ஞாயிறு, 28 நவம்பர், 2021

முகநூல் ராசிபலன் #FACEBOOK JATHAGAM 12ராசிக்கும்

 


முகநூல் ராசிபலன் 

மேஷம் 

--------------

இந்த ராசிக்காரர்கள் பதிவுகளை கவனத்துடன் எழுதுவது நல்லது . காரணம் கமண்டில் கழுவி ஊத்த பலர் காத்திருப்பார்கள் . வாட்ஸ் அப்பில் வாழ்க்கையை ஓட்டும் நீங்கள் , மெசஞ்சர் பக்கம் எட்டிப்பார்ப்பது உங்கள் உடல்நலத்திற்கு அவ்வளவு நல்லதல்ல . 


ரிஷபம்

-------------

இவர்கள் கவிதை என்ற பெயரில் நம் கழுத்தை அறுப்பதில் வல்லவர்கள்.  மொக்க கவிதைக்கு போனா   போகிறதென்று தோழிகள் லைக் இட்டு செல்வார்கள். ஆர்ட்டின் வேண்டி எவ்வளவு அலைந்தாலும் கடைசி வரை கிடைக்காது . சிலர் வெத்து சீன் போட்டு தோழிகளிடம் செமயாக மொத்து வாங்கி சந்தோஷப்படும்  பரந்த மனம் படைத்தவர்கள் . 


மிதுனம்

---------------

இனி வரும் நாட்கள் உங்களுக்கு மிக சோதனையாக அமையும் . உங்களுக்கே தெரியாமல் உறவினர்கள் 

உங்கள் நட்பில் வேறு பெயரில் இணைந்திருப்பார்கள் . அதனால் பெண்கள் பதிவில் ஜொல்லு விடுவதை தவிர்க்கவும் .உறவுகள் உங்கள் மனைவியிடம் உங்களை போட்டுக்கொடுத்து மிதி வாங்க ஆசையோடு காத்திருக்கிறார்கள். 

வீட்டில் மத்து , தொடப்பம் , கரண்டி ஆகியவற்றை ஒழித்து வைப்பது உங்களுக்கு நல்லது . 


கடகம் 

-------------

பதிவுகள் மொக்கையாக எழுதுவதில் உங்களுக்கு நிகர் நீங்களே ! 

செத்துப் போய்  அடக்கமான ஜோக்குகளை தூசுத்தட்டி எழுதியும் யாரும் சிரிக்காமல் கடந்து செல்பவர்களை பார்த்து அங்கலாய்த்து கொள்ளும் பரிதாபத்துக்குரியர் நீங்கள் . 

செல்ஃபி எடுத்து பதிவாக போட்டு ஆர்ட்டின் எதிர்பார்த்து ஏமாந்து போகும் ஏமாளியாக இருப்பீர்கள். 


சிம்மம் 

-----------

பெண்கள் பதிவில் டியர் , செல்லம் , டாலு , அம்பே , எனக்குன்னு டீ வாங்கித் தர யார் இருக்கா ! நான் என்ன செல்லமா ! வெல்லமா ! போன்ற  கமண்ட் எழுதுவதை தவிர்க்கவும் . காரணம் உங்கள் முகனூல் password விரைவில் உங்கள் மனைவிக்கு தெரிய வாய்ப்பு அதிகம் . அதன் பின்விளைவுகள் என்ன என்பதை நான் கூறவேண்டியதில்லை . முடிந்தால் முகனூலிலிருந்து விலகிச் செல்வது  உங்களுக்கு நன்மை பயக்கும் . 


கன்னி

-------------

மெசஞ்சரே கதி என்று கிடக்கும் நீங்கள் , உங்கள் வீட்டம்மாவே ஃபேக் ஐடியில் உங்களிடம் பேசுவார் . ஆகவே அதிக கவனத்தோடு இன்பாக்ஸ் போகவும் . அல்லேல் வீட்டில் மிதி வாங்குவது நிச்சயம் . இன்பாக்ஸ்ல் தோழிகளிடம் சாப்பிட்டாச்சா என அக்கரையாக விசாரிப்பதை இனி வேலையாக செய்யாதீர்கள் . வீட்டில் உடம்பு புண்ணாகும் வரை உபசரிப்பு நடக்க வாய்ப்புள்ளது . 


துலாம் 

-------------

பன்னி குட்டிப்போடுவது போல் வசவசனு

பதிவு போடுவதில் வல்லவர் நீங்கள் . தொடர்ந்து இப்படியே நடந்தால் உங்களை விட்டு பெண் தோழிகள் விலகும் அபாயமும் உள்ளது அல்லது ஆயிரக்கணக்கான நட்புகள் இருந்தாலும் லைக் 35 ஐ தாண்டாது . எல்லோரும் unfollow வில் இருப்பார்கள் . மேலும் எனக்கு good morning சொல்ல தோழி இல்லையே , கோழி இல்லையேன்னு புலம்புவதை நிறுத்தவும் . 


விருச்சகம்

-------------------

இன்பாக்ஸ்ல் பெண்களோடு கடலை போடும் நீங்கள் , அதில் ஒரு பெண் பெயரில் உங்களுடைய மிக நெருங்கிய நண்பர் இருப்பார் என்று அறியாத அப்பாவியாக இருப்பீர்கள் . விரைவில் ஸ்க்ரீன் ஷாட் வெளியாகும் அபாயம் உள்ளது . கவனம் . பதிவோடு மட்டுமே பழக்கவழக்கத்தை கடைபிடியுங்கள் .


தனுசு

-----------

முகனூல் நட்புக்களே உங்களை பார்த்து பயந்து ஓடுவார்கள் . காரணம் ஒரு சின்ன விஷயத்தை ஒன்பது பக்கத்துக்கு ரைட் அப் எழுதி கொள்(ல்)வீர்கள் . லைக் அதிகம் வருகிறதே என்று சந்தோஷப் படாதீர்கள் . அத்தனை லைக்கும் போதும்டா சாமின்னு உங்களுக்கு போட்ட லைக் என்று நினைவில் கொள்ளுங்கள். அளவாக பதிவு போட்டு அளவோடு லைக் பெறுவதே உங்களுக்கு உத்தமம் . 


மகரம்

-----------

சிம்ப்ளி வேஸ்ட் . என்னதான் முக்கி முக்கி எதைப்பற்றி எழுதினாலும் முப்பது லைக்குக்கு மேல் உங்களுக்கு வராது . நீங்க என்னதான் திறமையாக  கமண்ட்ஸ் எழுதினாலும் அதற்கு எதிர்தரப்பிலிருந்து பதிலும் சத்தியமாய் வரவே வராது . வெறும் தண்டமாக முகனூலில் வலம் வருவீர்கள். 


கும்பம்

-------------

அடுத்தவர் பதிவுகளை காப்பி அடித்து உங்க டைம் லைனில் எழுதுவதில் உங்களை மிஞ்ச ஆள் இங்கு இல்லை . அடுத்தவர்களுக்கு கிடைக்கும் லைக்கை அபகரித்து சந்தோஷப்படும் ஜீவன் . சொந்தமாக யோசிக்கும் திறன் அற்றவர்கள் . 


மீனம்

----------

பெண்களைப் பற்றியே பதிவு போடுவதால் தோழிகள் உங்கள் பதிவில் சுற்றி சுற்றி வலம் வருவார்கள் . அதனால் ஆண் நண்பர்களின் வயித்தெறிச்சலுக்கு ஆளாவீர்கள் . அதனால் அடிக்கடி ரிப்போர்ட் அடிக்கப்பட்டு ஐடி காணாமல் போகவும் வாய்ப்பு உண்டு . ஆண்களை குஷிப்படுத்த அவ்வப்பொழுது பெண்களை திட்டியும் பதிவு போடுங்கள் . தோழர்களின் மதிப்பையும் பெறுவீர்கள் 


குறிப்பு :- ❤💖 #பெண்களுக்கு !!!!!! 

--------------

பெண்களுக்கு என்னவென்று உங்கள் மைண்ட் வாய்ஸ்  கேட்பது எனக்கு  புரிகிறது . மேலே சொன்ன அத்தனை ராசி பெண்களும் முகனூலின் அசாத்திய திறமைசாலிகள் , ரைட் அப் கில்லாடிகள் , அழகுப்பதுமைகள் , கவிப்பேரரசிகள் , அன்பின் சிகரங்கள் , ஆளுமை திறன் கொண்டவர்கள் ஆக மொத்தம் முகனூலின் பெண்கள் எல்லோரையும்  ஆண்கள் அனைவரும் போற்றி பாதுகாக்க வேண்டிய  பொக்கிஷங்கள் .  



Facebook.  . . 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...