புதன், 15 டிசம்பர், 2021

10 வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு - 2 மதிப்பெண்கள் : 50

 

                         தமிழ் அலகுத்தேர்வு -

                                 (இயல் 2,3 )

வகுப்பு: 10                         மதிப்பெண்கள் : 50

பாடம்: தமிழ்                         நேரம் 1.30

                             பகுதி-1

I .அனைத்து வினாக்களுக்கும் விடையளி 1 X 5= 5

 

1. "உனக்குப் பாட்டுகள் பாடுகிறோம் உனக்குப் புகழ்ச்சிகள் கூறுகிறோம்" - பாரதியின் இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள நயங்கள் யாவை?

. உருவகம், எதுகை

. மோனை, எதுகை

. முரண், இயைபு

. உவமை, எதுகை

2.சிந்துக்கு தந்தை யார் ?

. பாரதிதாசன்

. கம்பர்

. இளங்கோவடிகள்

. பாரதியார்


3. வினைத்தொகையை கண்டறி ....?

. மார்கழித்திங்கள்

. சிவப்பு சட்டை

. வீசுதென்றல்

. செந்தமிழ்


4.பெரிய மீசை சிரித்தார் - வண்ணச் சொல்லுக்கான தொகையின் வகை எது?

. பண்புத்தொகை

. உவமைத்தொகை

. அன்மொழித்தொகை

. உம்மைத்தொகை 

 

5.தொகைநிலைத்தொடர் எத்தனை வகைப்படும் ?

. 6

. 8

. 9

. 5

 

6. அறிஞருக்கு நூல், அறிஞரது நூல் ஆகிய சொற்றொடர்களில் பொருளை வேறுபடுத்தக் காரணமாக அமைவது.

. வேற்றுமை உருபு

. எழுவாய்

. உவம உருபு

. உரிச்சொல் .

 

7. வருக!வருக!வருக! என்பது ........................

.அடுக்குத்தொடர்

. இரட்டைக்கிளவி

.பெயரெச்சம்

. வினைமுற்று


                        பகுதி – 2 பிரிவு-1

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி 2 X 2 = 4

8 .விடைக்கேற்ற வினா அமைக்க :

1. “நாடும் மொழியும் நமதிரு கண்கள்” என்றவர் மகாகவி பாரதியார்.

2.திருந்திய மக்களை மற்ற உயிரினின்றும் பிரித்துக் காட்டுவது மொழி.

9.  மயலுறுத்தும்- பொருள் தருக.

கட்டாய வினா 10க்கு விடையளிக்கவும்

10. 'பல்லார் ' எனத் தொடங்கும் குறளை எழுதுக.

                        பிரிவு-2

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி 2 X 2 = 4

11 தொகைநிலைத்தொடர் என்றால் என்ன ?

12 அகராதியைக் கண்டு -பொருள் எழுதுக.

1. அகன்சுடர் 2. திருவில்

13.பகுபத உறுப்பிலக்கணம் தருக. 1.பொறித்த

                        பகுதி - 3 பிரிவு-1

எவையேனும் ஒரு வினாவிற்கு மட்டும் 

சுருக்கமாக விடையளி 1 X 3 = 3

14. ‘கலைச்சொல் அறிவோம் :

1.Tornado - ……………

2.Sea Breeze ………

3.Ancient literature……

15.கீழ்க்காணும் பத்தியைப் படித்து வினாக்களுக்கு. விடை எழுதுக.

மின் ஆற்றலை, வளி மிகின் வலி இல்லை (புறம்,51) என்று ஐயூர் முடவனார் சிறப்பித்துள்ளார். இது போன்றே மதுரை இளநாகனார் கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்று வேகத்தைப் பற்றக் குறிப்பிட்டுள்ளார்..

1.வளி மிகின் வலி இல்லை என்றவர் யார்?

2.கடுங்காற்று மணலைக் கொண்டு வந்து சேர்க்கிறது என்றவர் யார் ?

3.உரைப்பத்திக்கு ஏற்ற தலைப்பு தருக?

                                பிரிவு.2

எவையேனும் ஒரு வினாவிற்கு மட்டும் சுருக்கமாக விடையளிக்க. 1 X 3 = 3

16.காற்று எவ்வாரெல்லாம் வீச வேண்டும் என்று பாரதியார் கூறுகிறார் ?

17. "பண்என்னாம்" எனத் தொடங்கும் குறளை பிழையின்றி எழுதி குறளில் வரும் அணியை - எழுதுக.

                             பிரிவு-3

எவையேனும் ஒரு வினாவிற்கு மட்டும் சுருக்கமாக விடையளி 1 X 3 = 3

18. பொருளுக்கேற்ற அடிமைப் பொருத்துக

உயிரை விடச்சிறப்பாகப் பேணிக்காக்கப்படும்

ஒழுக்கத்தின்எய்துவர் மேன்மை

ஊரின் நடுவில் நச்சுமரம் பழுத்தது போன்றது

உயிரினும் ஓம்பப்படும்

ஒக்கத்தின்வழி உயர்வு அடைவர்


நடுஊரில் நச்சு மரம் பழுத்தற்று


19. கொடுப்பதுவம் துய்ப்பதுவும் இல்லார்க்கு அடுக்கிய

கோடி உண்டாயினும் இல் -இக்குறளில் வரும் அளபெடையை விளக்கி எழுதிக.

                       பகுதி - 4.

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு

மட்டும் விடையளி 2 X 5 = 10

20 . உவமை அணி விளக்கும் ?

21.மொழி பெயர்க்க:

The Golden Sun gets up early in the morning and starts it's bright rays to fade away the dark. The milkey clouds start their wandering. The colourful birds start twitting their morning melodies in percussion. The cute butterflies dance around the flowers. The flowers fragrances fills the breeze, gently blows everywhere and makes. every thing pleasant.


22.காட்சியைக் கண்டு கவிதை எழுதுக.




              பகுதி-5

எவையேனும் இரண்டு வினாக்களுக்கு விடையளி.

 2 X 8 = 16

23.உணவுவிடுதியில் வழங்கப்பட்ட தரமற்ற உணவு மற்றும் விலை உயர்வு பற்றி உரிய சான்றுகளுடன்  உணவுப்பாதுகாப்பு ஆணையருக்கு  புகார் கடிதம் எழுதுக ?

24.அன்னமய்யா என்னும் பெயருக்கும் அவரின் செயலுக்கம் உள்ள பொருந்தப்பாடு - கோபல்லபுரத்து மக்கள் ?

25. மரம் இயற்கையின் வரம் - என்னும் தலைப்பில் வாழ்த்துமடல் எழுதுக.


pdf download


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிறார்திரைப்படம்

 Download  Click here