வெள்ளி, 17 டிசம்பர், 2021

பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு-2 விடை குறிப்புகள்-விழுப்புரம் மாவட்டம் 10TH TAMIL UNIT TEST-2 KEY ANSWERS DEC -2021

 

   


பத்தாம் வகுப்பு தமிழ்      அலகுத்தேர்வு-2

    விழுப்புரம் மாவட்டம்

     விடைக் குறிப்புகள்

                 

    1      ஈ. பாரதியார்

2         ஆ.வினைத்தொகை

3         ஆ மோனை ,எதுகை

4         அ வேற்றுமைத்தொகை

5+       ஈ கூட்டுநிலைப் பெயரெச்சம்

6         ஆ மகரந்தத்   -  மயலுறுத்து

7         ஈ மயங்கசெய்

 

8         1.சிந்துக்கு தந்தை யார்?

    2. எது இன்றி அமையாது உலகு ?

9.உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்பு கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை எனப்படுகிறது .

1௦.பிறருக்கு உதவி செய்ய பயன்படாத பணம்

 

11.மடுவின் அருகில் மாடு மேய்ந்தது

12. அ) பண்டைய இலக்கியம்

   ஆ) பெருங்காற்று                                                         

13. அ.வளைந்த வாய்

   ஆ .ஒழுக்கம்


14. 

உயிராக நான், பல பெயர்களில் நான், நான்கு திசைகளிலும் நான், இலக்கியத்தில் நான், முந்நீர், நாவாய் ஓட்டியாக நான்....


முதலிய தலைப்புகளில் காற்று தன்னைப் பற்றிப் பேசுகிறது. இவ்வாறு 'நீர்' தன்னைப் பற்றிப் பேசினால்.


"அமிழ்தமாக நான், ஆற்றலாக நான், உலக உயிர்களுக்கு ஆதாரமாய் நான். பல நிறங்களில் நான். உலகில் பிறந்த முந்நீராய் நான், உணவாய் உற்பத்திப் பொருளாய் நான்..." என்று நீர் தன்னைப் பற்றிப் பேசும்.


15. அ . ஆங்கிலத்தில் PROSE  POETRY

      ஆ .  உணர்ச்சி பொங்க  கவிதை படைக்கும் இடங்களில் யாப்பு,தடையாக இருப்பதை உணர்ந்த பாரதியார் வசன கவிதை படைத்தார் இதுவே பிறகு புதுக்கவிதையாக உருவாகக் காரணமாயிற்று. 

  இ  .புதுக்கவிதை  (அ) வசன கவிதை 

 16.

உயிரை விடச்சிறப்பாகப் பேணிக்காக்கப்படும்

ஒழுக்கத்தின்எய்துவர் மேன்மை-3

ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது

உயிரினும் ஓம்பப்படும் -1

ஒக்கத்தின்வழி உயர்வு அடைவர்


நடுஊரில் நச்சு மரம் பழுத்தற்று-2


 

 17. 

பெரியாரைத் துணைக்கோடல்


பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே 

நல்லார் தொடர்கை விடல்.


ஆள்வினை உடைமை

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை 

இன்மை புகுத்தி விடும்.


அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும்

பெருமை முயற்சி தரும்.

                                                                       திருவள்ளுவர்


1 8   உவமை அணி

இக்குறளில் பயின்று வரும் அணி உவமையணி ஆகும்.

 அணி விளக்கம் : உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் ஒரு வாக்கியமாகவும் அமைந்து இடையில் போல, போன்ற என்னும் 

உவம உருபுகள் பயின்று வருவது உவமையணி ஆகும்.


அணி பொருத்தம் : உவமை : வேலொடு நின்றான் இரு என்றது

உவமேயம் : கோலொடு நின்றான் இரவு.

உவம உருபு: போலும்.

1 9 .

மதிப்புடையீர்,

                என் பெயர் இளங்கோவன். நான் பத்தாம் வகுப்பு படித்து வருகிறேன். நமது தமிழ்ப்பண்பாடு குறித்து சில சொற்கள் கூற விழைகிறேன். இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழர்கள் பண்பாட்டிலும் நாகரிகத்திலும் சிறந்து விளங்கினர் என்பதை சங்க சங்க இலக்கியங்கள் காட்டுகின்றன. தமிழர்கள் மொழிக்கான இலக்கணம் மட்டுமல்ல, வாழ்க்கைக்கும் இலக்கணம் வகுத்துள்ளனர். தமிழ்ப்பண்பாடு இந்தியா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், இங்கிலாந்து ஆகிய உலக நாடுகளில் வேரூன்றியுள்ளது. நமது பண்பாடு மிகப்பழமையானது என்றாலும் நாளுக்கு நாள் தன்னைப் புதுப்பித்து வருகிறது. நமது பண்பாட்டை நினைத்து நாம் பெருமிதம் கொள்வோம். அனைவருக்கும் நன்றி.

 2 0 .

"கத்துகடல் சூழ்நாகைக் காத்தான்தன் சத்திரத்தில் 

அத்தமிக்கும் போது அரிசிவரும் - குத்தி 

உலையிலிட ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம் 

இலையிலிட வெள்ளி எழும். 

                                                            காளமேகப்புலவர்


திரண்ட கருத்து:

                           அலைகள் ஒலிக்கின்ற கடல்சூழ்ந்த நாகையில் உள்ள காத்தான் சத்திரத்தில் நாட்டுவளம் அரிசி வரும்; உணவு தயாரானதும் சோற்றை இலையிலிட வானில்குறையும்போதும் வெள்ளிநிலவைப் போல மின்னும்.

மையக்கருத்து:

                நாகையில் உள்ள காத்தான் சாத்திரத்தில் உணவு பரிமாறும் முறை, வறட்சியிலும் உணவிடும் பண்பு ஆகியவற்றைப் பற்றி இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.

தொடை நயம்:

(i) மோனைத்தொடை:


சீரதோறும் அடிதோறும் முதலெழுத்து ஒன்றிவரத் தொடுப்பது மோனை.

த்துக்கடல்       -   காத்தான்தன்

லையிலிட       -    ரடங்கும்

த்தமிக்கும்      -     ரிசிவரும்

(ii) எதுகைத்தொடை :


சீர்தோறும் ,அடிதோறும் முதலெழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.


த்துகடல் - சத்திரத்தில் அத்தமிக்கும்


(iii) இயைபுத்தொடை:

               அடிதோறும் இறுதியில் உள்ள எழுத்தோ, அசையோ, சீரோ ஒன்றி வருவது இயைபு.

  அன்னம், எழும்

அணி நயம்:

காளமேகப்புலவர் இருபொருளில் இச்செய்யுளைப் பாடியுள்ளதால் இரட்டுறமொழிதலணி  வந்துள்ளது.


 சந்த நயம்:

                ஈற்றடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய் வந்துள்ளதால் வெண்பா.

 

2 1 . கவிதை 


கிடைத்த உணவில் ஒரு பங்கை 

உடன் வரும் நாய்க்கு தந்தாளே

 உயிர்கள் மீது அன்போடு 

உலகம் போற்ற வாழ்ந்தாளே..



2 2  .

 உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது. குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.

                                                 விண்ணப்பக் கடிதம்


அனுப்புநர்

                   அ.தமிழழகன், 

                  15. வெற்றி நகர்,

                     தஞ்சாவூர்,


பெறுநர்

            உணவுப் பாதுகாப்பு ஆணையர்,  

             உணவுப் பாதுகாப்பு ஆணையம், 

              சென்னை.


மதிப்பிற்குரிய ஐயா,


பொருள்: உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் உள்ள உணவு விடுதியின் மீது நடடிவக்கை எடுக்க வேண்டுதல் சார்பு.


          வணக்கம். நான் எனது நண்பனுடன் கடந்த வாரம் தஞ்சாவூர் நூலகத்திற்கு அருகில் உள்ள உணவு விடுதியில் மதிய உணவு உண்டேன். விலை கூடுதலாக இருந்தது. உணவும் சுத்தமாகத் தயாரிக்கப்படவில்லை. விடுதியிலிருந்து வெளியே வருவதற்கு முன்பாகவே என் நண்பனுக்கு மயக்கம் வந்தது. மருத்துவரிடம் என் நண்பனை அழைத்துச் சென்றேன். அவன் உண்ட உணவில் கோளாறு இருந்ததாக மருத்துவர் கூறினார். ஆகவே, அந்த உணவுவிடுதியின் மீது தக்க நடவடிக்கை எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இணைப்பு :- 1) மருத்துவரின் சான்று. 

                            2) விடுதி விலை ரசீது                                  .


                                                                இப்படிக்கு, உண்மையுள்ள,

இடம்: தஞ்சாவூர்,                                    அ.தமிழழகன்   

 நாள்: 1 6 .1 2 .2021                                                                              .    

உறைமேல் முகவரி

                            பெறுநர்

                                          உணவுப் பாதுகாப்பு ஆணையர்,

                                            உணவுப் பாதுகாப்பு ஆணையம், 

                                                                        சென்னை.


2  3 .கோபல்லபுரத்து மக்கள்

முன்னுரை

ü  பசித்த வேளையில் வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற நேயம் கிராமத்து விருந்தோம்பல்.

ü   கரிசல் இலக்கியத்தை நிலை நிறுத்தியவர் கி.ராஜநாராயணன்.

ü  கோபல்லபுரத்து அன்னமய்யா விருந்தோம்பலின் சான்று.

தேசாந்திரியின் சோர்வும் தீர்வும்

ü  சுப்பையாவின் புஞ்சையில் அருகு எடுக்கும் வேலை.

ü  அன்னமய்யா கூட்டி வந்த ஆள் சோர்வாக இருந்தான்.

ü   அவன் யார் என சுப்பையா கேட்க வரட்டும் அவன் வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி நாமும் குடிப்போம் என்றான்

ü   கொத்தாளி லாட் சன்னியாசி போல் உடை அணிந்து இருந்தான் அவ்வாலிபன்.

ü   குடிக்கத் தண்ணீர் கேட்ட அவனுக்கு நீச்சுத்தண்ணி வழங்கப்பட்டது.

ü  வேப்பமர நிழலே சொர்க்கமாக அயர்ந்து விட்டான். அன்னமய்யாவின் கருணை

ü  கள்ளியை ஒழித்தது போல் அருகை ஒழிக்க முடியவில்லையே என கவலைப்பட்டார்கள் சம்சாரிகள்.

ü  விழித்தவன் தன்பெயர் பரமேஸ்வரன் என்றும் தற்போதைய பெயர் மணி என்றும் சொன்னான்.

ü   உருண்டை கம்மஞ்சோற்றை இடது கையில் வைத்து, பள்ளம் பறித்து அதில் துவையல் வைத்தார்கள்.

ü   அந்தக் ஒரு கால் கடுமையான பசியிலும் அரை உருண்டைதான் சாப்பிட்டான்.

ü  திரும்பவும் படுத்து அமைதியாகக் கண்மூடிக் கிடந்தார்.

முடிவுரை

ü  அதிகாலை வேளையில் களைத்து வந்தவருக்குக் கரிசல் இதயங்கள் காட்டிய அன்பு கண்முன் படமாகிறது.

ü  கருணையுடன் மணி பார்த்த பார்வையில் நன்றி தெரிகிறது.

ü  கஞ்சிக்கலயம், சோற்றின் மகுளி துவையல், கம்மஞ்சோறு இவற்றில் கரிசல்மண் மணக்கிறது



2 4. மாநில அளவில் நடைபெற்ற "மரம் இயற்கையின் வரம்" என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.


                                               வாழ்த்து மடல்                                                          

                                                                                    15,வெற்றி நகர், 

                                                                                     தஞ்சாவூர், 

                                                                                    16.12.2021.

அன்புள்ள தோழனுக்கு,


       நலம், நலமறிய ஆவல். 'விளையும் பயிர் முளையிலேயே தெரியும்' என்பார்கள். நீயும் சிறுவயதிலிருந்தே கவிதை, கட்டுரை என ஆர்வம் செலுத்தி வந்தாய். அதன் பலனாக மாநில அளவில் நடைபெற்ற "மரம் இயற்கையின் வரம்" என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றுள்ளாய். என் மனமார்ந்த வாழ்த்துகள். முயற்சி திருவினையாக்கும். உன் முயற்சிகளும் உன்னை வெற்றியடைய செய்துவிட்டன. இதைப்போல இன்னும் பல வெற்றிகள் பெற வேண்டும். தொடர்ந்து முயற்சி செய்; பயிற்சி செய்.


                                                                      இப்படிக்கு, உன் அன்பு தோழன், 

                                                                               அ.தமிழழகன்.


உறைமேல் முகவரி:

        பெறுநர்

                         த.அமுதன்,

                        24, காந்தி தெரு,

                        சேப்பாக்கம்

  ஆக்கம் :  MAZHALKAVI BLOGSPOT.COM 

 pdf download click here

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

poetry

14.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

#BIRTHDAY#MARRIAGE#BETTER TOGETHER#OMMURUGA#CHRISTMAS# NEWYEAR#PONGAL#LOVERSDAY#SHOPLOGOS

தொழில்நுட்ப வளர்ச்சியின் உச்சத்தை தொட்ட ஒளிரும் விளக்குகள் வரிசையில் முதன்மையான இடத்தை பிடித்து இன்றைய உலகின் ஒளியாய் திகழும் நியான் விளக்கு...