பத்தாம் வகுப்பு
தமிழ் ஒரு மதிப்பெண் வினாக்கள்
இயல் 1-2-3
1. 'மெத்த வணிகலன்' என்னும் தொடரில்
தமிழழகனார் குறிப்பிடுவது..
அ. வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்
ஆ. பெரும் வணிகமும் பெரும் கலன்களும்
இ. ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்
ஈ. வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்
2. 'காய்ந்த இலையும்
காய்ந்த தோகையும்'
நிலத்துக்கு நல்ல உரங்கள் - இத்தொடரில் அடிக்கோடிட்ட
பகுதி குறிப்பிடுவது.....
அ. இலையும் சருகும்
ஆ. தோகையும் சண்டும்
இ. தாளும் ஓலையும்
ஈ. சருகும் சண்டும்
3. எந்தமிழ்நா
என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்.......
அ. எந்+தமிழ்+நா
ஆ எந்த+தமிழ்+நா
இ.எம்+தமிழ்+நா
ஈ. எந்தம்+தமிழ்+நா
4. 'கேட்டவர் மகிழப்
பாடிய பாடல் இது'-
தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே.
அ. பாடிய கேட்டவர்
ஆ பாடல்; பாடிய
இ. கேட்டவர் பாடிய
ஈ. பாடல் கேட்டவர்
5. வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக்
குறிக்கும் பயிர்வகை
அ. குலை வகை
ஆ மணி வகை
இ. கொழுந்து வகை
ஈ. இலை வகை
இயல் 2
6. "உனக்குப்
பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்" - பாரதியின்
இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?
அ. உருவகம், எதுகை
ஆ. மோனை, எதுகை
இ. முரண், இயைபு
ஈ. உவமை, எதுகை
7.பெரிய மீசை
சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?
அ. பண்புத்தொகை
ஆ. உவமைத்தொகை
இ. அன்மொழித்தொகை
ஈ. உடம்மைந்தொகை
இயல் 3
8. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல்
ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.
அ. வேற்றுமை உருபு
ஆ. எழுவாய்
இ. உவம உருபு
ஈ. உரிச்சொல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக