பத்தாம் வகுப்பு தமிழ் அலகுத்தேர்வு-2
விடைக் குறிப்புகள்
1 1. ஆ.வினைத்தொகை
2 இ. பாரதியார்
3 ஆ. iii,i,iv,ii
4 ஆ.குறிப்பு பெயரெச்சம்
5. ஆ. மோனை ,எதுகை
6 அ. வேற்றுமை உருபு
7 ஈ. கூவிளம் தேமா மலர்
8 1.உடலைப் பாதுகாத்து வாழ்நாளை
நீடிப்பது எது ?
2. பாடுக்கொரு புலவன் என்று
பாராட்டப்படுபவர் யார் ?
9. உரைநடையும் கவிதையும் இணைந்து யாப்பு
கட்டுகளுக்கு அப்பாற்பட்டு உருவாக்கப்படும் கவிதை வடிவம் வசன கவிதை எனப்படுகிறது .
1௦.முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை
இன்மை
புகுத்தி விடும்
11.முற்று பெறாத வினை பெயர்ச்சொல்லை கொண்டு
முடிவது பெயரெச்சத்தொடர் எனப்படும், (எ.கா) கேட்ட பாடல்
12. வினைத்தொகை - காலையில் எழுகதிர் புன்னகையுடன்
வான வீதியில் புறப்பட்டது.
13 .தம்பி விடுமுறைக்கு வீடு
வந்தான்
14 .திருவில் - வானவில்
ஆர்கலி – கடல் , மழை
15 நவீன
இலக்கியம்
சுழல்காற்று
16
·
மகரந்த தூளை சுமந்துகொண்டு வா
·
இனிய வாசனையுடன் வா
·
இல்லைகளின் மீதும் நீரலைகள் மீதும் உராய்ந்து
·
ப்ராண ரசத்தை கொண்டு வா
·
உயிர் நெருப்பை காத்து நன்றாக வீசு
·
மெதுவாக நல்ல லயத்துடன் நின்று வீசு..
17 .
பெயர் :சுப்ரமணிய
பாரதியார்
வாழ்த்த காலம் :
1882-1921
ஊர் : எட்டயபுரம்
சிறப்புக்கள் : கவிஞர்
,இதழாளர்,கட்டுரை
ஆசிரியர்
படைப்புகள் : கண்ணன் பாட்டு,
குயில்பாட்டு
பாஞ்சாலி சபதம்
புதிய ஆத்திச்சுடி ,
பாப்பா பாட்டு.
18.
1.புதுப்பிக்கக்கூடிய ஆற்றல் வாளமான என்னை பயன்படுத்தினால் மின்னாற்றலைஉருவாகும்
போது நிலக்கரியின் பயன்பாடு குறைந்து கனிம வளங்கள் பாதுகாக்கப்படும்
2.காற்றுள்ள போதே மின்சாரம் எடுத்துக்கொள்.
3. மின் ஆற்றல்
19.
சோலைக்காற்று :
நிழல் தருகிற மரங்களும், பறவையினங்களும், நீர்நிலைகளும்
இருக்கும் இடமே எனது இருப்பிடமாகும்.
மின்விசிறி :
இருள் சூழ்ந்த அறைகளும், தூசிகள் நிறைந்த அறைகளுமே யான் வாழும் இடமாகும்.
சோலைக்காற்று :
மாலைநேரங்களில் கலந்து உறவாட மக்களும், காதலர்களும் என் காற்றைப் பெற்ற
மகிழ்ந்து விளையாடச் சிறுவர்களும் வருவர்.
மின்விசிறி:
உழைத்துக் களைத்தவர்களும், பணியில்
இருந்து திரும்பி வருபவர்களும், வீட்டுப்
பணி செய்து களைத்துப் போனவர்களும் வருவர். அவர்களுக்காக வெப்பக்காற்றைக் குளிர்ந்த
காற்றாக மாற்றித் தருவேன்.
சோலைக்காற்று
:காதலர்களிடையே என்னைத் தூது விடுவதாகக் கவிஞர்கள் இனிய பாடலாகப் பாடி மகிழ்வர்.
மின்விசிறி: நான், வணிக ரீதியாகவும்
பயன்படுத்தப்படுகிறேன்.
சோலைக்காற்று
:பாடும் குயிலும், ஆடும்
மயிலும் என்னை விரும்பி, என்னிடம்
அடைக்கலமாய் வரும்.
மின்விசிறி : சில
சமயம் தூசிகளும் மின்சாரமும் என் இயக்கத்தை முடக்கி விடும். நான் ஒரு
கூண்டுக்கிளி. நீயோ உலாவரும் இனிய தென்றல்.
20 .
வ.எண் |
சீர் |
அசை |
வாய்பாடு |
1 |
எப்/பொருள் |
நேர்
நிரை |
கூவிளம் |
2 |
எத்/தன்/மைத் |
நேர்
நேர் நேர் |
தேமாங்காய் |
3 |
தா/யினும் |
நேர்
நிரை |
கூவிளம் |
4 |
அப்/பொருள்
|
நேர் நிரை
|
கூவிளம் |
5 |
மெய்ப்/பொருள் |
நேர்
நிரை |
கூவிளம் |
6 |
காண்/ப |
நேர்
நேர் |
தேமா |
7 |
தறிவு |
நிரைபு |
பிறப்பு |
21
உவமை
அணி
இக்குறளில் பயின்று வரும் அணி உவமையணி ஆகும்.
அணி விளக்கம் : உவமை ஒரு வாக்கியமாகவும் உவமேயம் ஒரு வாக்கியமாகவும் அமைந்து இடையில் போல, போன்ற என்னும்
உவம உருபுகள் பயின்று வருவது உவமையணி ஆகும்.
அணி பொருத்தம் :
உவமை : வேலொடு நின்றான் இரு என்றது
உவமேயம் : கோலொடு நின்றான் இரவு.
உவம உருபு: போலும்.
22.
(அல்லது)
22.
"கத்துகடல் சூழ்நாகைக்
காத்தான்தன் சத்திரத்தில்
அத்தமிக்கும் போது அரிசிவரும் - குத்தி
உலையிலிட ஊரடங்கும் ஓர்அகப்பை அன்னம்
இலையிலிட வெள்ளி எழும்.
காளமேகப்புலவர்
திரண்ட கருத்து:
அலைகள் ஒலிக்கின்ற கடல்சூழ்ந்த
நாகையில் உள்ள காத்தான் சத்திரத்தில் நாட்டுவளம் அரிசி வரும்; உணவு தயாரானதும் சோற்றை
இலையிலிட வானில்குறையும்போதும் வெள்ளிநிலவைப் போல மின்னும்.
மையக்கருத்து:
நாகையில் உள்ள காத்தான் சாத்திரத்தில்
உணவு பரிமாறும் முறை, வறட்சியிலும் உணவிடும் பண்பு ஆகியவற்றைப் பற்றி
இப்பாடலில் கூறப்பட்டுள்ளது.
தொடை நயம்:
(i) மோனைத்தொடை:
சீரதோறும் அடிதோறும் முதலெழுத்து ஒன்றிவரத்
தொடுப்பது மோனை.
கத்துக்கடல்
- காத்தான்தன்
உலையிலிட
- ஊரடங்கும்
அத்தமிக்கும்
- அரிசிவரும்
(ii) எதுகைத்தொடை :
சீர்தோறும் அடிதோறும் முதலெழுத்து அளவொத்திருக்க இரண்டாம் எழுத்து ஒன்றி வருவது எதுகை.
கத்துகடல் - சத்திரத்தில்
அத்தமிக்கும்
(iii) இயைபுத்தொடை:
அடிதோறும் இறுதியில் உள்ள எழுத்தோ, அசையோ, சீரோ ஒன்றி வருவது இயைபு.
அன்னம், எழும்
அணி நயம்:
காளமேகப்புலவர் இருபொருளில் இச்செய்யுளைப் பாடியுள்ளதால் இரட்டுறமொழிதலணி வந்துள்ளது.
சந்த நயம்:
ஈற்றடி முச்சீராய் ஏனைய அடிகள் நாற்சீராய் வந்துள்ளதால் வெண்பா.
23 . கவிதை
கிடைத்த உணவில் ஒரு பங்கை
உடன் வரும் நாய்க்கு தந்தாளே
உயிர்கள் மீது அன்போடு
உலகம் போற்ற வாழ்ந்தாளே..
24 அ
பொன்போன்ற
சூரியன், அதிகாலையில்
தோன்றிப் பிரகாசமான கதிர்களைக் கொண்டு, உலக இருளைப் போக்குகிறது. பால்
மேகங்கள் அலையத் தொடங்குகின்றன. வண்ணமயமான பறவைகள், தங்கள் காலை
இசையால் மகிழ்ச்சி அடைகின்றன. அழகிய பட்டாம்பூச்சிகள், மலர்களைச்
சுற்றி நடனமாடுகின்றன. மலர்களின் வாசனை, தென்றல் காற்றை நிரப்புகின்றது.
காற்று, எல்லா
இடங்களிலும் வீசி மகிழ்ச்சியூட்டுகிறது.
(அல்லது)
2 24.ஆ
உப்பிட்டவரை உள்ளளவும் நினை .
அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு
ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்
விருந்தும் மருந்தும் மூன்று நாள்
25.
கோபல்லபுரத்து மக்கள்
முன்னுரை
ü பசித்த வேளையில்
வந்தவர்களுக்குத் தம்மிடம் இருப்பதையே பகிர்ந்து கொடுக்கிற நேயம் கிராமத்து
விருந்தோம்பல்.
ü கரிசல் இலக்கியத்தை நிலை
நிறுத்தியவர் கி.ராஜநாராயணன்.
ü கோபல்லபுரத்து அன்னமய்யா
விருந்தோம்பலின் சான்று.
தேசாந்திரியின்
சோர்வும் தீர்வும்
ü சுப்பையாவின் புஞ்சையில் அருகு
எடுக்கும் வேலை.
ü அன்னமய்யா கூட்டி வந்த ஆள்
சோர்வாக இருந்தான்.
ü அவன் யார் என சுப்பையா கேட்க
வரட்டும் அவன் வயிற்றுக்குக் கஞ்சி ஊற்றி நாமும் குடிப்போம் என்றான்
ü கொத்தாளி லாட் சன்னியாசி போல்
உடை அணிந்து இருந்தான் அவ்வாலிபன்.
ü குடிக்கத் தண்ணீர் கேட்ட
அவனுக்கு நீச்சுத்தண்ணி வழங்கப்பட்டது.
ü வேப்பமர நிழலே சொர்க்கமாக
அயர்ந்து விட்டான். அன்னமய்யாவின் கருணை
ü கள்ளியை ஒழித்தது போல் அருகை
ஒழிக்க முடியவில்லையே என கவலைப்பட்டார்கள் சம்சாரிகள்.
ü விழித்தவன் தன்பெயர்
பரமேஸ்வரன் என்றும் தற்போதைய பெயர் மணி என்றும் சொன்னான்.
ü உருண்டை கம்மஞ்சோற்றை இடது
கையில் வைத்து, பள்ளம் பறித்து அதில் துவையல்
வைத்தார்கள்.
ü அந்தக் ஒரு கால் கடுமையான
பசியிலும் அரை உருண்டைதான் சாப்பிட்டான்.
ü திரும்பவும் படுத்து
அமைதியாகக் கண்மூடிக் கிடந்தார்.
முடிவுரை
ü அதிகாலை வேளையில் களைத்து
வந்தவருக்குக் கரிசல் இதயங்கள் காட்டிய அன்பு கண்முன் படமாகிறது.
ü கருணையுடன் மணி பார்த்த
பார்வையில் நன்றி தெரிகிறது.
ü கஞ்சிக்கலயம், சோற்றின் மகுளி துவையல், கம்மஞ்சோறு இவற்றில் கரிசல்மண்
மணக்கிறது
(அல்லது )
25. ஆ
ஒழுக்கத்தின் சிறப்பு
ஒழுக்கம் எல்லாருக்கும் சிறப்பைத் தருவதால், அந்த ஒழுக்கத்தை உயிரினும் மேலானதாகப் போற்றிக் காத்தல் வேண்டும்.
ஒழுக்கத்துடன் வாழ்பவனே மேன்மை அடைவான். ஒழுக்கம் தவறுபவர் பழியை அடைவர்.
பல நூல்களைக் கற்று அறிந்தவராக இருந்தாலும் உலகத்தோடு பொருந்தி வாழ்வதைக் கல்லாதவர், அறிவு இல்லாதவராகவே கருதுவர் என வள்ளுவர் கூறுகிறார்.
தம்மைவிட அறிவு முதலியவற்றில் சிறந்த பெரியாரைப் பேணித் தமக்குச் சுற்றமாக ஏற்றுக் கொள்ளுதலே அரிய வலிமைகளுள் எல்லாம் சிறந்த வலிமையாகும்.
தக்க வழிகளை ஆராய்ந்து கூறும் பெரியாரை, தன்னைச் சூழ்ந்திருக்குமாறு துணையாக்கிக் கொள்ள வேண்டும்.
குற்றம் கண்டபோது கடிந்து கூறும் பெரியாரைத் துணையாகப் பெறாத அரசன் தன்னால் கெடுக்கும் பகைவர் இல்லாமலும் தானே கெட்டு அழிவான். நற்பண்புடைய பெரியோரின் துணையைக் கைவிடுவது, பலரைப் பகைத்துக் கொள்வதைவிடப் பத்து மடங்குத் தீமை உடையதாகும்.
26.உணவு விடுதியொன்றில் வழங்கப்பட்ட உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும் இருந்தது. குறித்து உரிய சான்றுகளுடன் உணவுப் பாதுகாப்பு ஆணையருக்குக் கடிதம் எழுதுக.
கடிதம்
அனுப்புநர்
அ.தமிழழகன்,
15. வெற்றி நகர்,
தஞ்சாவூர்,
பெறுநர்
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப்
பாதுகாப்பு ஆணையம்,
சென்னை.
மதிப்பிற்குரிய ஐயா,
பொருள்: உணவு தரமற்றதாகவும் விலை கூடுதலாகவும்
உள்ள உணவு விடுதியின் மீது நடடிவக்கை எடுக்க வேண்டுதல் சார்பு.
வணக்கம். நான் எனது நண்பனுடன்
கடந்த வாரம் தஞ்சாவூர் நூலகத்திற்கு அருகில் உள்ள உணவு விடுதியில் மதிய உணவு
உண்டேன். விலை கூடுதலாக இருந்தது. உணவும் சுத்தமாகத் தயாரிக்கப்படவில்லை.
விடுதியிலிருந்து வெளியே வருவதற்கு முன்பாகவே என் நண்பனுக்கு மயக்கம் வந்தது.
மருத்துவரிடம் என் நண்பனை அழைத்துச் சென்றேன். அவன் உண்ட உணவில் கோளாறு இருந்ததாக
மருத்துவர் கூறினார். ஆகவே, அந்த உணவுவிடுதியின் மீது தக்க நடவடிக்கை
எடுக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
இணைப்பு :- 1) மருத்துவரின் சான்று.
2) விடுதி விலை ரசீது
.
இப்படிக்கு, உண்மையுள்ள,
இடம்: தஞ்சாவூர்,
அ.தமிழழகன்
நாள்: 23 .1 2 .2021
.
உறைமேல் முகவரி
பெறுநர்
உணவுப் பாதுகாப்பு ஆணையர்,
உணவுப் பாதுகாப்பு ஆணையம்,
சென்னை.
2 6. மாநில அளவில் நடைபெற்ற
"மரம் இயற்கையின் வரம்" என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி
பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.
வாழ்த்து மடல்
15,வெற்றி நகர்,
தஞ்சாவூர்,
23.12.2021.
அன்புள்ள தோழனுக்கு,
நலம், நலமறிய ஆவல். 'விளையும் பயிர் முளையிலேயே
தெரியும்' என்பார்கள். நீயும்
சிறுவயதிலிருந்தே கவிதை, கட்டுரை என ஆர்வம் செலுத்தி வந்தாய். அதன் பலனாக
மாநில அளவில் நடைபெற்ற "மரம் இயற்கையின் வரம்" என்னும் தலைப்பிலான
கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்றுள்ளாய். என் மனமார்ந்த
வாழ்த்துகள். முயற்சி திருவினையாக்கும். உன் முயற்சிகளும் உன்னை வெற்றியடைய
செய்துவிட்டன. இதைப்போல இன்னும் பல வெற்றிகள் பெற வேண்டும். தொடர்ந்து முயற்சி
செய்; பயிற்சி செய்.
இப்படிக்கு, உன் அன்பு தோழன்,
அ.தமிழழகன்.
உறைமேல் முகவரி:
பெறுநர்
த.அமுதன்,
24, காந்தி தெரு,
சேப்பாக்கம்,
சென்னை.
PDF. DOWNLOAD
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக