

 

15

1

நாற்றிசையில் செல்லா நாடில்லை

நான்கு

2

எறும்பும் தன் கையால்  எண்சாண்

எட்டு

3

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி

நான்கு,

இரண்டு

௪,௨

4

னைஆயிரம்அமரிடைவென்ற    மானவனுக்கு வகுப்பது பரணி

ஆயிரம்

௧௦௦௦

 

               பிரிவு-2

16 உரையாடல்  

 

சோலைக்காற்று : நிழல் தருகிற மரங்களும், பறவையினங்களும், நீர்நிலைகளும் இருக்கும் இடமே எனது இருப்பிடமாகும்.

 

மின்விசிறி : இருள் சூழ்ந்த அறைகளும், தூசிகள் நிறைந்த அறைகளுமே யான் வாழும் இடமாகும்.

 

சோலைக்காற்று : மாலைநேரங்களில் கலந்து உறவாட மக்களும், காதலர்களும் என் காற்றைப் பெற்ற மகிழ்ந்து விளையாடச் சிறுவர்களும் வருவர்.

 

 

 மின்விசிறி: உழைத்துக் களைத்தவர்களும், பணியில் இருந்து திரும்பி வருபவர்களும், வீட்டுப் பணி செய்து களைத்துப் போனவர்களும் வருவர். அவர்களுக்காக வெப்பக்காற்றைக் குளிர்ந்த காற்றாக மாற்றித் தருவேன்.

 

சோலைக்காற்று :காதலர்களிடையே என்னைத் தூது விடுவதாகக் கவிஞர்கள் இனிய பாடலாகப் பாடி மகிழ்வர்.

 

மின்விசிறி: நான், வணிக ரீதியாகவும் பயன்படுத்தப்படுகிறேன்.

 

சோலைக்காற்று :பாடும் குயிலும், ஆடும் மயிலும் என்னை விரும்பி, என்னிடம் அடைக்கலமாய் வரும்.

 

மின்விசிறி : சில சமயம் தூசிகளும் மின்சாரமும் என் இயக்கத்தை முடக்கி விடும். நான் ஒரு கூண்டுக்கிளி. நீயோ உலாவரும் இனிய தென்றல்.

 

17 அழகார்ந்த செந்தமிழே!

அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே! முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே! கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே! இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே! மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!*

 

              பிரிவு-3

 


18

அறிதல், அறியாதிருத்தல்,

 புரிதல், புரியாதிருதல்,

 தெரிதல், தெரியாதிருத்தல்

 பிறத்தல், பிறவாதிருதல்

 

19

எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள் 

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

வ.எண்

    சீர்

  அசை

வாய்ப்பாடு

 

1

எப்/பொருள்/

 

நேர் நிரை

கூவிளம்

2

எத்/தன்/மைத்/

நேர் நேர் நேர்

தேமாங்காய்

3

தா/யினும்/

நேர் நிரை

கூவிளம்

4

அப்/பொருள்/

நேர் நிரை

கூவிளம்

5

மெய்ப்/பொருள்/

நேர் நிரை

கூவிளம்

6

காண்/ப

நேர் நேர்

தேமா

7

தறி/வு

நிரைபு

பிறப்பு

 

இக்குறட்பா 'பிறப்பு' என்னும் வாய்பாட்டில் முடிந்துள்ளது

           

 

 

 

             பகுதி-4

 

20.  என்னைத் தாலாட்டிய மொழி!

எனதருமைத் தாய்மொழி!

என் இனிய தமிழ்மொழி!

எண்ணமெல்லாம் நிறைந்த மொழி!

என் தாய்மொழிக்குத் தலை வணங்குகிறேன்.

அனைவருக்கும் வணக்கம்!

 

மனோன்மணீயம் சுந்தரனாரின் வாழ்த்துப்பாடல் விளக்கம்:

பூமி என்ற பெண்ணின் ஆடை நீராலான கடல், முகம் பாரத கண்டம் ஆகும். நெற்றியாகத் தக்காணம் திகழ்கிறது. நெற்றியில் பொட்டு வைத்தது போல் தமிழகம் திகழ்கிறது. எல்லாத் திசைகளிலும்

தமிழ்த்தாய் புகழ் பெற்று விளங்குகிறாள் எனச் சிறப்பிக்கிறார். உலகின் மூத்த மொழி, இளமையான மொழி, வளமான மொழி, பெண்ணே, தாயே உன்னை வாழ்த்துகிறேன் என்று பலவாறு வாழ்த்துகிறார்.

பெருஞ்சித்திரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலின் பொருள்:

அன்னை மொழியாக அழகாய் அமைந்து பழமைக்குப் பழமையாய்த் திகழும் மொழி. குமரிக்கண்டத்தில் நிலைத்து நிற்கும் வகையில் பாண்டிய மன்னனின் மகளாகத் திகழும் மொழி.

தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் தலையணிந்து விளங்கும் தமிழை வாழ்த்துகின்றேன்.

ஒப்புமை:

இரு பாடல்களிலும் தமிழ் தாயாகவும், பழமையான மொழியாகவும் சிறப்பிக்கப்படுகிறது. எல்லாத்திசைகளிலும் புகழ் பெற்று நிலைத்து நிற்பது என்றும் இளமையானது என்று பொருள்பட அமைந்துள்ளது. பெண், தாய், மகள் என வெவ்வேறு வகையில் அழைத்தாலும் தமிழைத் தாயாக சிறப்பிக்கின்றனர். நறுமணமிக்க மொழி என்ற பொருளில் இருபாடல்களும் அமைந்துள்ளன.

 


21

பொன்போன்ற சூரியன், அதிகாலையில் தோன்றிப் பிரகாசமான கதிர்களைக் கொண்டு, உலக இருளைப் போக்குகிறது. பால் மேகங்கள் அலையத் தொடங்குகின்றன. வண்ணமயமான பறவைகள், தங்கள் காலை இசையால் மகிழ்ச்சி அடைகின்றன. அழகிய பட்டாம்பூச்சிகள், மலர்களைச் சுற்றி நடனமாடுகின்றன. மலர்களின் வாசனை, தென்றல் காற்றை நிரப்புகின்றது. காற்று, எல்லா இடங்களிலும் வீசி மகிழ்ச்சியூட்டுகிறது.

 

22. வெட்டி சாய்த்தாம் அன்று.

   முதுகில் சுமக்கிறோம் இன்று.

    மரத்தை நடுதலே நன்று

    எதிர்காலம் நமக்கும் உண்டு

 

 

             பகுதி -5

23  தமிழின் சொல்வளம்,

'கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன்தோன்றிய மூத்தக் குடி" என்பதற்கு ஏற்றவாறு தமிழ்மொழி தோன்றியது என்பது உண்மை. இதை தமிழ் இலக்கியங்கள் பறைசாற்றுகின்றன.

கால வெள்ளத்தில் கரைந்து போன மொழிகளுக்கிடையில் நீந்தித் தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது தமிழ்.

 

தமிழ்ச் சொல்வளம் பல துறைகளிலும் உள்ளது.

அதில் பயிர்வகைச் சொற்கள் மட்டும் சிறப்பாக எடுத்துக்காட்டப் பெற்றுள்ளன.

ஒரு தாவரத்தின் அடிப்பகுதியைக் குறிக்கும் சொற்கள் :

 தாள், தண்டு, கோல்,தூறு,தட்டு. கழி, கழை, அடி ஆகும்.

 

தாவரங்களின் இலை வகைகள்:

தாள், தோகை, இலை, ஓலை,சண்டு, சருகு.

கொழுந்து வகை: (நுனிப்பகுதி )

துளிர், கொழுந்து, குருத்து, கொழுந்தாடை பிஞ்சு வகை: வடு. பூம்பிஞ்சு, மூசு, கவ்வை. கச்சல் இன்னும் பிற. மேற்கண்ட அனைத்தும் தமிழ் சொல் வளமுடையது என்பதைக் காட்டுகிறது.

 

புதிய சொல்லாக்கத்திற்கான தேவை:

 

புதிய அறிவியல் கண்டுபிடிப்புகள், கருவிகள், தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்றவாறு வேறு மொழி சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்கள் கண்டுபிடிக்க வேண்டும். ஏனெனில் பிறமொழிச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச்சொற்கள் அமைந்தால் மட்டுமே தமிழ் நிலைத்து நிற்கும். வணிகம். பொருளாதாரம், அரசியல், சமூகம், அரசு சார்ந்த துறைகள் அனைத்திலும் தமிழ் மொழியாக்கம் தகுந்த சொற்களோடு அமைய வேண்டும்.

கால ஓட்டத்திற்கு ஏற்றவாறு தமிழ்மொழியும் நடைபோடுவது அவசியம். புதிய சொல்லாக்கம் அழிந்து வரும் மொழிகளின் வரிசையில் இல்லாமல் எதிர்கால சந்ததியினருக்கு மொழியை எடுத்துச் செல்ல உதவும் என்பது உறுதி.

 

24 கடிதம் வாழ்த்துமடல்

                                      வெற்றி நகர்,

                                      தஞ்சாவூர்

                                        20.11.2021

                         

அன்புள்ள தோழனுக்கு,

நலம், நலமறிய ஆவல். 'விளையும் பயிர் முளையிலேயே தெரியும்' என்பார்கள். நீயும் சிறுவயதிலிருந்தே கவிதை, கட்டுரை என ஆர்வம் செலுத்தி வந்தாய். அதன் பலனாக மாநில அளவில் நடைபெற்ற "மரம் இயற்கையின் வரம்" என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றுள்ளாய். என் மனமார்ந்த வாழ்த்துகள். முயற்சி திருவினையாக்கும். உன் முயற்சிகளும் உன்னை வெற்றியடைய செய்துவிட்டன. இதைப்போல இன்னும் பல வெற்றிகள் பெற வேண்டும். தொடர்ந்து முயற்சி செய்; பயிற்சி செய்.

 

                                இப்படிக்கு,                   

                             உன் அன்பு தோழன்,

                               அ.தமிழழகன்.

 

உறைமேல் முகவரி:

      பெறுநர்

            த.அமுதன்,

           24, காந்தி தெரு,

            சேப்பாக்கம்,

             சென்னை.

 

 

 

 

 

25 . சான்றோர் வளர்த்த தமிழ்

 

முன்னுரை

            முதல் மாந்தன் பேசிய மொழியான தமிழின் தொன்மை ஆய்வுக்குட்பட்டது. உலகின் பல மொழிகளுக்குத் தாய்மொழியாக இருப்பதும் தமிழே. அத்தமிழை வளர்க்க முயன்ற சான்றோர்கள் பலரை வளர்த்தது தமிழ் தமிழால் சான்றோரும் சான்றோரால் தமிழும் வளர்ந்ததை இலக்கிய  உலகு நன்கு அறியும்.  

வள்ளுவரும் ஒளவையும்

       உலகப்பொதுமறை தந்த வள்ளுவர் தமிழை உலகறியச் செய்தார். மூன்றடியில் உலகளந்த இறைவன் போல் ஈரடியில் உலகளந்த புலவன் வள்ளுவரே. பல மொழிகளில் பெயர்க்கப்பட்ட குறள் தமிழின் புகழைப் பறைசாற்றும், ஓரடியில் ஆத்திசூடி தந்த ஒளவையும் தமிழின் சிறப்பை வரிசைப்படுத்தினார். தமிழ் வளர்க்க ஒளவை வேண்டி நெல்லிக்கனி தந்த அதியமானும் தமிழ் வளர்த்தவரே.

 

 இலக்கியத்தில் தமிழ்

          ஐம்பெருங்காப்பியங்களும் ஐஞ்சிறு காப்பியங்களும் இதிகாசங்களும் கண்டவர்கள் தமிழின் இலக்கிய வாழ்வை மேம்படுத்தினர், கம்பன் தந்த உவமையும் சொல்லாடலும் தமிழின் பெருமைக்குச் சான்றுகள். அறநூல்களை அள்ளித்தந்த சான்றோர் அகமும் புறமும் படைத்து தமிழின் தமிழரின் தமிழ்நாட்டின் உயர்வை உலகிற்கு உணர்த்தினர்.

சிற்றிலக்கியத்தில் தமிழ்

 

       பரணி பாடிய செயங்கொண்டார் போன்றோரும், உலா பாடிய ஒட்டக்கூத்தர் போன்றோரும். குறவஞ்சி பாடிய திரிகூடராசப்பர் போன்றோரும், தூது தந்த புலவர்களும், கலம்பகம் தந்த புலவர்களும், பிள்ளைத்தமிழ் தந்த புலவர்களும், பள்ளு பாடிய புலவர்களும் 96 வகைச் சிற்றிலக்கியங்களை வழங்கிய பலரும் தமிழை வளர்த்தனர்.

பிறநாட்டார்

     வீரமாமுனிவர் சதுரகராதி தந்து தமிழால் பெருமை பெற்றார். போப் தமிழின் சிறப்புகளை மொழிபெயர்ப்பின் மூலம் உலகறியச் செய்தார். பிறநாட்டார் பலர் தமிழைப் போற்றி தமிழால் அறியப்பெற்றனர். பிற மொழி பேசுபவர்களும் தமிழை அறிய ஆர்வம் கொண்டனர்.

மொழிப்பற்றாளர்

      அகரமுதலி வெளியிட்ட தேவநேயப் பாவாணரும், பல நூல்களைப் பதிப்பித்த தமிழ்த்தாத்தா உ.வே.சாமிநாதரும், மொழித்தியாகிகளும், பாரதியார், பாரதிதாசன், சுரதா வழிவந்த பரம்பரைக் கவிஞர்களும் மொழிப்பற்றோடு தமிழை வளர்த்து அழியாப் புகழ் அடைந்தனர்.


முடிவுரை

        அன்று முதல் இன்று வரை தமிழை வளர்க்கச் சான்றோர் பலர் தோன்றியுள்ளனர். தமிழை வளர்க்க எண்ணிய அனைத்துச் சான்றோர்களையும் தமிழ் வளர்த்தது என்பதே மறுக்க இயலா உண்மையாகும். தமிழ் வளர்ப்போம், புகழ் பெறுவோம்.

 

 

 

https//:mazhalaikavi.blogspot.com

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here