இன்றைய செய்திகள்
2.11.2021(செவ்வாய்க்கிழமை)
🌹உண்மை இருக்கும் இடத்தில் பிடிவாதம் இருக்கும்.
நேர்மை இருக்கும் இடத்தில் நல்ல நடத்தை இருக்கும்.
அதிக அன்பு இருக்கும் இடத்தில் கோபம் இருக்கும்.!
🌹🌹தொந்தரவு செய்யும் அன்பு ஒருபோதும் பொய்யாக இருக்காது.
ஆனால் அதுதான் யாருக்கும் புரிவது இல்லை.!!
🌹🌹🌹வேஷம் போடும் உறவுகளுக்கு மத்தியில் உண்மையான பாசம் தோற்றுத்தான் போகிறது.
மதி கெட்ட மனதுக்குத் தான் தெரியவில்லை அது பாசம் அல்ல வேஷம் என்று.!!!
அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
📕📘தீபாவளிக்கு அடுத்த நாள் 05.11.2021(வெள்ளிக்கிழமை) உள்ளூர் விடுமுறை வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியீடு
👉இதை ஈடு செய்யும் விதமாக 20-11-2021 (சனிக்கிழமை) பள்ளி வேலை நாள் ஆகும்.
📕📘பள்ளி மாணவர்களை வரவேற்ற முதல்வர்
சென்னை, மடுவன்கரையில் உள்ள மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு செய்தார்.
👉1 முதல் 8-ம் வகுப்புகளுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்களுக்கு இனிப்புகள் கொடுத்து முதல்வர் வரவேற்றார்.
📕📘1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நேற்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டன.
உற்சாகமும், ஆர்வமும் கொண்டு பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு மலர், இனிப்புகள் வழங்கி ஆசிரியர்கள் வரவேற்றனர்.
📕📘 நவம்பர் 6 ம் தேதி (சனிக்கிழமை) விடுமுறை அளிக்க பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக் கல்வி ஆணையர் அவர்களுக்கு கோரிக்கை
📕📘மத்திய அரசு அலுவலகங்களில் 08.11.2021 முதல் மீண்டும் பயோமெட்ரிக் அடிப்படையில் வருகைப் பதிவு அமல்படுத்தப்படுகிறது.
📕📘நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு.
இளங்கலை மருத்துவ படிப்பிற்கான நீட் நுழைவுதேர்வு முடிவுகளை வெளியிட்டது தேசிய தேர்வு முகமை.
மாணவர்களின் தனிப்பட்ட மின்னஞ்சல் முகவரிக்கு அவர்களின் மதிப்பெண்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
📕📘தமிழக அரசு பள்ளிகளில் பகுதி நேர ஆசிரியர்கள் தீப ஒளி திருநாள் கொண்டாட பொருளாதாரம் இல்லாமல் தவிக்கின்றனர்.
அவர்களுக்கு தீப ஒளி திருநாளை மகிழ்ச்சியானதாக மாற்ற வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.
தமிழகத்தில் 12,000 பகுதி நேர ஆசிரியர்கள் உள்ள நிலையில் அவர்களுக்கு கருணைத் தொகை, முன்பணம் வழங்க அதிக செலவாகாது.
அவர்களுக்கு அரசு கருணைத்தொகை, முன்பணம் வழங்க வேண்டும்.
- பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.
📕📘அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படும்.
அரசுத் துறைகளில் காலியாக உள்ள பத்தாயிரம் காலி பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்.
மூடப்பட்டுள்ள கூட்டுறவு நியாய விலைக்கடைகளை திறக்க நடவடிக்கை
சுற்றுலா உட்கட்டமைப்பு மேம்படுத்தப்படும்
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி
📕📘தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் பதவி தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தேடல் குழு அறிவிப்பு.
tnau.ac.in இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, nodalofficertnau2021@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு நவ. 30-ம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.
📕📘21 பேர் உயிர் தியாகத்தில் பெறப்பட்ட 20% இடஒதுக்கீட்டில் கடந்த 30 ஆண்டுகளாக பயனடைந்த சமூகங்கள் இந்த உள்ஒதுக்கீடு அரசாணையை எதிர்த்து வழக்கு நடத்தி இதனை ரத்து செய்ய வைத்திருப்பது பெரும் வேதனையளிக்கிறது.
👉உள்ஒதுக்கீட்டின் அடிப்படையில் கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தமிழ்நாடு அரசு மேல் முறையீடு செய்ய வேண்டும்.
👉10.5% உள்இடஒதுக்கீடு அரசாணை ரத்து செய்யப்பட்டது மிகுந்த ஏமாற்றமளிக்கிறது.
👉உள்ஒதுக்கீ்ட்டை அமல்படுத்த பல்வேறு முயற்சிகளை திமுக அரசு மேற்கொண்டிருந்தது. ஆனாலும், மேலும் தீவிரமாக இந்த வழக்கை நடத்தியிருக்கலாம்
பாமக வழக்கறிஞர் பாலு பேட்டி.
📕📘எம்.பி.சி பிரிவில் வன்னியர்களுக்கான 10.5% சதவீத இட ஒதுக்கீட்டை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு.
சாதிவாரியான கணக்கெடுப்பை நடத்தாமல் உள் ஒதுக்கீடு வழங்கியது தவறானது எனவும் கருத்து.
📕📘மின்சாரத் துறையில் காலியாக உள்ள 50 ஆயிரம் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் - மின்துறை அமைச்சர்.
📕📘இந்தியாவின் கோவேக்ஸின் தடுப்பூசியை அங்கீகரித்ததற்காக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோர்ரின்ஸனுக்கு பிரதமர் மோடி நன்றி
📕📘மீன்பிடி தடைகால நிவாரணத் தொகை ரூ.5,000-லிருந்து ரூ.6000-ஆக உயர்த்தி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
நிவாரணத் தொகை ரூ.6000-ஆக உயர்த்தப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல்வர் அறிவித்துள்ளார்.
📕📘முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களின் பாராட்டால் வார்த்தைகளின்றி நெகிழ்ந்து மகிழ்கிறேன் என நடிகர் சூர்யா தெரிவித்தார்.
👉முதல்வர் அவர்களின் உணர்வுப்பூர்வமான பாராட்டு, ஜெய்பீம் திரைப்படத்தின் நோக்கத்தை நிறைவேற்றியுள்ளது என கூறினார். ஜெய்பீம் படக்குழுவினர் அனைவரின் சார்பாக தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சம் நிறைந்த நன்றிகள் என நடிகர் சூர்யா என கூறினார்.
📕📘கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி ஆஸ்திரேலியாவிற்கு பயணிக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
📕📘நேற்று முதல் 3 நாட்களுக்கு ரேஷன் கடை நேரம் மாற்றம்
இதுகுறித்து அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், 'தீபாவளி பண்டிகை நவம்பர் மாதம் தொடக்கத்திலேயே வருவதால் ரேஷன் பொருகளும் பண்டிகை காலங்களில் பொதுமக்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும்.
அதற்காக ரேஷன் கடைகள் நேற்று நவம்பர் 1 முதல் 3ம் தேதி வரை காலை 7 முதல் இரவு 7 மணி வரை செயல்படும்.' என்று தெரிவித்தார்.
மேலும் நாள் முழுவதும் ரேஷன் கடைகள் இயங்குவதால் ரேஷன் அட்டைதாரர்கள் தடையின்றி பொருட்களை பெறலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 📕📘கோயில்களில் பக்தர்களுக்கும் கடவுளுக்கும் இடையில் இடைத்தரகர்களுக்கு இடமில்லை என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆண்டவன் முன் அனைவரும் சமம் என நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
📕📘கூட்டுறவு வங்கிகளில் 5 சவரன் வரையிலான நகைக்கடன்களை தள்ளுபடி - அரசாணையை வெளியீடு.
👉₹6000 கோடி மதிப்பிலான நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன
👉கடந்த செப்டம்பர் மாதம் சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதற்கான அறிவிப்பை வெளியிட்டிருந்தார்
👉கூட்டுறவு வங்கிகளில் தகுதியுள்ள குடும்பத்திற்கு வழங்கப்பட்ட 5 சவரனுக்கு உட்பட்ட நகை கடன் தள்ளுபடி
👉31-3-2021 வரை பெறப்பட்ட 5 சவரன் நகை கடன் தள்ளுபடி
👉நகை கடன் தள்ளுபடி மூலம் 16 லட்சம் பேர் பயன்பெறுவார்கள்
👉தள்ளுபடி செய்யப்படும் அசல், வட்டி தொகையை கூட்டுறவு சங்கங்களுக்கு அரசு வழங்கி விடும்
👉நகை கடன் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை
📕📘நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்த ஏதுவாக வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
www.nvsp.in என்ற இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பொதுமக்கள் திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 📕📘பயிர்கடன் தள்ளுபடியில் இருந்த குளறுபடிகள் சீர்திருத்தப்பட்டுள்ளது என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டியளித்தார்.
கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக்கடனில் வேறுபாடு உள்ளது எனவும் கூறினார்.
📕📘ரஜினிகாந்த் வீடு திரும்பினார். வாசலில் அவருக்கு அவர் மனைவி லதா ஆரத்தி எடுத்து வரவேற்பு. ரஜினியும் tweeter மூலம் பிரார்த்தனை செய்தவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்து உள்ளார்.
📕📘கடந்த மாதம் 6ம் தேதி Rs 1865/- க்கு விற்கப்பட்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் நேற்று முதல் Rs 2,133/- ஆக உயர்வு.
📕📘நேற்று முதல் தீபாவளி சிறப்பு பேருந்து இயக்கம்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் நேற்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தமிழகம் முழுவதும் 20,334 சிறப்பு பேருந்துகள் இயக்கம்: சென்னையில் இருந்து 9,806 பேருந்துகள் இயக்கம்
🙏🙏
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக