*டிப்ளோமா நர்ஸிங் (Diploma Nursing) படிப்பிற்கு மாணவிகள் (only girls) தற்போது விண்ணப்பிக்கலாம்*
டிப்ளோமா நர்ஸிங் (Diploma Nursing) படிப்பிற்கு தமிழகத்தில் உள்ள 25 அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 2060 இடங்கள் பெண்களுக்கு மட்டும் ஒதுக்கப்படுகின்றது.
அதற்கு மாணவிகள் மட்டும் தற்போது விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 4-12-2021 (டிசம்பர்-4)
இந்த படிப்பிற்கு கல்வி கட்டணம் கிடையாது. தமிழக அரசு மாதம் மாதம் ரூ.600 மாணவிகளுக்கு வழங்கும். (உணவு மற்றும் ஹாஸ்டல் கட்டணம் உண்டு).
+2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை (Admission) நடைபெறும்.
தமிழை முதல் பாடமாக படித்து இருக்க வேண்டும். +2-ல் அறிவியல் பாட பிரிவு (இயற்பியல், வேதியியல், உயிரியல் அல்லது தாவரவியல், விலங்கியல்) படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். வொகேஷனல் மற்றும் இதர பிரிவு மாணவிகளுக்கும் விண்ணப்பிக்கலாம்.
*எப்படி விண்ணப்பிப்பது ?*
இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இதோ லீங்க் https://pmcreg21.tnmedicalonline.co.in/MyCourse.aspx
விண்ணப்ப படிவத்தை ஆன்லைனில் பூர்த்தி செய்து அதை பிரின்ட் அவுட் எடுத்து தேவையான ஆவணங்களை இணைத்து கீழ்காணும் முகவரிக்கு டிசம்பர்-6 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
The Secretary,
Selection Committee,
No.162, E.V.R. Periyar High
Kilpauk, Chennai – 10
கூடுதல் விபரங்கள் கீழ் காணும் லின்கில் உள்ளது. பார்க்கவும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக